ரஜினிகாந்த் படத்தில் இருந்து சுந்தர் சி விலக காரணம் என்ன? வந்து விழுந்த கேள்வி.. கமல்ஹாசன் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்தின் 173-வது படத்தை இயக்குவதாக இருந்த சுந்தர் சி திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார். இந்த நிலையில் சுந்தர் சி விலகுவதற்கு என்ன காரணம் என்பதற்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். மேலும் ரஜினிக்கு கதை பிடிக்கும் வரை தொடர்ந்து கதைகளை கேட்போம், புதிய இயக்குனர்களாக இருந்தாலும் கதை நன்றாக இருந்தால் தேர்வு செய்வோம் என்று அவர் கூறியுள்ளார்.

கூலி திரைப்படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினிகாந்தின் 172 வது படம். இதையடுத்து ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

what-is-the-reason-for-sundar-c-exit-from-rajinikanth-film-kamal-haasan-answer

சுந்தர் சி விலகல்

இது தொடர்பாக கடந்த மாதமே ஹிண்ட் கொடுத்து வந்த நிலையில் இறுதியாக நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி இப்படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம். சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் "தலைவர் 173" உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் திடீரென இயக்குனர் சுந்தர் சி இந்த திரைப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். என்ன காரணத்திற்காக அவர் இந்த திரைப்படத்தை இயக்குவதில் இருந்து விலகினார் என்பது தெரியாததால் நெட்டிசன்கள் பலரும் பலவிதமாக கருத்து பதிவிட்டு வந்தனர். இதனால் இந்த சம்பவம் இணையத்தில் டிரெண்ட் ஆனது.

கமல்ஹாசன் பதில்

எனினும் இந்த படம் கைவிடப்படவில்லை. விரைவில் வேறொரு இயக்குநருடன் தொடரும் உறுதி தயாரிப்பு நிறுவனம் சார்பில் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு பிடிக்கும் வரை கதைகளை கேட்டுக்கொண்டே இருப்போம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன் இது பற்றி கூறியதாவது:-

புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பீர்களா என்று கேட்கிறீர்கள். நிச்சயமாக வாய்ப்பு கொடுப்போம்.. கதை நல்லாக இருந்தால் போதும் என்று கூறினார். அப்போது, ரஜினியும் நீங்களும் இணைந்து நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், அது இன்னொரு படத்தில் நடக்கும். அதற்கான கதையும் தேடிக்கொண்டு இருக்கிறோம். இப்போதைக்கு இந்த படம் முதலில் பண்ணுகிறோம்" என்றார்.

மீண்டும் இணைய சான்ஸ் இருக்கா?

இது எந்த மாதிரியான படமாக இருக்கும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், "எதிர்பாராததை எதிர்பாருங்கள்" என்று பதில் அளித்தார். சுந்தர் சி இந்த படத்தில் இருந்து விலக என்ன காரணம்? மீண்டும் இணைய சான்ஸ் இருக்கா? என்ற கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், "இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். அதற்கு தான் அவர் அறிக்கையில் சொல்லியிருக்கிறாரே.. அது தான் அவருடைய கருத்து..

என்னுடைய கருத்து.. நான் முதலீட்டாளர். என் நட்சத்திரத்துக்கு பிடிக்கின்ற கதை தான் எனக்கு ஆரோக்கியத்தனம். அதை தான் பண்ணிக்கொண்டு இருக்கிறோம். ரஜினிகாந்துக்கு கதை பிடிக்கும் வரை கதைகளை கேட்டுக்கொண்டே இருப்போம்" இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+