DMK Files: பாஜக குறி கைது அல்ல.. இதான் டெல்லி ‘மிரட்டல் அடி’.. புட்டுப் புட்டு வைக்கும் எக்ஸ்பர்ட்!
சென்னை : "திமுக மீது ஊழல் புகார்களில் வழக்குப்பதிவு செய்வதற்கு முன்கூட்டியே சரணாகதி அடையச் செய்வதற்கான முயற்சியை பாஜக கையில் எடுக்கும். காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணியை உருவாக்குவதற்கு முனைப்பு காட்டுவதை தவிர்க்க வேண்டும் என்ற மறைமுக மிரட்டலை பாஜக தலைமை உருவாக்கும்" என்கிறார் அரசியல் விமர்சகர் கலை.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவினரின் சொத்து பட்டியல் எனக் கூறி ஒரு பட்டியலை வெளியிட்டதோடு, திமுகவினரின் ஊழல் குறித்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்றும், சிபிஐ-யில் வழக்குப்பதிவு செய்யப்போவதாகவும் கூறியுள்ளார். மேலும், அதிமுகவினரின் சொத்து பட்டியலும் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆதாரங்கள் இன்றி அண்ணாமலை இந்த சொத்துகளின் பட்டியலை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? கடந்த 9 ஆண்டுகளாக பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்து வரும் நிலையில், ஊழல் செய்திருந்தால் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என பல கேள்விகள் அண்ணாமலையை நோக்கி முன்வைக்கப்படுகின்றன. இவை குறித்து ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார் அரசியல் விமர்சகர் கலை.
டிஃபண்ட் செய்யவேண்டிய நிர்பந்தம் : அரசியல் விமர்சகர் கலை பேசுகையில், "அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியலால், அதை தடுத்து ஆட வேண்டிய நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. இந்த சொத்துகளை எப்படி சேர்த்தார்கள் என்பதற்கு இன்னும் ஆதாரங்களைக் கொடுப்பேன் என்கிறார் அண்ணாமலை. ஊழல் செய்தவர்கள் அனைவைரின் பட்டியலையும் பாஜக கடந்த 9 ஆண்டு காலமாக சேகரித்து வருகிறது. இப்போது தமிழ்நாட்டில் அண்ணாமலை மூலமாக வெளியிடுகிறார்கள்.
அதிமுகவினரின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என்கிறார் அண்ணாமலை. இதை எடப்பாடி பழனிசாமி தரப்பு மட்டும்தான் எதிர்க்கிறது. ஓபிஎஸ்ஸோ, சசிகலாவோ, டிடிவி தினகரனோ எதிர்க்கவில்லை. அப்படியென்றால், ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோருடன் அண்டர்ஸ்டாண்டிங் இருப்பதாகவே தெரிகிறது. ஓபிஎஸ்ஸை மிரட்ட வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை.
பாஜக வியூகம் : எடப்பாடி பழனிசாமி பாஜக தலைமையின் பேச்சைக் கேட்க மறுக்கிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஒருமுகப்படுவதை பாஜக விரும்பவில்லை. தங்களுக்கு விசுவாசமில்லாத நபரின் தலைமையில் அதிமுக பலமாக உருவாவதை பாஜக மேலிடம் விரும்பவில்லை. அதிமுகவை தங்களது கட்டுப்பாட்டில் முழுமையாக கொண்டு வரவேண்டும். அடுத்து அதிமுகவை தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்திற்கு தாங்கள் வரவேண்டும் என்பதுதான் பாஜகவின் வியூகம்.
எல்லா மாநிலங்களிலும் பாஜக கடைபிடிக்கக்கூடிய வியூகம் தான் இது. இதனை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரே சொல்லி இருக்கிறார்கள். பாஜக அரசு நினைத்தால், திமுக, அதிமுகவினர் மீது நேரடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தலாம். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக நெருக்குவது தான் பாஜகவின் பிளான். ஸ்டாலின், தேசிய அரசியலில் பிரவேசிப்பதை தடுப்பதற்காக அண்ணாமலையை வைத்து காய்நகர்த்துகிறார்கள்.
திமுக சரணாகதி அடைய மிரட்டல் : பாஜகவின் ஸ்ட்ராட்டஜி என்பது, ஊழலை எதிர்ப்பதை விட, தங்களோடு இணைத்துக் கொண்டு காங்கிரஸை ஒழித்துக் கட்டுவது தான். காங்கிரஸை ஒழித்துவிட்டால் தங்களை எதிர்க்கும் வலுவான கட்சி இல்லை. மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், கேசிஆர் மகள் கவிதா ஆகியோர் குறிவைக்கப்படுவதற்குக் காரணம் அவர்கள் பாஜகவை தீவிரமாக எதிர்ப்பதால் தான்.

திமுக மீது வழக்குப்பதிவு செய்வதற்கு முன்கூட்டியே சரணாகதி அடையச் செய்வதற்கான முயற்சியை பாஜக கையில் எடுக்கும். காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணியை உருவாக்குவதற்கு முனைப்பு காட்டுவதை தவிர்க்க வேண்டும் என்ற மறைமுக மிரட்டலை பாஜக உருவாக்கும். அதற்கு திமுக ஒப்புக்கொள்ளவில்லை என்றால் மேலும் மேலும் பாஜக நெருக்கடி கொடுக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் அண்ணாமலையா.. செல்லூர் ராஜு பேச்சால் கொந்தளித்த மாணிக்கம் தாகூர்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா!












Click it and Unblock the Notifications