சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேரறிவாளன் இப்போது வீட்டில் என்ன செய்கிறார் ? தாயார் அற்புதம்மாள் போட்டுடைத்த தகவல்!

Google Oneindia Tamil News

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் இப்போது வீட்டில் என்ன செய்கிறார் என்ற ருசிகர தகவல் ஒன்றை அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்திருக்கிறார்.

31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளன் இப்போது தனது மனதுக்கு பிடித்த காரியங்களை செய்யத் தொடங்கியுள்ளார்.

3 மேட்டர்.. 3 பேருக்கு சிக்கல்.. ஊட்டியில் ரெய்டு விட்ட ஸ்டாலின்.. மேசைக்கு வந்த முக்கிய ரிப்போர்ட்!3 மேட்டர்.. 3 பேருக்கு சிக்கல்.. ஊட்டியில் ரெய்டு விட்ட ஸ்டாலின்.. மேசைக்கு வந்த முக்கிய ரிப்போர்ட்!

இத்தனை நாட்களாக வெறுமனே புத்தகங்களை மட்டும் படித்துக் கொண்டிருந்த
பேரறிவாளன், இப்போது கிட்டார் வாசித்து தனது இசை ஆர்வத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளாராம்.

விசிக தலைவர்

விசிக தலைவர்

ரஷ்யாவுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று காலை தான் சென்னை திரும்பினார். இந்த
தகவல் ஏற்கனவே நேரம் கேட்டிருந்த பேரறிவாளனுக்கு விசிக அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று நண்பகல் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்த பேரறிவாளனும் அவரது தாயார் அற்புதம்மாளும்
நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

கிட்டார் வாசிப்பு

கிட்டார் வாசிப்பு

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அற்புதம்மாள், பேரறிவாளன் விடுதலைக்காக திருமாவளவன் எந்தளவு தனக்கு பக்கபலமாக இருந்தார் என்பதை விவரித்தார். மேலும் பேரறிவாளனுக்கு திருமா கிட்டார் இசைக்கருவி ஒன்றை ஏற்கனவே பரிசாக கொடுத்திருப்பதாகவும் அந்த கிட்டாரை தான் இப்போது பேரறிவாளன் வாசித்து வருவதாகவும் மகிழ்ச்சி பொங்கச் சொன்னார். மகனின் இசை
ஆர்வத்தை குறிப்பிட்டு பெருமைப்பட்டார்

யாருக்கும் தெரியாது

யாருக்கும் தெரியாது

பேரறிவாளனுக்கு இசையின் மீது இந்தளவு ஆர்வம் இருப்பதும் அவர் கிட்டார் வாசிப்பதும் யாருக்கும் தெரியாத ஒன்றாகும். இந்நிலையில் அந்த தகவலை செய்தியாளர் சந்திப்பின் போது போட்டுடைத்துவிட்டார் அற்புதம்மாள்.இறுக்கமான சூழலை கூட இசையால் மாற்ற முடியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதனிடையே பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளை அறம் காத்த அன்னை எனக்
கூறி பாராட்டினார் திருமாவளவன்.

எல்லா தலைவர்களையும்

எல்லா தலைவர்களையும்

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டது முதல் முதலமைச்சர் ஸ்டாலின்,எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், விசிக தலைவர் திருமா,
என வரிசையாக அரசியல் கட்சித் தலைவர்களை பேரறிவாளனும் அவரது தாயாரும் நேரில்
சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.

English summary
What is Perarivalan doing at home now?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X