ஓபிஎஸ் தரப்புக்கு பாதகமாக இந்த தீர்ப்பு? உயர்நீதிமன்ற உத்தரவால் எடப்பாடிக்கு என்ன லாபம்? முழு விவரம்

அதிமுக பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடத்தலாம், ஆனால் நீதிமன்ற உத்தரவு வரும் வரை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடத்தலாம், ஆனால் நீதிமன்ற உத்தரவு வரும் வரை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, எந்த காரணமும் இல்லாமல் பொதுச்செயலாளர் பதவிக்கு அவசரமாக தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாகக் கூறி, தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை நியமித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மற்றும் ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 11ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் மனு

உயர்நீதிமன்றத்தில் மனு

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

பதில் மனு தாக்கல்

பதில் மனு தாக்கல்

அந்த மனுக்களில், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரிவிட்டு, சட்டவிரோதமாக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது நீதிமன்ற நடவடிக்கையை மீறும் செயல் மட்டுமல்லாமல், நீதிமன்ற கண்ணியத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் செயல் என்றும் கூறப்பட்டுள்ளது.

இணை ஒருங்கிணைப்பாளர்

இணை ஒருங்கிணைப்பாளர்

கட்சி விதிகளை திருத்த பொதுக்குழுவிற்கு அதிகாரம் இருந்தாலும், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை. ஜெயலலிதா மரணத்திற்கு பின்பு 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில், ஜெயலலிதாவை கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என அறிவித்ததுடன், பொதுச்செயலாளர் பதவியை கலைத்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதாகவும், திருத்தப்பட்ட இந்த விதியின்படி 1.5கோடி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பதவிக் காலம் 2026வரை உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல்

வேட்புமனு தாக்கல்


பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, எந்த காரணமும் இல்லாமல் பொதுச்செயலாளர் பதவிக்கு அவசரமாக தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், வார இறுதி நாட்களில் வேட்புமனுத்தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியிட்டதன் மூலம், போட்டியிட விரும்புவோரை சட்டவிரோதமாக தடுத்துள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர்

பொதுச்செயலாளர்

இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் இன்று (மார்ச் 19) அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், பிரபாகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும் போதும், தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை பொறுமையாக விசாரிப்பதில் எங்களுக்கு பாதகம் இல்லை. தேர்தலை எதிர்த்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். ஒருவருக்காக மட்டுமே தேர்தல் நடத்தப்படுகிறது. தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் இடைக்கால பொதுச்செயலாளர் அறிவிப்பையும் ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பதவியை ஏற்கவில்லை

பதவியை ஏற்கவில்லை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என 2017 ல் அறிவித்து விட்டு, கட்சி கொள்கைக்கு எதிராக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்த போது தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை மட்டுமே ஏற்றுக் கொண்டது. தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை ஏற்கவில்லை.அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர், சாதாரண தொண்டனும் கட்சித் தலைமைக்கு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

327 உறுப்பினர்கள்

327 உறுப்பினர்கள்

அதிமுகவில் மொத்தமாக 70 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில், வேட்பாளர்களுக்கு 10 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தர வேண்டும் என கூறுவதை ஏற்க முடியாது. 7 உறுப்பினர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும், கட்சி விதிகளுக்கு எதிராக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1 கோடியே 55 லட்சம் பேர் அடிப்படை உறுப்பினர்களாக உள்ளனர். அதில், 327 முதன்மை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது சட்டவிரோதமானது. தீர்மானத்தை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும். கட்சி விதிகளின் படி 7 நாட்கள் நோட்டீஸ் வழங்காமல் கடந்த 17 ம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒருவரை மட்டுமே தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எப்படி பொதுவானதாக கருத முடியும்.

பதவியில் தொடரலாம்

பதவியில் தொடரலாம்

வழக்கு நிலுவையில் இருக்கும் போது தேர்தல் அறிவிக்கப்பட்டது சட்ட விரோதம். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டதை எதிர்த்த வழக்க நிலுவையில் இருக்கம் போது எப்படி பொதுச்செயலாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியிட முடியும்.ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் 2026 வரை பதவியில் தொடரலாம் என வாதம் முன் வைக்கப்பட்டது.

ஓபிஎஸ் பின்புலம்

ஓபிஎஸ் பின்புலம்

அதிமுகவில் எடப்பாடி தரப்பில் வாதிடும் போது, பொதுச்செயலாளர் தேர்தல் கட்சி உள்விவகாரங்களில் தொடர்புடையது. நீக்கப்பட்டவர்கள் எதிர்த்து வழக்கு தொடர முடியாது. தேர்தல் அறிவிக்கப்பட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது. வழக்கு தொடர்ந்தவர்கள் ஒபிஎஸ் சார்பாக தொடர்ந்துள்ளனர். வழக்கு தொடர்ந்தவர்கள் நேரடியாக தேர்தலால் பாதிக்கப்படவில்லை. தீர்மானத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டாலும், அனைத்து தீர்மானங்களும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓபிஎஸ் பின்புலத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.தேர்தல் அறிவிப்பு ஒரு நாட்களில் வெளியிடவில்லை

ஒற்றை தலை

ஒற்றை தலை

பதிய இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்ட உறுப்பினர் அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கப்பட்டு விட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியிட அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முழு அதிகாரம் உள்ளது.அதிமுக வளர்ச்சியை பிடிக்காத எதிரிகள், அதிமுகவின் அடித்தளத்தை அசைத்து பார்க்க விரும்புகின்றனர். உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியா? என்ன அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதை மட்டுமே விசாரித்தது. இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வை எதிர்க்கவில்லை. பொதுக்குழு ஒற்றை தலைமையை விரும்பியது

பொதுச்செயலாளர் தேர்தல்

பொதுச்செயலாளர் தேர்தல்

1 கோடியே 65 லட்சம் பேர் ஒற்றை தலைமையை விரும்பினர். அதனால் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. தீர்க்கப்படாத களங்கத்தை அதிமுக மீது ஏற்படுத்தவே பன்னீர்செல்வம் சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளனர். உச்சநீதிமன்றம் கட்சி உறுப்பினர்களின் எண்ணங்களை பிரிதிபலிக்கும் பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கலாம் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதையே உச்சநீதிமன்ற தீர்ப்பும் வெளியிட்டுள்ளது. உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதால் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விதிமீறல்கள் இல்லை

விதிமீறல்கள் இல்லை

ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இணைந்து செயல்படாத முடியாத நிலையில், மனுதாரர்கள் எப்படி இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என வழக்கு தொடர முடியும். சங்க விதிகளின் படி எந்த உறுப்பினரும் நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது. தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிய பின்னர் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2017ல் பொதுக்குழுவால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கினைப்பாளர் பதவி தோற்று விக்கப்பட்டது. மீண்டும் பொதுக்குழுவால் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் எந்த விதிமீறல்களும் இல்லை.

சட்ட ரீதியான அங்கீகாரம்

சட்ட ரீதியான அங்கீகாரம்

அதிமுக நிறுவனர் எம்.ஜிஆர் கட்சி தொடங்கிய போது, அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என விதி கொண்டுவரப்பட்டது. 2017ல் கட்சி விதி திருத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி முதன்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என மாற்றப்பட்டது. தற்போது 2022ல் பொதுக்குழுவில் மீண்டும் அடிப்படை உறப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என விதி திருத்தப்பட்டது. சங்க விதிகளின் படி கட்சி விதிகளை திருந்த பொதுக்குழுவுக்கு சட்ட ரீதியான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

முடிவை வெளியிட தடை

முடிவை வெளியிட தடை

இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதி, பொதுக்குழுவை எதிர்த்த வழக்கு ஏப்ரல் 11ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அவசரமாக தேர்தல் அறிவிப்பு வெளியிட வேண்டிய காரணம் என்ன? தேர்தலை நடத்துங்கள், ஆனால் முடிவை தீர்ப்பு வரும் வரை அறிவிக்க வேண்டாம். வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+