நடிகர் விஷாலின் கழுத்தில் "மார்க்கை" பார்த்தீர்களா?
சென்னை: நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் என அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் அவருடைய கழுத்தில் ஏதோ மார்க் இருக்கிறதே என ரசிகர்கள் கவனிக்க தொடங்கிவிட்டனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு மதகஜராஜா என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. இது 2013 ஆம் ஆண்டு திரைக்கு வர இருந்தது. ஆனால் சில பிரச்சினைகளால் அந்த படம் வெளியாவதில் சிக்கல் எழுந்தது.

இந்த படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கியிருந்தார். இதில் விஷால், வரலட்சுமி, சந்தானம், அஞ்சலி போன்றோர் நடித்திருந்தனர். இந்த படம் தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் பண்டிகையையொட்டி 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்கான பிரஸ்மீட் நேற்று நடந்தது. இதில் சுந்தர் சி, விஜய் ஆண்டனி, குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது விஷால் பேசிய போது அவருடைய கைகள் நடுங்கின. அவரால் சில வார்த்தைகள் கூட மைக்கில் பேச முடியாமல் குரல் தழுதழுத்தது.
இதை பார்த்த ரசிகர்கள் விஷாலுக்கு என்னதான் ஆச்சு என கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் விஷாலை பத்திரமாக பிடித்து அங்கிருந்த நாற்காலியில் விஜய் ஆண்டனி உட்கார வைத்தார். அவருக்கு என்ன நிகழ்ந்தது என்பது குறித்து இயக்குநர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
இந்த மதகஜராஜா படத்தின் சூட்டிங்கின் போது ஒரு இடத்தில் விஷால் தலைகீழாக குதித்தார். அப்போது தலை நேராக தரையில் அடித்துவிட்டது. இதனால் அவரது கழுத்து பக்கத்தில் இருந்து படக் என ஒரு சப்தம் கேட்டது. இதனால் நான் பதறி போய்விட்டேன். பிறகு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தோம்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நன்றாக ஆகிவிட்டார் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அது போல் அவருக்கு வைரஸ் காய்ச்சலால் அதிக குளிர் ஏற்பட்டு கைகளில் நடுக்கம் ஏற்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் விஷாலின் கழுத்தில் ஏதோ ஒரு தழும்பு இருந்தது. இந்த தழும்பு எப்படி வந்தது என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. காய்ச்சல் ஏற்பட்டால் எப்படி நடுக்கம் ஏற்படும் என கேள்வி எழுப்புகிறார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications