5ம் வகுப்பு, 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைத்தால் என்ன தவறு? முதல்வர் பழனிச்சாமி பேச்சு
சென்னை: 5ம் வகுப்பு 8ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நல்லது சொன்னால் யாரும் கேட்பதில்லை, 5ம் வகுபபு மற்றும 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தினால் என்ன தவறு என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட 5ம் வகுப்பு 8ம் வகுப்பு பொதுத்தேர்வு பல்வேறு தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்த காரணத்தால் ரத்து செய்யப்பட்டதாக அண்மையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை ) கல்வித்துறை மானிய கோரிக்கை மீது விவாதத்தில் திமுக எம்எல்ஏ பொன்முடி பேசுகையில், 5, 8-ம் வகுப்பிற்கு முதலில் கட்டாயத்தேர்வு என அறிவிக்க வேண்டும்? திமுக எதிர்ப்பு தெரிவித்ததும் ஏன் அந்த நிலைப்பாட்டி இருந்து ஏன் பின்வாங்க வேண்டும்? என்று கேட்டார்.

முதல்வர் அதிரடி கேள்வி
இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்து பேசுகையில், நல்லது சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. 5-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைத்தால் என்ன தவறு? நல்ல எண்ணத்தில் தான் 5, 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வைக்க திட்டமிட்டோம். ஆனால் அதற்கு எதிர்ப்பு எழுந்ததால் கட்டாயத்தேர்வை ரத்து செய்து உள்ளோம் திமுக எதிர்ப்பு தெரிவித்தற்காக பின்வாங்கவில்லை.

கல்வி தரம் உயரும்
5, 8-ம் வகுப்பு தேர்வு எழுதினால் தான் மாணவர்களுக்கு பதற்றம் இல்லாமல் போகும். அதன்பிறகு 10-ம் வகுப்பு தேர்வை பதற்றம் இல்லாமல் எழுத முடியும். விஞ்ஞான காலத்தில் நாம் உள்ளோம். மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தினால் தான் உலக அளவிலான கல்வியைப் பெறுவதற்கு முடியும். எனவே தான் பொதுத்தேர்வைக் கொண்டு வந்தோம்.

போட்டித் தேர்வுகள்
கிராமப்புற மாணவர்கள் அறிவை வளர்த்து, போட்டித்தேர்வில் வெற்றி பெறுவார்கள் என்பதற்காகத்தான் 5, 8-ம் வகுப்புக்கு தேர்வு அறிவித்தோம். நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக கிராமப்புற மாணவர்கள் போட்டித்தேர்வில் வெற்றி பெறத்தான் பொதுத்தேர்வை அறிவித்தோம். தேர்வால் மாணவர்களின் தரம் உயரும். தேர்வு இல்லாததால் மாணவர்களின் தரம், பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் தெரியப்போவதில்லை. ஆனால், தேர்வால் பாதிப்பு என எதிர்கட்சியினர் ஒரு பொய்யை சொல்லி அதை நியாயப்படுத்த பார்க்கிறார்கள்" இவ்வாறு கூறினார்.

பொன்முடி பதிலடி
இதையடுத்துது பேசிய பொன்முடி, தேர்வின் மூலம் கல்வித்தரம் உயராது 2011-12ம் ஆண்டில் NAS suveryயில் தமிழகத்தின் கல்வித்தரம் இரண்டாம் இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது அந்த ஆய்வில் தமிழகம் கல்வித்தரத்தில் 8வது இடத்தில் இருக்கிறது. தேர்வு வைப்பது தான் கல்வித்தரமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு உடனே எழுந்த அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர்களைப் போராட்டக்களத்தில் எதிர்கட்சியினர் இறக்கி விடுகிறீர்கள். அரசு பள்ளியின் தரத்தை உயர்த்த எதிர்கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று பதில் அளித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications