சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"க்ளீன் ஸ்வைப்".. டாப் கியரில் மய்யம்.. பாஜகவையே மிரள வைக்கும் கமல்.. வியந்து பார்க்கும் திமுக..!

பாஜகவின் வானதி சீனிவாசனை முந்துவாரா கமல் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: வானதியா? கமலா? என்பது போய், கமல் அசுர பலத்துடன் முன்னேறி கொண்டிருக்கிறார் என்று கள நிலவரங்களும், கருத்து கணிப்புகளும் சொல்லி வருகின்றன.. இது எந்த அளவுக்கு உண்மை? சாத்தியம்?

கமல் கோவை தெற்கு தொகுதியில் ஏன் போட்டியிட்டார்? அவருக்கு சாதகமான சூழல்கள் மயிலாப்பூரில், ஆலந்தூரில், மதுரையில் இருக்கும்போது, கோவைக்கு எதற்காக வந்தார் என்ற பல கேள்விகள் இன்னமும் எழுந்தபடியே உள்ளன.

ஆனால், வேட்பாளர் லிஸ்ட்டில் தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் என்ற பெயரை பார்த்ததுமே அனைவரின் கவனமும் திமுக பக்கம் தாவியது.. கமல் 3வது அணி அமைத்தால் நிச்சயம் அதன் தாக்கம் திமுகவுக்கு தான் என்றும், திமுகவின் ஓட்டுக்களை கமல் பிரித்துவிடக்கூடாது என்பதற்காகவே அவரை சரிக்கட்ட திமுக தரப்பு கூட்டணி முயற்சி மேற்கொண்டது என்றும் செய்திகள் வந்தன.

ஓட்டுக்கள்

ஓட்டுக்கள்

அதனால்தான், கமல் வேட்புமனு தாக்கல் செய்ததுமே, திமுகவின் ஓட்டுக்கள் காலி என்ற பேச்சுக்களும் சத்தமாக எழுந்தது.. திமுகவின் ஓட்டுக்கள் பிரியும்போது, தானாகவே பாஜகவின் வாக்கு வங்கி அதிகரிக்கும், இதனால் வானதிக்கு லாபம் என்று கணக்கு போடப்பட்டது.. எல்லாமே தூள் தூளாகிவிட்டது.. இன்று நேரடியாகவே கமல் வருகையால் வானதிக்குதான் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி வருகிறது.

 பாஜக

பாஜக

சமுதாயம் சார்ந்த ஓட்டுக்கள் இருவருக்கும் பொது என்றாலும், இருவருமே பிரபலமானவர்கள் என்றாலும், கமலுக்கு கூடுதல் மவுசு இந்த குறுகிய காலத்தில் அந்த தொகுதியில் எகிறி உள்ளது.. இத்தனைக்கும் வானதிக்காக, ராதாரவி பேசினார்.. நமீதா பேசினார்.. ஸ்மிருதி வந்துபோனார்.. ஆனால், கமலுக்கு கமல் மட்டுமே.. !

 சாதகம்

சாதகம்

எனினும் கமலுக்கு இருக்கும் கிரேஸ் உண்மைதானா என்றும் கேள்வி எழுகிறது.. இதுகுறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடமும் பேசினோம்.. அவர்கள் நம்மிடம் சொன்னதாவது: "இந்த கருத்து கணிப்புகளை வைத்து எதையும் சொல்ல முடியாது.. அந்த கருத்து கணிப்புகள் யாருக்கு சாதகமானவை என்பதை வைத்துதான் முடிவு செய்ய முடியும்.. எத்தனையோ நடுநிலையான கணிப்புகளே தேர்தலுக்கு பிறகு பொய்த்து போயுள்ளது.. மேலும் கமலுக்கு வரும் கூட்டத்தை வைத்தும் கணக்கு போட முடியாது.. கூட்டம் வேறு, வாக்காளர்கள் வேறு.

 ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டர்

ஆனால் கமலின் பிரச்சாரம் புதுமாதிரியாக இருக்கிறது.. ஹெலிகாப்டரில் பறந்து பறந்து பிரச்சாரம் செய்கிறார்.. கால் வலி என்றாலும், சொந்த செலவில்தான் இந்த பயணங்களை அவர் மேற்கொள்கிறார் என்றாலும், மய்யத்துக்கு அது கூடுதல் பலத்தை இந்த நேரத்தில் தந்து வருகிறது.

மய்யம்

மய்யம்

இதனால் கமல் நேரத்தை மிச்சப்படுத்துகிறார்.. தன் கட்சி வேட்பாளர்களுக்கும் மற்ற இடங்களில் போய் பிரச்சாரம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அடுத்த ஊருக்கு கிளம்பி போய்விடுவதால், இதை பாஜக தரப்பு, கமலுக்கு சுணக்கம் என்று கணக்கு போட்டது. ஆனால், எங்கே பறந்தாலும், ஓவர்நைட்டில் கோவைக்கு வந்துவிடுகிறார் கமல். இதுதான் பாஜகவுக்கு முதல் அப்செட்... களத்திலேயே எந்நேரமும் கமல் இருப்பதுபோலவே தெரிகிறது. இதுபோக இன்னொரு கணக்கும் அந்த கட்சிக்கு உள்ளது.

அதிரடி

அதிரடி

தெற்கு தொகுதியில் உள்ள மொத்தம் இரண்டரை லட்சம் வாக்குகளில், மற்ற கட்சிகள் ஆளுக்கு கொஞ்சம் பிரித்தாலும், 80 முதல் 90 ஆயிரம் வாக்குகளை மய்யம் எளிதாக பெற்றுவிடும் என்று நம்புகிறது.. இதுபோக பாஜகவின் மைனஸ்கள் அத்தனையையும் காங்கிரஸைவிட, கமல் வேகமாக மக்களிடம் கொண்டு சென்று சேர்த்து விடுகிறார்.. மயூரா சத்தமே இல்லாமல் இருக்கிறார்.. இன்னும் கொஞ்சம் அதிரடியை அவர் காட்ட வேண்டி இருக்கிறது.. இதெல்லாம்தான் கமலுக்கு சாத்தியமாகிறது" என்கிறார்கள்.

English summary
What is the reason for Kamalhasan to overtake BJPs Vanathi Srinivasan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X