ஆபரேசன் “சக்சஸ்”.. பேஷண்ட்? எடப்பாடிக்கு உயர்நீதிமன்றம் “செக்”! ஓபிஎஸ் “ரிலாக்ஸ்” - அடுத்து என்ன?

"தேர்தல் நடத்தலாம் என்ற உத்தரவு எடப்பாடி தரப்புக்கு சாதகமாக தெரிந்தாலும், முடிவுகளை அறிவிக்கக்கூடாது என்று கூறி இருப்பது ஓபிஎஸ் தரப்புக்கு சற்று ஆறுதலை அளித்து இருக்கிறது."

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்த தடை விதிக்கக்கோரி ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் நடைமுறைகளை தொடரலாம் என்று தீர்ப்பளித்தாலும், முடிவுகளை அறிவிக்கக்கூடாது என்று அறிவித்து இருப்பது சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2022 மே மாதம் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் இடையிலான ஒற்றைத் தலைமை பிரச்சனை அதிமுகவில் வெடித்தது. கடந்த ஜூன் 23 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக்க பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழுவை கூட்ட அனுமதி அளித்தாலும், அது தொடர்பாக புதிய தீர்மானங்களை நிறைவேற்ற தடை விதித்தது.

 இடைக்கால பொதுச்செயலாளர்

இடைக்கால பொதுச்செயலாளர்

இதனை தொடர்ந்து கூடிய பொதுக்குழுவில் ஒத்தி வைத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓ.பி.எஸ். தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகளை தாண்டி 2022 ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை சென்னையில் பிரம்மாண்டமாக கூட்டியது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

தடையும் அனுமதியும்

தடையும் அனுமதியும்

அடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜூலை 11 அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். அதில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இப்படி இரு தரப்பினும் மாறி மாறி சட்டப்போராட்டம் நடத்திய நிலையில், கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதன் படி, ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி தரப்பு கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்து உள்ளது. இதனை தொடர்ந்து பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியது எடப்பாடி பழனிசாமி தரப்பு.

பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு

பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு

இந்த நிலையில்தான், அதிமுக தேர்தல் ஆணையர்களான துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கடந்த 17 ஆம் தேதி பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார்கள். " அதிமுக சட்ட திட்ட விதி: 20 (அ); பிரிவு - 2ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, "ஈழகப் பொதுச் செயலாளர்" கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்" என்ற விதிமுறைக்கு ஏற்ப "கழகப் பொதுச் செயலாளர்" பொறுப்பிற்கான தேர்தல் நடைபெறும்." என்று அறிவித்தனர்.

26 ஆம் தேதி வாக்குப்பதிவு

26 ஆம் தேதி வாக்குப்பதிவு

அதன் அடிப்படையில் சனிக் கிழமை வேட்புமனுத்தாக்கல் தொடங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி நேற்றே வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இன்று வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து, நாளை வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். 21 ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம். 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு 27 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

ரூ.25,000 கட்டணம்

ரூ.25,000 கட்டணம்

"பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட கழக உடன்பிறப்புகள், மேற்கண்ட கால அட்டவணைப்படி, தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை ரூ. 25,000/- (ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் மட்டும்) செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்று, கழக சட்ட விதி - 20அ; பிரிவு - 1, (a), (b), (c) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி தங்களுடைய விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம்.

 ஓபிஎஸ் தரப்பு வழக்கு

ஓபிஎஸ் தரப்பு வழக்கு

"கழகப் பொதுச் செயலாளர்" பொறுப்பிற்கான தேர்தல் முறையாக நடைபெறுவதற்கு, கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்." என்று இருவரும் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் இதனை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார்.

தேர்தல் முடிவை அறிவிக்க தடை

தேர்தல் முடிவை அறிவிக்க தடை

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ரமேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை என்பதால் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம் எனவும், அதே நேரம் முடிவை அறிவிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டார்.

ஓபிஎஸ் ஆறுதல்

ஓபிஎஸ் ஆறுதல்

எனவே தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றும் வாக்குகள் எண்ணப்பட்டாலும் முடிவுகள் அறிவிக்கப்படாது என்று கூறப்படுகிறது. தேர்தல் நடத்தலாம் என்ற உத்தரவு எடப்பாடி தரப்புக்கு சாதகமாக தெரிந்தாலும், முடிவுகளை அறிவிக்கக்கூடாது என்று கூறி இருப்பது ஓபிஎஸ் தரப்புக்கு சற்று ஆறுதலை அளித்து இருக்கிறது.

பொதுக்குழு தீர்ப்பு

பொதுக்குழு தீர்ப்பு

இதனை தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்து இருக்கிறார் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன். உயர்நீதிமன்ற தீர்ப்பை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள். அதே நேரம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு முன்பே மார்ச் 22 ஆம் தேதி விசாரிக்கப்பட்டு 24 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதால் அதை பொறுத்து இந்த தீர்ப்பு யாருக்கு சாதகம், பாதகம் என்பது மாறலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+