Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"குவியுதே கூட்டம்!" மொத்தமாக மாறும் சென்னை ஏர்போர்ட்.! அதுவும் சில வாரங்களில்.. இது நல்லா இருக்கே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மிக விரைவிலேயே இங்கே மெகா மாற்றம் ஒன்று வர உள்ளது.

இந்தியாவிலேயே மிகவும் பிஸியான விமான நிலையங்களில் ஒன்று சென்னை விமான நிலையம். சென்னை ஏர்போர்ட்டில இருந்து தினசரி உள்நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் பல விமானச் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

 What is the plan to counter increasing passenger footfall in Chennai airport

இதனால் சென்னை ஏர்போர்ட் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். அதிலும் குறிப்பாகச் சென்னை விமான நிலையத்திற்கு பீக் ஹவரில் சென்ற அனைவருக்கும் ஏர்போர்ட் எந்தளவுக்குக் கூட்ட நெரிசலாக இருக்கிறது என்பது நன்றாகவே தெரியும்.

சூப்பர் பிளான்: உள்நாட்டு விமானங்கள் அதிகப்படியாக இயக்கப்படும் நிலையில், இதனால் பீக் ஹவரில் கூட்டம் மிக அதிகமாக இருக்கிறது. இதற்கிடையே இந்த பிரச்சினைக்கு வரும் ஆக். மாதம் முதல் தீர்வு கிடைக்கப் போகிறது. சென்னை ஏர்போர்ட்டில் உள்நாட்டு விமானங்களுக்கு இரண்டு டெர்மினல்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இது பயணிகளின் நெரிசலை வெகுவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதிகாலையில் அவசரமாகக் கிளம்புவோருக்கு இது பெரியளவில் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த ஜூலை மாதம் தான் சர்வதேச விமானச் சேவைகள் அனைத்தும் புதிய ஒருங்கிணைந்த முனையத்திற்கு (T2) மாற்றப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளனர்.

சென்னை ஏர்போர்ட்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சர்வதேச விமான சேவை டி 4 சர்வதேச முனையத்தில் இருந்து இயங்கி வந்தது. இவை இப்போது புதிய ஒருங்கிணைந்த முனையத்திற்கு (T2) மாற்றப்பட்டது. இப்போது அனைத்து உள்நாட்டு விமானங்கள் டி1 டெர்மினலில் இருந்து இயக்கப்படுகிறது. அதை பிரித்து முன்பு சர்வதேச விமானங்கள் இயக்கிய டி4 டெர்மினலை தான் இரண்டாவது உள்நாட்டு முனையமாக மாற்றத் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறுகையில், "ஏற்கனவே டி4 டெர்மினலை புனரமைக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டோம்.. ஓரிரு வாரங்களில் அது பணிகள் முடிவடையும்.. அங்கிருந்த இமிக்ரேஷன் கவுண்டர்கள் இப்போது அகற்றப்படுகின்றன. மூன்று லக்கேஜ் கன்வேயர் பெல்ட்களை புதிதாக அமைக்கிறோம். மேலும், ஏர்போர்ட்டில் ஆங்காங்கே சில மாற்றங்களைச் செய்யவுள்ளோம். அதன் பிறகு ஏர்போர்ட்டில் க்ளீனிங் பணிகள் நடக்கும். அதன் பின்னரே ஏர்போர்ட் திறக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்

பிளான் என்ன: இப்படி இரண்டு உள்நாட்டு முனையங்களில் இருந்து விமானங்களை இயக்கினால் அதிகப்படியான விமானங்களை இயக்க முடியும். இதன் மூலம் அதிகப்படியான பயணிகளைக் கையாள முடியும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள திட்டப்படி இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தொடர்ந்து டி1 முனையத்தில் இருந்து விமானங்களை இயக்கும். அதேநேரம் ஏர் இந்தியா, ஏர் ஏசியா மற்றும் விஸ்தாரா ஆகியவை டி4 முனையத்திற்கு மாற்றப்படும்.

இரண்டு முனையங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்படும் போது ஏர்போர்ட்டிற்கு வரும் பயணிகள் குழப்பமடைய வாய்ப்புள்ளது. இதனால் விமான நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள், சர்வீஸ் சாலைகளில் எந்த உள்நாட்டு விமானங்கள் எங்கிருந்து இயக்கப்படும் என்பதை விளக்கும் பலகைகளை வைக்க முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் பயணிகள் எளிதாக தாங்கள் எந்த முனையத்திற்குச் செல்ல வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

தாமதம் ஏன்: சர்வதேச விமானங்கள் ஒருங்கிணைந்த முனையத்திற்கு மாற்றப்பட்ட உடனேயே கடந்த ஜூலை மாதம் முதல் இந்தத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், லக்கேஜ் கன்வேயர் பெல்ட்களை அமைப்பது உள்ளிட்ட பணிகள் இருந்ததால் இதில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட பிறகு, அடுத்த மாதம் அக். முதல் டி4 முனையத்தில் இருந்து உள்நாட்டு விமானச் சேவை ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+