டிஜிட்டல் ஹவுஸ் திட்டம்.. சட்டப்பேரவையில் இன்று அறிமுகம்.. எம்எல்ஏக்களுக்கு என்ன நன்மை>?
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல் டிஜிட்டல் ஹவுஸ் என்னும் புதிய திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி உறுப்பினர்களின் மேசை மேல் உள்ள கணினியில் மின்னணுப் புத்தகம் என்ற ஆப் நிறுவப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்கள், கேள்வி கேட்பவர், பதில் சொல்பவர் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களை அவர்களின் இருக்கை கணினியிலேயே பார்க்க முடியும்.

கணினி யுகத்தை அடுத்து தற்போது ஆண்ட்ராய்டு யுகமாக தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தமிழ்நாடு சட்டப்பேரவையும் ஆண்ட்ராய்டு யுகத்திற்கு மாறி விட்டது. முன்பு சட்டப்பேரவையில் பட்ஜெட் உள்பட அனைத்து கேள்வி பதில்களும் காகித வடிவில் தான் தரப்படும்.
மின்னணு வடிவில் உள்ள இதைக் காண சட்டப்பேரவை உறுப்பினர்களின் இருக்கைக்கு முன்பாக உள்ள மேசையில் கையடக்க கணினி வைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இப்போது காகிதமில்லா சட்டப்பேரவை என்ற நிலையை தமிழக சட்டப்பேரவை எட்டி உள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இ- பட்ஜெட்டைத் தான் தாக்கல் செய்து வருகிறார. பேரவையில் காகிதச் செலவு பெரிய அளவில் மிச்சமாகி வருகிறது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல் டிஜிட்டல் ஹவுஸ் என்னும் புதிய திட்டம் இன்று நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி, உறுப்பினர்களின் மேசை மேல் உள்ள கணினியில் இ - புக் என்ற செயலி நிறுவப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் கேள்வி கேட்கும் உறுப்பினர்கள், பதில் சொல்லும் உறுப்பினர்கள், அவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை இனி மின்னணு முறையிலேயே பார்க்க முடியும். இந்த அறிவிப்பை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று வெளியிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications