சென்னையில் பேசிக்கொண்டிருந்த போதே திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த பெண் எஸ்ஐ.. தீவிர விசாரணை
சென்னை: சென்னை பெரவள்ளூர் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் ஜெயசித்ரா. இவர் பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது அக்காள் வீட்டிற்கு சென்ற போது, அங்கு திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை பெரவள்ளூர் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்த 49 வயதாகும் ஜெயசித்ரா, 1997-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்தவர். கடந்த 27 வருடங்களாக காவல்துறையில் பணியாற்றி வந்தார். தற்போது சென்னை பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார். ஜெயசித்ரா திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் தனியாகவே வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, அயனாவரத்தில் வசிக்கும் தனது சொந்த அக்காள் பாண்டிசெல்வி வீட்டுக்கு சென்று, அவருடன் பேசிக் கொண்டிருந்தார். திடீரென சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா சுருண்டு விழுந்தார். அதிர்ச்சி அடைந்த அவரது அக்காள் குடும்பத்தினர், ஜெயசித்ராவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெயசித்ரா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
சர்க்கரை அளவு அதிகரித்து, இதயத்துடிப்பு குறைந்ததால் அவர் உயிரிழந்ததாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அயனாவரம் போலீசார், ஜெயசித்ரா உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு இறப்பிற்கான முழு விவரம் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பெண் சப் இன்ஸ்பெக்டர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சென்னை காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications