டிராவை நோக்கி செல்கிறதா 4வது டெஸ்ட்? ஆஸி.யை வீழ்த்த இந்தியா போட்ட திட்டம்.. என்ன அது?
ஆஸி.-க்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி வெல்ல என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
சென்னை: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் டிராபியின் கடைசி போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸ் ஆஸ்திரேலிய அணி கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரின் சதத்தால் 480 ரன்கள் குவித்தது.
இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 289 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் தொடர்ந்தது. குறிப்பாக ஜடேஜா 28 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கேஎஸ் பரத் அதிரடியாக ஆடினார். ஆனால் மறுபக்கம் விராட் கோலி முதல் செஷனில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் நிதானம் காட்டினார். இதன் பலனாக விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தை பூர்த்தி செய்தார்.

விராட் கோலி அதிரடி
இதனிடையே அதிரடியாக ஆடிய பரத் 44 ரன்களுக்கு ஆட்டமிழக்க, விராட் கோலி சதம் விளாசிய பின் அதிரடிக்கு மாறினார். அவருடன் அக்சர் படேலும் சேர்ந்து பவுண்டரியாக விளாச இந்திய அணி எளிதாக முன்னிலை பெற தொடங்கியது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 500 ரன்களை கடந்துள்ள நிலையில், விராட் கோலியும் 150 ரன்களை கடந்து விளையாடி வருகிறார்.

நாளையும் பேட்டிங்
4ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெறும் பட்சத்தில், ஆட்டம் டிராவை நோக்கி செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் விரைந்து ரன்கள் சேர்ப்பதோடு, நாளை முதல் ஒரு மணி பேட்டிங்கையும் இந்திய அணியே ஆட வேண்டும்.

மைதானத்தில் வெடிப்புகள்
ஏனென்றால் 2 நாட்களாக பந்துவீசியுள்ள ஆஸ்திரேலிய அணி, நாளையும் பந்துவீச தொடங்கும் போது மன ரீதியாக பலவீனமடையும். அதேபோல் எப்போது டிக்ளேர் செய்யப்படும் என்ற திட்டம் அறியாமல் ஆஸ்திரேலிய அணியினர் களமிறங்குவார்கள். இன்றைய ஆட்டத்தில் மைதானத்தின் சில இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.

வெற்றிபெற வாய்ப்பு?
நாளைய ஆட்டத்தில் அது அதிகரிக்கும் பட்சத்தில், அது இந்திய அணிக்கு சாதகமாக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் 5ம் நாள் ஆட்டத்தில் பிட்ச் எப்போதும் சுழற்பந்துவீச்சுக்கே சாதகமாக இருக்கும். அஸ்வின் மற்றும் ஜடேஜா தங்களின் மாயாஜாலத்தை நிகழ்த்தினால், இந்திய அணி வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இதுக்கு பேருதான் ஆதிக்கம்.. ஆர்சிபிக்கு எதிராக 3வது முறை.. பவர்பிளேயிலேயே சுருண்ட கில் - சுதர்சன்! -
குஜராத் அணி கதை ஓவர்.. ஹேசல்வுட்டிடம் 3வது முறையாக வீழ்ந்த சுப்மன் கில்.. சைலண்ட்டான அகமதாபாத்! -
76 பந்துகளுக்கு பின் முதல் சிக்ஸ்.. சூர்யவன்ஷி கிட்ட சொல்லிடாதீங்க.. குஜராத்தை வெளுக்கும் ரசிகர்கள்! -
'பிரின்ஸ்'னு சொல்லிக்கிட்டா பத்தாது.. விராட் கோலி மாதிரி விளையாடவும் செய்யணும்.. 25 பந்தில் அரைசதம்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சுப்மன் கில் அவுட்.. வெறித்தனமாக கத்தி கொண்டாடியா விராட் கோலி! அனுஷ்கா சர்மா பக்கம் திரும்பிய கேமரா! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications