சென்னை கொளத்தூர் சரஸ்வதிக்கு பல ஆண்களுடன் பழக்கம்.. ஃபுல் போதை.. கள்ளக்காதலன் தந்த வாக்குமூலம்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்த கணேசன் மூர்த்தி லாரி டிரைவர் ஆவார். இவரது மனைவி சரஸ்வதி. சரஸ்வதிக்கு மது போதை பழக்கமும், புகை பிடிக்கும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததாம். இவர் வீட்டில் இருந்த கோலத்தை கண்டு போலீஸாரே ஆடிப்போனார்கள்.. யார் அந்த கள்ளக்காதலன் என்று விசாரித்த போது தான் உண்மை தெரியவந்தது.
கள்ளக்காதலும், அதன் பின்னர் நடக்கும் குற்றச்சம்பவங்களும் அண்மை காலத்தில் அதிகரித்துவிட்டது. கடந்த மூன்று நாளில் மட்டுமே மூன்று சம்பவம் நடந்துள்ளது. இரண்டு சம்பவம் ஆணுக்கு எதிராகவும், ஒரு சம்பவம் பெண்ணுக்கு எதிராகவும் நடந்துள்ளது. அதுவும் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் மட்டுமே நடந்துள்ளது.

மது பழக்கம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்த கணேசன் மூர்த்தி லாரி டிரைவர் ஆக இருக்கிறார். இவரது மனைவி சரஸ்வதிக்கு 32 வயது ஆகிறது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சரஸ்வதிக்கு மது போதை பழக்கமும், புகை பிடிக்கும் பழக்கமும் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் பல ஆண்களுடன் செல்போனில் பேசி வந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சரஸ்வதி, கணவரை விட்டு பிரிந்து சென்னை கொளத்தூர் தனம்மாள் நகர் 1-வது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்திருக்கிறார்.
கள்ளக்காதலன்
இந்த நிலையில் கடந்த ஜூலை 21-ந்தேதி அந்த வீட்டில் சரஸ்வதி, அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். கொளத்தூர் போலீசார் சரஸ்வதி உடலை பிரேதப் பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொளத்தூர்போலீசார் நடத்திய விசாரணையில், சரஸ்வதியுடன் ஆண் ஒருவர் தங்கி இருந்தது தெரியவந்தது. தீவிர விசாரணையில் அவர், சரஸ்வதியின் கள்ளக்காதலன் என்பதும் தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் சரஸ்வதியின் செல்போன் மற்றும் நகைகள் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது.
செல்போன், நகை திருட்டு
எனவே கள்ளக்காதலனே சரஸ்வதியை கொன்று நகை, செல்போனை திருடிச்சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இச்சம்பவம் தொடர்பாக சென்னை அண்ணா நகரில் சலவை நிலையம் நடத்தி வரும் மத்திய பிரதேசம் மாநிலம் கான்பூரை சேர்ந்த 37 வயதாகும் முகமது அன்சாரி என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்தான் சரஸ்வதியை கொலை செய்ததை கண்டுபிடித்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.
ஒரே வீட்டில் வசித்தோம்
போலீசாரிடம் சலவை தொழிலாளி முகமது அன்சாரி கூறுகையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு எனது கடைக்கு சரஸ்வதி வந்தார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டோம். அதன்பிறகு சரஸ்வதி என்னிடம் செல்போனில் அதிக நேரம் பேசி வந்தார். நாளடைவில் எங்களது நட்பு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சரஸ்வதி, கணவருடன் கோபித்துக்கொண்டு கொளத்தூர் வந்தார். பின்னர் நாங்கள் இருவரும் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தோம். அக்கம் பக்கத்தினரையும் அப்படியே நம்ப வைத்தோம்.
சரஸ்வதி அடிக்கடி பல ஆண்களுடன் செல்போனில் பேசி வந்தது அதன்பிறகு தான் எனக்கு தெரியவந்தது. பல ஆண்களுடன் அவளுக்கு தொடர்பு இருந்ததால் அவளுடன் வாழ பிடிக்கவில்லை.. அவளை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி சம்பவத்தன்று இருவரும் மது அருந்தினோம். அவள் போதையில் மயங்கி கீழே படுத்து விட்டாள். அதன்பிறகு நான், அவரது வயிற்றிலும், தலையிலும் மிதித்து கொலை செய்தேன். பின்னர் அவள் அணிந்து இருந்த 3 பவுன் நகை மற்றும் செல்போனை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டேன். எனது சொந்த ஊரான கான்பூருக்கு செல்ல முடிவு செய்திருந்தேன். ஆனால் போலீசார் கைது செய்துவிட்டனர்" இவ்வாறு வாக்குமூலத்தில் அன்சாரி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications