5.5 கோடி பேருக்கு 11 ஆட்சி மொழி.. ஆனால் இந்தியாவில் மட்டும் இரண்டா? அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தி மொழி தொடர்பாக சமீப நாட்களாக பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வருகின்றன. தமிழ்நாடு மட்டுமல்லாது மேற்கு வங்கத்திலும் இந்தி மொழியை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தி திணிப்புக்கு எதிரான நேற்று திமுக பரலாக போராட்டத்தை முன்னெடுத்தது. தமிழ்நாடு முழுவதும் இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், இந்தியாவில் 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக மாற்றுவதில் என்ன பிரச்சனை இருக்கிறது? என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வியெழுப்பியுள்ளார்.

போராட்டம்

போராட்டம்

தமிழ்நாட்டில் மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சித்து வருவதாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் போராட்டங்களை திமுக நேற்று முன்னெடுத்து. தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களும் இந்திக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. குறிப்பாக மேற்கு வங்கமும் தற்போது இந்திக்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளது. சமீபத்தில் அம்மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்கள் அண்ணா, கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை தாங்கி பிடித்திருந்தனர்.

அறிக்கை

அறிக்கை

மாநிலங்களில் நிலைமை இவ்வாறு இருக்க மத்திய அரசு இந்தியில் மருத்துவ கல்விக்கான பாட புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. மட்டுமல்லாது, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஎம்எம், எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் இந்தியே கட்டாய பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு குடியரசுத் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது.

 கடிதம்

கடிதம்

இவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்தியாவில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த அட்டவணையில் மேலும் சில மொழிகள் இணைக்கப்பட வேண்டும். இந்தியாவில் பேசப்படும் அத்துனை மொழிகளும் அலுவல் மொழிகளாக அறிவிக்கப்பட வேண்டும். அத்துனை மொழிகளையும் வளர்தெடுக்க வேண்டும். இவ்வாறு அனைத்து மொழிகளை பேசுபவர்களுக்கும் வேலை வாய்ப்பிலும், கல்வியிலும் சம வாய்ப்பினை அளிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

ட்வீட்

ட்வீட்

தற்போது இதன் தொடர்ச்சியாக தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், இந்தியாவில் 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக மாற்றுவதில் என்ன பிரச்சனை இருக்கிறது? என கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "5.5 கோடி மக்கள்தொகை, கொண்ட தென்னாப்பிரிக்காவில் 11 மொழிகளும், 60 லட்சம் பேர் மட்டுமே கொண்ட சிங்கப்பூரில் 4 மொழிகளும், 80 லட்சம் பேர் கொண்ட சுவிட்சர்லாந்தில் 4 மொழிகளும் அலுவல் மொழிகளாக இருக்கின்றன.

கேள்வி

கேள்வி

எனில், 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இருக்கும் 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக மாற்றுவதில் என்ன பிரச்சனை இருக்கிறது? இந்திய நாட்டில் குறிப்பிட்ட சாரர் மட்டுமே பேசும் இந்தி மொழியை ஆட்சி மொழியாகவும், ஆதிக்க மொழியாகவும் மாற்ற நினைப்பதை எவ்வாறு ஏற்று கொள்ள முடியும்?" என்று கேள்வியெழுப்பியுள்ளார். தற்போது இந்த ட்வீட் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+