சென்னை பல்லாவரம் பிரபல சைவ ஓட்டலில் நேற்று என்ன நடந்தது? சாம்பார் தந்தும் சாகடிக்கப்பட்ட சூப்பர்வைசர்
சென்னை: சென்னை பல்லாவரத்தில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் கூடுதல் சாம்பார் கேட்டு, சூப்பர்வைசரை அடித்துக் கொன்ற தந்தை மகனை போலீசார் கைது செய்தனர்.. தஞ்சையை சேர்ந்த சூப்பர்வைசர் அருணுக்கு அண்மையில் தான் திருமணம் நடந்திருந்தது.
மது போதையில் உணர்ச்சிவசப்பட்டு செய்யும் சில சம்பவங்கள் அவர்களை மட்டுமல்ல.. அப்பாவிகளையும் மோசமாக பாதிக்கிறது. சென்னை மாநகரில் மதுபோதையில் ஓட்டலுக்கு வரும் சிலர், அங்குள்ள ஊழியர்களிடம் தகராறில் ஈடுபடுவது அடிக்கடி நடக்கிறது. சில சமயங்களில் கொலையில் முடிகிறது.. அப்படியான ஒரு சம்பவம் தான் சென்னை பல்லாவரம் பகுதியில் நடந்துள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையில் புகழ் பெற்ற தனியார் சைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தஞ்சாவூரைச் சேர்ந்த 30 வயதாகும் அருண் என்பவர் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். இவர் பம்மல் பகுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இவர் தன்னுடன் வேலை செய்து வந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்திருந்தார். அண்மையில் தான் அருணுக்கு திருமணம் நடந்திருந்தது..
இந்நிலையில் கடந்த திங்கள் அன்று இரவு அனகாபுத்தூர் பாரிநகர் லட்சுமி தெருவைச் சேர்ந்த 55 வயதாகும் சங்கர், அவரது மகன் அருண்குமார் (30) இருவரும் இந்த ஓட்டலுக்கு வந்து இட்லி பார்சல் வாங்கியிருக்கிறார்கள். அப்போது சங்கரும், அருண்குமாரும் முழுமையாக மதுபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது..
இட்லி பார்சல் வாங்கிய சங்கரும் அவரது மகன் அருண்குமாரும் கூடுதலாக சாம்பார், சட்னி கேட்டு ஓட்டல் ஊழியர்களிடம் தகராறு செய்திருக்கிறார்கள். அவர்களை மேற்பார்வையாளர் அருண் சமாதானம் செய்து வைத்ததுடன், அவர்கள் கேட்டபடி கூடுதலாக சட்னி, சாம்பார் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர் ஓட்டலில் இருந்து வெளியே வந்த தந்தை-மகன் இருவரும், அங்கு வாகன நிறுத்தகத்தில் இருந்த தங்களது இருசக்கர வாகனத்தை எடுக்கும் போது ஓட்டல் காவலாளியுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்கள்.. மீண்டும் அங்கு வந்த அருண், இருவரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார்.
மது போதையில் இருந்த தந்தை மகன் இருவரும், ஆத்திரம் அடைந்து, ஓட்டல் சூப்பர்வைசரான அருணை கைகளால் சரமாரியாக தாக்கினர். இதில் நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்த அருண் எழுந்திருக்கவில்லை.. அவரை எழுப்ப முயற்சித்த சக ஊழியர்கள், முடியாத நிலையில், அவரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அருண் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
இது தொடர்பாக உடனடியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சங்கர், அவரது மகன் அருண்குமார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சங்கர் பெயிண்டராகவும், அருண்குமார் ஆர்.ஓ. குடிநீர் பொருத்தும் பணியிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.. குடிபோதையில் வந்த இவர்கள், சமீபத்தில் காதல் திருமணம் செய்த சூப்பர்வைசரை, சாம்பாருக்காக அடித்துக் கொலை செய்த சம்பவம் பல்லாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications