சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதுக் கட்சி மக்கள் நீதி மய்யத்திற்கு மக்கள் கொடுத்த சின்ன உற்சாகம்.. பல இடங்களில் நல்ல ஓட்டு

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections 2019: 3-வது இடத்திற்கு முட்டி மோதும் மநீம, நாம் தமிழர், அமமுக!- வீடியோ

    சென்னை: கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவையே சந்தித்து வருகின்றனர். இருப்பினும் மக்கள் மக்கள் நீதி மய்யத்திற்கு இதயத்தில் இடம் கொடுத்துள்ளதை உணர முடிகிறது.

    நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி, திமுக, கூட்டணி, கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவியது.

    மக்கள் நீதி மய்யம் மையம் சார்பில் பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் சூழ்நிலையில், அக்கட்சியின் வேட்பாளர்கள் பின்னடைவையே சந்தித்து வருகின்றனர்.

    என்னதான் சொல்லுங்க.. அதிமுகவுக்கு இது வெற்றிகரமான தோல்விதான்.. அசத்திட்டாங்களே! என்னதான் சொல்லுங்க.. அதிமுகவுக்கு இது வெற்றிகரமான தோல்விதான்.. அசத்திட்டாங்களே!

     வாக்குகள் குறைந்தன

    வாக்குகள் குறைந்தன

    பெரும்பாலான தொகுதிகளில் மநீம வேட்பாளர்கள் சொற்ப வாக்குகளே பெற்றுள்ளனர். இதனால் அவர்கள் டெபாசிட் வாங்குவதே சந்தேகமாக உள்ளது. ஆனால் இதை மக்கள் நீதி மய்யம் எதிர்பார்த்ததுதான்.

     கவனிப்புக்குரியது

    கவனிப்புக்குரியது

    அதேசமயம், மக்கள் மத்தியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு வெளிச்சம் கிடைத்துள்ளதை உணர முடிகிறது. பல இடங்களில் இக்கட்சி 3வது இடத்தில் வந்துள்ளது. தேமுதிக போன்ற எஸ்டாபிளிஷ் ஆன கட்சிகளே திணறிய நிலையில் மக்கள் நீதி மய்யத்திற்கு இது முக்கியமானது.

    ஜெகன் ஆந்திர முதல்வராவது உறுதி.. மீண்டும் எம்எல்ஏ-வாகி அவர் கரத்தை வலுவாக்குவேன்.. நடிகை ரோஜா ஜெகன் ஆந்திர முதல்வராவது உறுதி.. மீண்டும் எம்எல்ஏ-வாகி அவர் கரத்தை வலுவாக்குவேன்.. நடிகை ரோஜா

     அமமுக காலி

    அமமுக காலி

    பல இடங்களில் அமமுகவுக்கு இது கடும் போட்டியைக் கொடுத்துள்ளது. முட்டி மோதி அந்தக் கட்சியை சில இடங்களில் பின்னுக்கும் தள்ளியுள்ளது. இது ஆச்சரியகரமானது.

     கமீலா தோல்வி

    கமீலா தோல்வி

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அக்கட்சியின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் கமீலா நாசர் கூட பின்னடைவையே சந்தித்துள்ளார். அதேபோல், இடைதேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் பின்தங்கியே இருக்கிறது.

     பெட்டர் லக்

    பெட்டர் லக்

    தேர்தல் முடிவு மக்கள் நீதி மய்யத்துக்கு எதிராகவே இருந்தாலும் கூட வாக்காளர்கள் அந்தக் கட்சியை முழுமையாக கைவிடவில்லை, நல்ல பயிற்சியுடன் திரும்பினால் வரும் காலம் கமலுக்குரியதாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

    English summary
    Actor Kamal's Makkal Needhi Maiyam candidates are facing defeat in this lokshaba elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X