சென்னை-பெங்களூர் ஹைவேயில் ராணிப்பேட்டை வரை.. பல வருஷமா ஏன் இப்படி மோசமா இருக்கு.. இதுதான் காரணம்
சென்னை: இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு..! என்பது போல் தான் இருக்கிறது சென்னை பெங்களூர் நெடுஞ்சாலை பணிகள். தொடர்ந்து பல ஆண்டுகளாக பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பதால் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கிறது.
குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் முதல் காரைப்பேட்டை வரை குண்டும் குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் தத்தளித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒப்பந்ததாரர்கள் இன்னும் வேலையை முடிக்காமல் இருக்க என்ன காரணம்? என்பது குறித்து விசாரித்த போது பல தகவல்கள் கிடைத்தது.
மக்களின் கோரிக்கையை அடுத்து பெங்களூர் ஹைவேயில், சென்னை-ராணிப்பேட்டை இடையே சாலை விரிவாக்க மற்றும் மேம்பாட்டு பணிகள் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கியது. ஆறு வழி சாலைகள் கொண்ட இந்த திட்டத்தின் மூலம் விரைவில் பெங்களூர் சென்னை இடையே பயணிக்க முடியும்.

2024 ஆம் ஆண்டுக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என மத்திய அரசு கூறினாலும், நிலைமை தலைகீழாகவே இருக்கிறது. தற்போது வரை பாதிக்கு மேலான பணிகள் மட்டுமே முடிந்திருக்கிறது.
குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் - காரைப்பேட்டை, ராணிப்பேட்டை - வாலாஜாபாத் இடையே சாலை பணிகள் மிகத் தொய்வாக நடைபெற்று வருகிறது. இதுவரை 15க்கும் மேற்பட்ட முறை டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் - காரைப்பேட்டை சாலை அதிக வாகனங்கள் பயணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த மிகப்பெரிய சாலையாக இருக்கிறது.
ராணிப்பேட்டை சிப்காட், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இந்த சாலையை தான் வாகன ஓட்டிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் திருவண்ணாமலை ஆரணி வழியாக பெங்களூருக்கு செல்பவர்கள் இந்த வழியைத் தான் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் சாலை விரிவாக்க பணிகள் தொடர்ந்து இழுபறியாகிக் கொண்டே வரும் நிலையில் மக்கள் கடும் அவதியை சந்திக்க நேரிடுகிறது. பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. ஆங்காங்கே மேம்பால பணிகளும் நடைபெற்று வருவதால் சாலையில் இருந்து இறங்கியே வாகன ஓட்டிகள் பயணிக்க வேண்டி இருக்கிறது.
மேலும் பல இடங்களில் டேக் டைவர்ஷன் போர்டுகளும் எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளை முகம் சுழிக்க வைத்திருக்கிறது. குண்டும் குழியுமான சாலையில் பயணித்தால் கர்ப்பிணிகளுக்கு பிரசவமே நடந்து விடும் என மீம்ஸ்களையும் பார்க்க முடிகிறது.
அறிவிக்கப்படாத இடங்களில் பள்ளங்களும் வேகத்தடைகளும் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் பயணிக்க வேண்டும். சற்று தடுமாறினாலோ அல்லது எதிர்பாராமல் ப்ரேக் பிடித்தால் விபத்து ஏற்பட்டு போக்குவரத்து மொத்தமாக ஸ்தம்பிக்கும் நிலை இருக்கிறது. தொடர்ந்து 18 முறை டெண்டர் கேன்சல் செய்யப்பட்டுள்ள நிலையில் பணியை எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் பாதியிலேயே ஏன் விட்டுச் செல்கின்றனர் என்பது குறித்து விசாரித்த போது பல தகவல்கள் கிடைத்தன.
அதாவது பணிகளுக்கு பயன்படும் ஃப்ளை ஆஷ் எனப்படும் எரிசாம்பலை மத்திய மாநில அரசுகளுக்கு சொந்தமான அனல் மின் நிலையங்கள் தர மறுப்பதே காரணம் என கூறப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வாலாஜாபேட்டை வரையிலான 70 கிமீ நீளமுள்ள நான்கு வழிச்சாலையை ஆறுவழிச் சாலையாக இரண்டு தொகுப்புகளாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. 2019ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு திட்டத்தை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். காரைப்பேட்டை - வாலாஜாபேட்டை இடையே 75 சதவீத பணிகள் முடிவுற்றிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2025க்குள் இந்த பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஸ்ரீபெரும்புதூர் காரைப்பேட்டை இடையே சுமார் 50% பணிகள் மட்டுமே முடிவடைந்து இருக்கிறது. இதுக்கு என்ன காரணம் என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,” ஸ்ரீபெரும்புதூர் - காரைப்பேட்டை பணிகளுக்குள் புதிய டெண்டர் விடப்பட்டு இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முடிக்கப்படும். ஆனால் தற்போது தமிழக அரசின் டான்ஜெட்கோ மற்றும் மத்திய அரசின் அனல் மின் நிலையங்கள் ஃப்ளை ஆஷ் எனப்படும் நிலக்கரியை எரித்த பின்பு கிடைக்கும் எரிசாம்பலை இலவசமாக தர மறுக்கின்றன.
இதனால் அதிக செலவு பிடிக்கும் என்பதால் காண்ட்ராக்டர்கள் அந்த பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனல் மின் நிலையங்கள் எரிசாம்பலை இலவசமாக பாலங்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கு வழங்க வேண்டும் என கூறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதையும் மீறி அனல் மின் நிலைய நிறுவனங்கள் எரிசாம்பலை தர மறுப்பதே பணிகள் தாமதம் ஆவதற்கு காரணம்" என்கின்றனர்.
இது தொடர்பாக லாரி உரிமையாளர்களிடம் பேசியபோது,”பத்தாண்டுகளுக்கு மேலாக ஆறு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் முடிந்தபாடு இல்லை. பல இடங்களில் சாலை விரிவாக்க பணிகள் காரணமாக டேக் டைவர்ஸன் போர்டுகள் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அதிக அளவிலான விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே பணிகளை விரைந்து முடிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பெங்களூரில் 5 வருட காதல் கணவனை மர்ம உறுப்பிலேயே... ஓங்கி மிதித்த பெண்.. அடுத்து நடந்த ட்விஸ்ட் -
"நாய்கள் குரைப்பதால் தூங்க முடியவில்லை".. புகாரளித்த பெண்.. போலீஸ் செய்த வேலையை பாருங்க -
IT Jobs: ரூ.8 லட்சம் வரை சம்பளம்.. வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.. அசத்தலான சான்ஸ் -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications