சட்டசபை தேர்தல் தேதி எது? பிப்., முதல் வாரத்தில் தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர் குழு! பின்னணி
சென்னை: தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் சட்டசபை தேர்தலையொட்டி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருகையின்போது தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள், சட்டம்-ஒழுங்கு நிலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது நடக்கும்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பான பணிகளில் ஒவ்வொரு கட்சிகளும் கவனம் செலுத்தி வருகின்றன.

இதனால் தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, புதிதாக அரசியலில் வந்துள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவ உள்ளது.
இதனால் தமிழக தேர்தல் களம் அதிக கவனம் பெற்றுள்ளது. எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படியான சூழலில் தான் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் குழு தமிழகம் வருகை தர உள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஸ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்களான சுக்வீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரின் குழு பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த வருகையின்போது தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகள், பாதுகாப்பு பணிகள் குறித்து பல்வேறு துறையினருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த வேளையில் போலீஸ் அதிகாரிகள், பிற அரசு அதிகாரிகள், அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் தேர்தல் ஆணையர் குழு சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த சந்திப்பில், தேர்தல் நடத்தை விதிமுறைகள், பிரச்சார கட்டுப்பாடுகள், சமூக வலைதளங்களில் அரசியல் விளம்பரங்கள், பணம் மற்றும் பரிசு விநியோகம் தொடர்பான புகார்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துகள் கேட்கப்பட உள்ளன.
மேலும் தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய சவால்கள், பதற்றமான தொகுதிகள், வாக்குப்பதிவு நாளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்தும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. தேர்தல் நடைபெறும் காலகட்டத்தில் நியாயமான, வெளிப்படையான மற்றும் அமைதியான தேர்தல் நடத்த அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம் என தேர்தல் ஆணையம் வலியுறுத்த உள்ளது.
இந்த ஆலோசனைக்கு பிறகு சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அதன்படி தமிழக சட்டசபை தேர்தல் தேதி பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் பிப்ரவரி 26ம் தேதி அறிவித்தது.
அப்போது தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஒரே நாளில் 4 மாநிலங்கள், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. 2021ம் ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு மார்ச் 12ம் தேதி தொடங்கியது. மார்ச் 19ம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. மார்ச் 20ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை செய்யப்பட்டது. மார்ச் 22 வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
பிறகு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக 234 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. பிறகு மே 2ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக வெற்றி பெற்ற நிலையில் 2021 மே 7 ம் தேதி தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
அண்ணாமலை வாபஸ் வாங்க போகிறாரா? கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஷாக் கண்டிஷன்? விழிக்குது பாஜக -
1000 சவரன் தங்க நகை, மகளுக்கு கடன்! விஜய்யின் சொத்து பத்திரத்தில் முரண்பாடு? திமுக புள்ளி கூறுவதென்ன -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
ராயபுரத்தை கேட்ட ஆளூர் ஷாநவாஸ்.. டீலில் விட்டது ஏன்? திருமாவளவன் சொன்ன பாயிண்ட்! இதுதான் காரணம் -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறை! மதுரையில் போட்டியிடாத சிகப்பு சட்டை தோழர்கள்! என்னாச்சு? -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான்












Click it and Unblock the Notifications