Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ஈசிஆரில் என்னதான் பிரச்சனை.. வெறும் 240 மீட்டர் இடத்தால்.. தடுமாறும் 6 வழிச்சாலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் அக்கரை வரை உள்ள சாலையை 6 வழித்தடமாக அகலப்படுத்தும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார். கொட்டிவாக்கம் கிராமத்தில் 270 மீட்டர் நீளத்திற்கு குடிநீர் குழாய் மற்றும் பாதாளச் சாக்கடைப் பணியால் தாமதம் ஆகி வருகிறது.

சென்னை திருவான்மியூரில் இருந்து தொடங்கும் கிழக்கு கடற்கரை சாலை என்பது (ஈசிஆர்) சென்னையின் மாநகரின் மிகவும் காஸ்ட்லியான பகுதியாக உள்ளது. எவ்வளவு பெரிய கோடீஸ்வரர்கள் எல்லாருமே கோடிகளை கட்டி சொகுசுவிடுதிகளையும், தங்களுடைய வீடுகளையும் கட்டி வைத்துள்ளார்கள். சென்னையில் விவிஐபிக்கள் பலரும் வாழும் பகுதியாக கிழக்கு கடற்கரை சாலை பகுதி இருக்கிறது. சென்னையில் கிழக்கு கடறகரையை பொறுத்தரை 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாமல்லபுரம் வழியாக புதுச்சேரியை கடந்து அப்படியே கன்னியாகுமரி வரை சுமார் 800 கிமீ தூரம் வரை அப்படியே செல்கிறது. இதில் திருவான்மியூர் முதல் மாமல்லபுரம் வரை பல ஐடி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலாத்தலங்கள் உள்ளன.

chennai ecr

இதனால் ஈசிஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இச்சாலையை ஆறுவழிச்சாலையாக மாற்ற கடந்த 2012ல் அரசு முடிவு செய்தது. இந்த பணிகளை பல இடங்களில் முடித்த அரசால, திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை உள்ள 10.5 கி.மீ தூரம் உள்ள சாலையை முழுமையாக முடியவில்லை. நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருந்தது. திருவான்மியூர் முதல் பாலவாக்கம் வரை சாலைகளில் இரு புறங்களும் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டிருந்ததால் சாலையை அகலப்பபடுத்த முடியாத நிலை இருந்தது. நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் ஒருவழியாக ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள், படிப்படியாகபணிகளை மேற்கொண்டார்கள். 2020க்கு முன்பே தொடங்கிய பல்வேறு பணிகள் இன்று வரை முடியவில்லை..

ஏனெனில் இப்பணிகளில், நிலஎடுப்பு, மின்சார வாரியத்தின் பயன்பாட்டுப் பொருட்களை மாற்றியமைத்தல், சென்னை குடிநீர் வாரியத்தின் குழாய் பதிக்கும் பணி மற்றும் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகள் போன்ற காரணங்களால் சிக்கல் தொடர்ந்து நீடித்து வந்தது. இது பற்றி சென்னை, தலைமைச் செயலக அலுவலகத்தில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நேற்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் இரா.செல்வராஜ், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது, வருவாய்த்துறை, சென்னை குடிநீர் வாரியம், மின்சார வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் இப்பணிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அமைச்சர் எ.வ. வேலு, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேபோல், நிலுவையிலுள்ள கோர்ட்டு வழக்குகள், மேல்முறையீடுகள் போன்றவற்றை விரைந்து முடிக்க தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். தற்போதைய நிலையில் கொட்டிவாக்கம் கிராமத்தில் 270 மீட்டர் நீளத்திற்கு குடிநீர் குழாய் மற்றும் பாதாளச் சாக்கடைப் பணிகள் நிலுவையில் இருக்கிறது. இப்பணிகளை சென்னை குடிநீர் வாரியம் தனிக்கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார்.

கொட்டிவாக்கம் கிராமத்தில் குடிநீர் குழாய் பணிகள் முடிந்தால் மட்டுமே, சாலை விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள முடியும் என்கிற நிலை இருக்கிறது. எனவே, இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டியது அவசியம் ஆகும். இப்பணிகள் நடைபெறும்போது, தேவையான சாலை தடுப்பான்கள், முன்னெச்சரிக்கைப் பலகைகள் ஆகிய பாதுகாப்பு உபகரணங்களுடன் குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதேபோல் கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், அத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து கிழக்கு கடற்கரை சாலைப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+