கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்! யாரெல்லாம் என்ன பயன்பெறலாம்?
சென்னை: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் என்றால் என்ன என்பது பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த திட்டம் குறித்து விவசாயிகளும், விவசாயத் தொழிலில் ஆர்வமுடைய இளைஞர்களும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

திட்டத்தின் நோக்கங்கள்
தமிழ்நாட்டின் சாகுபடிப் பரப்பினை 11.75 இலட்சம் எக்டேர் உயர்த்துவதற்கு, 12,525 கிராம ஊராட்சிகளிலும் உள்ள தரிசுநிலங்களை கண்டறிந்து, பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி, சாகுபடிக்குக் கொண்டு வருவதுடன், அனைத்து கிராமங்களிலும், ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியும், அதன் மூலம் தன்னிறைவும் அடைவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

கிராமங்கள் தேர்வு
ஒவ்வொரு ஆண்டும் ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டப்பணிகளையும் ஒருங்கே செயல்படுத்துவதற்கு வேளாண்மை-உழவர் நலத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 2021-22 ஆம் ஆண்டில் 1,997 கிராம பஞ்சாயத்துக்களும், நடப்பு 2022-23 ஆம் ஆண்டில் 3,204 கிராம பஞ்சாயத்துக்களும் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

தரிசு நிலத் தொகுப்பு
தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துகளிலும் உள்ள கிராம நிர்வாக அலுவலர், முன்னோடி விவசாயிகள் மற்றும் இதரத்துறை அலுவலர்களை கலந்தாலோசித்து, பஞ்சாயத்தின் கீழ் உள்ள சிற்றூர் உட்பட அனைத்து பகுதிகளையும் கூர்ந்து ஆய்வு செய்து, தொகுப்பாக 10 முதல் 15 ஏக்கர் வரை உள்ள தரிசு நிலங்களை சர்வே எண் வாரியாக கண்டறியப்படுகிறது. ஒரு கிராமப் பஞ்சாயத்தில் மிக அதிகமாக தரிசு நிலங்கள் இருந்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுப்புகள் அமைக்கலாம்.

என்னென்ன பணிகள்
அ. பாசன ஆதாரத்திற்காக புதிய ஆழ்துளைக் கிணறு: புதிதாக பாசன வசதியினை உருவாக்குவதற்காக, வேளாண் பொறியியல் துறை மூலம் நிலத்தடிநீர் ஆய்வு மேற்கொண்டு, அதனடிப்படையில் தரிசு நிலத் தொகுப்பிலோ அல்லது அருகில் உள்ள புறம்போக்கு நிலத்திலோ ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறு அமைக்கப்படுகிறது. பாசன நீரை இறைப்பதற்கு சூரிய சக்தி மூலம் இயங்கும் மோட்டார் அல்லது மின் சக்தி மூலம் இயங்கும் மோட்டார் பம்புசெட்டுகளும் அமைத்து தரப்படுகிறது.
ஆ) பல்லாண்டு பயிர் சாகுபடி: தொகுப்பு நிலங்களில் விவசாயிகளுக்கு தொடர்ந்து வருமானம் தரக்கூடிய வகையில், குறைந்த நீரில் அதிக வருமானம் தரக்கூடிய தோட்டக்கலை பழ மரப்பயிர்களும், ஊடுபயிராக சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்து பயிர்களையும் சாகுபடி செய்வதற்கு வழிவகை செய்யப்படுகிறது. தொகுப்பில் அமைக்கப்படும் பொதுவான ஆழ்துளைக் கிணற்றிலிருந்து சொட்டுநீர் பாசன முறை மூலம் பாசனம் மேற்கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.
இ) இதரப் பணிகள்: திட்டக்கிராமங்களில் உள்ள ஏரி, குளம், வரத்து கால்வாய்களை தூர்வாருதல், பண்ணைக்குட்டைகள் அமைத்தல், ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு தனிப்பட்ட முறையில் மின் இணைப்புடன் ஆழ்துளைக் கிணறு அமைத்தல் போன்ற பணிகளும் 100 சதவீத மானியத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டக் கிராமப் பஞ்சாயத்துக்களில் உள்ள விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், பயறு விதைகள், தெளிப்பான்கள், வீட்டுத் தோட்டம் அமைக்க காய்கறி விதைத் தொகுப்புகள், தோட்டக்கலை பயிர்சாகுபடிக்கு ஊக்கத்தொகை, பழக்கூடைகள் மற்றும் ட்ரம், பழச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் அடங்கிய தொகுப்புகளும் மானியத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஈ) மாநில நிதியிலிருந்து ரூ.227.059 கோடி நிதி ஒப்பளிப்பு: முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 1,997 கிராமப் பஞ்சாயத்துகளிலும் மேற்காணும் பணிகளை மேற்கொள்வதற்காக மாநில நிதியிலிருந்து ரூ.227.059 கோடியினை அரசு ஒதுக்கி திட்டப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
உ) அனைத்து உழவர் நலத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துதல்: வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை போன்ற துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் 80 சதவிகித இலக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டக் கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால்நடை நலன் காத்து பால் உற்பத்தியை பெருக்குதல், வருவாய்த்துறை மூலம் புதிய பட்டா வழங்குதல் அல்லது பட்டா மாறுதல், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன்கள் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொறுப்பு அலுவலர்
ஒவ்வொரு கிராமத்திற்கும் பொறுப்பு அலுவலர் நியமனம்: கிராம அளவில் இத்திட்டப் பணிகளை இதரத் துறைகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்காக ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துக்கும் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு அந்தந்த கிராமப் பஞ்சாயத்து பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

அணுக வேண்டிய முகவரி
முன்பதிவுக்கு அணுக வேண்டிய முகவரி : இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் பெயரை உழவன் செயலி அல்லது www.tnagrisnet.tn.gov.in அல்லது www.tnhorticulture.tn.gov.in அல்லது www.mis.aed.tn.gov.in இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து, கொள்ளலாம்.
ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி, கிராமங்களில் தன்னிறைவு எனும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இணைந்து பயன்பெறுமாறு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications