கண்ணை காட்டிய ஸ்டாலின்.. களத்திற்கே வந்த அருண்.. 12 பேர் டீம்.. தொடங்கியது "ஆபரேஷன் டேர்".. பின்னணி
சென்னை: சென்னையில் கமிஷ்னர் அருண் மூலம் ஆபரேஷன் டேர்.. அதாவது DARE - துணிச்சல் என்று பெயரில் புதிய போலீஸ் ஆபரேஷன் தொடங்கப்பட்டு உள்ளது. இது என்ன ஆபரேஷன் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் இதற்காக தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி 12 துணை ஆணையர்களின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன. அந்தந்த காவல் நிலைய எல்லைகளில் Drive Against Rowdy Elements (DARE) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதிரடி ஆக்சன்: சென்னையின் புதிய கமிஷ்னர் அருண் நேரடியாக ரவுடிகளின் வீடுகள், இருப்பிடங்களுக்கே சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து முதற்கட்டமாக சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று ரெய்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
குற்றப்பின்னணியில் உள்ள 6 ஆயிரம் ரவுடிகளின் லிஸ்டை அருண் எடுத்துள்ளார். அவர் சென்னை பெருநகரம் முழுவதும் ரவுடிகளின் இருப்பிடங்களுக்கே செல்ல முடிவு எடுத்துள்ளனர். அங்கே நேரில் சென்று ஆய்வு செய்து, அறிக்கை தர வேண்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு அருண் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
ரவுடியிசத்தை விட விரும்பாத ரவுடிகள் மீது கடுமையான ஆக்சன் எடுக்கப்படும் என்று அருண் உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து முதற்கட்டமாக சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று ரெய்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ரவுடிகள் நடவடிக்கை: தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லாமல் போனதாக முக்கியமாக சென்னையில் சட்ட ஒழுங்கு சரியில்லாமல் போனதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டு உள்ளனர். இந்த அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்தது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படி தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடந்து வரும் சில சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. மக்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும் ஒரு ரெட் நோட் சென்றுள்ளதாம். அதாவது தமிழக அரசு இது போன்ற விவகாரங்களை எதிர்கொள்ள உடனே சுதாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக சில முக்கியமான விஷயங்களை செய்ய வேண்டி உள்ளது. முக்கியமாக சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு ஏற்பட்டு உள்ளது.
அதிகாரிகள் மாற்றம்: இந்த நிலையில்தான் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேநேரம், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் இருவரும் திறமையான அதிகாரிகள். அதிலும் அருண் இளமையான துடிப்பான அதிகாரி. இன்னொரு பக்கம் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஏற்கனவே உளவுத்துறையில் நல்ல பெயர் எடுத்தவர்.
இவர்களுக்கு ப்ரீ ஹேண்ட் கொடுக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளாராம். அதோடு இவர்களை தேர்வு செய்ய ஸ்டாலின் யாரிடமும் ஆலோசனை செய்யவில்லை. அவராகவே தேர்வு செய்தவர்கள்தான் இவர்கள் இருவரும் என்று தகவல்கள் வருகின்றனர்.
சென்னையில் ரவுடிகளை, கொலைகளை கட்டுப்படுத்த முழுமையாக ப்ரீ ஹேண்ட் கொடுக்க முதல்வர் ஸ்டாலின் இவர்களை களமிறக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் விரைவில் முக்கியமான ஆக்சன்களை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications