மண்ணைக் கவ்விய அதிமுக.. அதிர்ச்சியில் தலைவர்கள்.. சறுக்கியது எங்கே?.. இனி நிமிர இதுதான் வழி!
சென்னை: தமிழகத்தில் நடந்த நகர்ப்புற தேர்தலில் அதிமுக பெரிய அளவில் தோல்வி அடைந்துள்ளது. அக்கட்சியின் முக்கிய தலைவர்களின் வார்டுகளிலேயே கட்சி தோல்வி அடைந்துள்ளதால் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் சரி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் சரி அதிமுக பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் , சட்டசபை தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல்களில பாஜகவுடன அதிமுக கூட்டணி அமைத்தது.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வி அடைந்தோம் என சொல்லிக் கொள்ளலாம். ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டும் இத்தனை சறுக்கல் ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாநகராட்சி வார்டு
மொததம் உள்ள 1374 மாநகராட்சி வார்டுகளில் ஒரு வார்டில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது, 4 வார்டுகளில் போட்டியின்றி தேர்வு இடங்கள் போக மற்ற 1369 வார்டுகளில் திமுக 952 வார்டுகளிலும் அதிமுக 164 வார்டுகளிலும் வென்றுள்ளது. அதாவது திமுக வென்றதில் 50 சதவீதம் வெற்றியை கூட அதிமுக தொடவில்லை. அது போல் மொத்தம் உள்ள 3843 நகராட்சி வார்டுகளில் ஒரு வார்டில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது, போட்டியின்றி 18 இடங்களில் தேர்வு போக மற்ற 3824 வார்டுகளில் திமுக 2360 இடங்களில் வென்றுள்ளது. அதிமுக வெறும் 638 இடங்களில்தான் வென்றுள்ளது.

பேரூராட்சி வார்டு
அது போல் மொத்தமுள்ள7621 பேரூராட்சி வார்டுகளில் 4 வார்டுகளில் தேரதல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 12 வார்டுகளில் தேர்தல் ரத்தாகியுள்ளது. போட்டியின்றி 196 வார்டுகளில் தேர்வு போக மீதமுள்ள 7407 வார்டுகளில் திமுக 4388 வார்டுகளிலும் அதிமுக 1206 வார்டுகளிலும் வென்றுள்ளது. திமுக வெற்றிக்கும் அதிமுக வெற்றிக்கும் மிக அதிக இடைவெளி இருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி
முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் வசிக்கும் வார்டுகளில் கூட அதிமுக தோல்வி அடைந்துள்ளதால் தலைவர்களை போல் தொண்டர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள். சோர்ந்து போயுள்ள அதிமுக தொண்டர்களுக்கு தைரியம் சொல்லும் வகையில் அதிமுக தலைமை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Recommended Video

வலுப்படுத்த வேண்டும்
ஆறுதல், தேற்றுதலுக்கு பிறகு அதிமுகவுக்கு தேவையான சுய பரிசோதனை. அதிமுகவை வலுப்படுத்த என்னவெல்லாம் செய்யலாம் என்பதை திட்டமிட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருப்பதால் இப்போதே தங்களின் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். வேட்பாளர்கள் தேர்வு, கட்சி நியமன பதவிகளில் வேண்டியவர், வேண்டாதவர்கள் என்றில்லாமல் கட்சி விதிகளை பின்பற்றி நடத்தல் வேண்டும். நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி எங்கே சறுக்கினோம் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆட்சியில் இருக்கும் போது கூட்டணி கட்சியை பகைத்து கொள்ளாமல் இருக்க மக்கள் விரோத திட்டங்களுக்கு அதிமுக துணை போனதும் இந்த சறுக்கலுக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. தொண்டர்களின் கோரிக்கைக்கிணங்க, ஒற்றை தலைமையை கொண்டு வருவதற்கான வழிகளை சண்டை சச்சரவின்றி செய்ய வேண்டும். அதிமுக ஒன்றிணையும் போது அண்ணன் தம்பிகளுக்குள் ஆயிரம் சண்டை வரும் போகும் என்றார்கள் அல்லவா, அது போல் ஒற்றுமையுடன் செயல்பட்டு சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது. இதையெல்லாம் செய்தால் இனி வரும் தேர்தலிலாவது தப்பலாம், இல்லாவிட்டால் கட்சி கரைய தொடங்கிவிடும் என்பதை மறுப்பதற்கில்லை.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications