சென்னையில் கல்யாணம் செய்யாமல் 25 வயது நடிகையுடன் ஒரே வீட்டில் வாழ்ந்த 21 வயது இளைஞர்.. இருந்த கோலம்
சென்னை: சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்த 21 வயதாகும் சந்துரு என்பவர், உணவு டெலிவரி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் ஆவடி பகுதியைச் சேர்ந்த 25 வயதான டி.வி. துணை நடிகையை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் உணவு டெலிவரி ஊழியர் நீண்ட நேரமாக போனை எடுக்கவே இல்லை.. இதனால் நேரில் வந்து பார்த்த துணை நடிகை ஆடிப்போனார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் சம்பவங்கள் அண்மை காலங்களில் அதிகரித்து வருகிறது. ஆனால் கருத்து வேறுபாடுகள் வரும் போது, அதை கையாளத்தெரியாமல் தவறான முடிவெடுக்கிறார்கள். உணர்ச்சி வேகத்திற்கு மட்டும் மதிப்பளித்து சேர்ந்து வாழும் சிலர், அதே உணர்ச்சி வேகத்தில் வாழ்க்கையை பற்றி புரிதல் இல்லாமல் தவறான முடிவெடுக்கிறார்கள். வெறும் நான்கு நாட்களில் நான்கு இடங்களில் காதல் ஜோடிகளின் செயல்கள் பெற்றோரையும், வாழ்க்கை துணையையும், நண்பர்களையும் ஆடிப்போக வைத்துள்ளது. அந்த வரிசையில் சென்னையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சென்னையின் புறநகர் பதியான குன்றத்தூர் பகுதியை சேர்ந்த 21 வயதாகும் சந்துரு என்பவர் ஆன்லைனில் உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு ஆவடியை அடுத்த கோவில்பதாகை கிருபா நகரில் தனியாக வசித்து வரும் 25 வயதான டி.வி. துணை நடிகை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
துணை நடிகைக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, குழந்தை இருக்கிறது.. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதற்கிடையில் சுந்துருவுடன் ஏற்பட்ட காதலால் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கடந்த 4 மாதமாக ஆவடியில் ஒரே வீட்டில் கணவன்-மனைவிபோல் வசித்து வந்தார்களாம். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 4-ந்தேதி இரவு துணை நடிகை, டி.வி. தொடர் ஒன்றின் படப்பிடிப்புக்காக வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றாராம். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும் சண்டைகளுக்கு நடுவில் துணை நடிகை படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றுவிட்டார்.
அதன்பிறகு பலமுறை துணை நடிகைக்கு சந்துரு போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த சந்துரு, வீட்டில் உள்ள மின்விசிறியில் புடவையால் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். மறுநாள் காலை வீட்டுக்கு வந்த துணை நடிகை, சந்துரு இருந்த கோலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications