"சிதம்பரம்" ஞாபகம் இருக்கா.. அப்படியே திருப்பரங்குன்றம்.. "இதுதான்" டிடிவி தினகரன்.. குஷியில் திமுக
சென்னை: அதிமுக ஓட்டுகளை திசை திருப்புவது என்ற ஒரே குறிக்கோளுடன் தென் மாவட்டங்களில் அதிக இடங்களில் போட்டியிடுகிறது டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.
அதேநேரம் கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு வட மாவட்டங்களில் அதிக தொகுதிகளை ஒதுக்கி உள்ளது அந்த கட்சி.
தெற்கே எங்களுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது.., வடக்கே உங்களுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது என்பதுதான் இந்த தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ள பார்முலாவில் அடிப்படை.

அமமுக ஓட்டுக்கள்
உண்மையிலேயே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தென்தமிழகத்தில் வாக்குகளைப் பிரிக்கும் சக்தி இருக்கிறதா.. இதற்கு முந்தைய தேர்தல்களில் அந்த கட்சி எத்தனை விழுக்காடு வாக்குகளைப் பெற்றது என்பதை தெரிந்து கொண்டால் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். 2019 லோக்சபா தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெற்ற வாக்குகளை அடிப்படையாக வைத்து பார்க்கலாமே.

லோக்சபா தேர்தல் நிலவரம்
லோக்சபா தேர்தலில் பாஜக, அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக உள்ளிட்டவை ஓரணியாக போட்டியிட்டன. திமுக கூட்டணியில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்டவை போட்டியிட்டன. தேனி லோக்சபா தொகுதி தவிர அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிட்டது.

அமமுக வாக்கு விழுக்காடு
2019 லோக்சபா தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெற்ற வாக்குகளின் விழுக்காடு 5.24. அவ்வளவு ஏன்.. 22 லோக்சபா தொகுதிகளில் டாப் 3 வேட்பாளர்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளரும் ஒருவராக வந்தார். அப்படி என்றால் எந்த அளவுக்கு அதிமுகவுக்கு செல்லும் வாக்குகளை தினகரன் கட்சி பிரித்தது என்பதை புரிந்துகொள்ள முடியும். இத்தனைக்கும் அப்போது சசிகலா சிறையில் தான் இருந்தார்.

சிதம்பரம் தொகுதி ரிசல்ட்
சிதம்பரம் தொகுதி ரிசல்ட் உங்களுக்கு ஞாபகம் இருக்கக் கூடும். 3219 வாக்குகள் வித்தியாசத்தில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன் வெற்றி பெற்றார். எனவே நள்ளிரவு வரை தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு பெரும் இழுபறி நிலை நீடித்தது. வெல்லப்போவது அதிமுக வேட்பாளரா, திருமாவளவனா என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவிய இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் இளவரசன் பெற்ற வாக்குகள் 62 ஆயிரத்து 308. இந்த வாக்குகளில் பெரும்பகுதி அதிமுகவுக்கு செல்லக்கூடியவை என்பதை சொல்லித் தெரிய வேண்டியது கிடையாது. ஒருவேளை அப்படி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இந்த தேர்தலில் போட்டியிடாமல் இருந்திருந்தால், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் தோல்வியை தழுவி இருக்க, வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன என்பதை மறுக்க முடியாது.

சட்டசபை இடைத் தேர்தல்
அதே காலகட்டத்தில் 23 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் 9 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதால் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடிந்ததது. அதிமுகவுக்கு அது ஒரு ஆசிட் டெஸ்ட் என்பதைப் போல இருந்தது. அந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிட்டு 7.5 சதவீத வாக்குகளை பெற்றது. முக்குலத்தோர் ஜாதியினர் எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறார்களோ அங்கு தினகரன் கட்சி அதிக வாக்குகளை பெற்றது. உதாரணத்துக்கு ஆண்டிப்பட்டி, பெரியகுளம் உள்ளிட்ட தொகுதிகளை சொல்லலாம்.

திருப்பரங்குன்றம் நிலவரம்
திருப்பரங்குன்றம் தொகுதியில் வெறும் 2396 ஓட்டுகளில் திமுக வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் வேட்பாளர் மகேந்திரன் 31 ஆயிரத்து 599 வாக்குகளை பெற்றார். இதன் காரணமாகத்தான் அதிமுக அந்த தொகுதியில் தோல்வியை தழுவியது. லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் மட்டுமல்ல, உள்ளாட்சி தேர்தலிலும் முக்குலத்தோர் அதிகமாக இருக்கும் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சாதிக்க முடிந்தது.

சசிகலா அனுதாப ஓட்டு
இப்போது தினகரன் போட்டியிடுகிறாரே கோவில்பட்டி தொகுதி. அந்த சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கயத்தாறு பஞ்சாயத்து யூனியன் தேர்தலை மொத்தமாக வென்றது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி. இப்போது சசிகலா ரிலீஸாகி சென்னை வந்துள்ளார். அவர் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றாலும் கூட சசிகலாவுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்பதை சொல்லித்தான் தினகரன் தரப்பு பிரச்சாரம் செய்ய உள்ளது. இதன் மூலம் முக்குலத்தோர் வாக்குகளை மொத்தமாக ஈர்க்க முடியும் என்று நம்புகிறார்கள் .

பாதி ஓட்டுக்களுக்கு குறி
இதுபற்றி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழக செயலாளர் உமாதேவன் கூறுகையில், அதிமுகவுக்கு செல்லக்கூடிய வாக்குகளில் சுமார் 50 விழுக்காடு அளவுக்கு எங்களால் ஈர்க்க முடியும் என்று நம்புகிறோம். இது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக மாறப்போகிறது என்று தெரிவிக்கிறார் உறுதியாக.

தொகுதிகள் லிஸ்ட்
இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் கேட்டபோது , குறிப்பிட்ட சில தொகுதிகளில் தினகரன் கட்சி ஆதிக்கம் செலுத்த முடியும் என்கிறார்கள். குறிப்பாக, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி , ஆண்டிபட்டி, கம்பம், ஆத்தூர், நத்தம், திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் தினகரன் கட்சியால் திமுகவுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக அவர்கள் அடித்துச் சொல்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் சுமார் இரண்டு வாரங்கள் இருக்கின்றன. இது இப்போதைய களநிலவரம்தான். போகப் போக எப்படி மாறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போமே.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications