தமிழிசை பேசிக்கொண்டு இருக்கும் போதே..ஜும் காலில் காட்டப்பட்ட போட்டோ! உண்மையில் நடந்தது என்ன? பின்னணி
சென்னை: நேற்று பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தென்சென்னையில் ஜும் காலில் பிரச்சாரம் செய்த போது நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் தென்சென்னை தொகுதி கொஞ்சம் போட்டி அதிகம் கொண்ட தொகுதி ஆகும், இது ஸ்டார் வேட்பாளர்கள் தொகுதியாக பார்க்கப்படுகிறது. இங்கே அதிமுக சார்பாக ஜே. ஜெயவர்தன் என்று அழைக்கப்படும் ஜெயக்குமார் ஜெயவர்தன் களமிறங்குகிறார். இவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஆவார்.

கடந்த லோக்சபா தேர்தலில் இதே தொகுதியில் அவர் 3,02,649 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் தமிழச்சி தங்க பாண்டியன் 564,872 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதே தொகுதியில் மீண்டும் தமிழச்சி தங்க பாண்டியன் திமுக சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இன்னொரு பக்கம் தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னையில் களமிறங்கி உள்ளார். இதற்காக தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். மீண்டும் பாஜகவில் உறுப்பினராக சேர்ந்து தற்போது தென்சென்னை பாஜக வேட்பாளராக இவர் களமிறக்கப்பட்டு உள்ளார்.
தமிழிசை: இந்த லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழிசை சௌந்தரராஜன் களத்திலும் நேரடியாகவும் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். அதன் ஒரு கட்டமாக தென்சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் சங்கத்துடன் தமிழிசை உரையாடினார்.
அதன் உறுப்பினர்களுடன் ஆன்லைன் மூலம் வீடியோ காலில் தமிழிசை பேசினார். ஜும் காலில் அங்கே பிரச்சாரம் செய்வது தொடர்பாக ஆலோசனை செய்தார். அப்போது அந்த வீடியோ காலில் ஒரு நபர் திடீரென ஸ்கிரீனை ஆன் செய்துள்ளார்.
அதன்பின் ஆபாச புகைப்படங்களை அதில் காண்பித்துள்ளார். தமிழிசை முதலில் இதை கவனிக்கவில்லை. இதை பார்த்ததும் அந்த மீட்டிங்கில் இருந்த பெண்கள் சிலர் உடனே மீட்டிங்கில் இருந்து வெளியேறி உள்ளனர். அதன்பின்தான் தமிழிசை இப்படி ஒருவர் ஆபாச புகைப்படங்களை காட்டியது கண்டுபிடித்துள்ளார். அதற்குள் பல பெண்கள் மீட்டிங்கில் இருந்தே வெளியேறிவிட்டனர்.
இதை பார்த்து தமிழிசை கடுமையாக அதிர்ச்சி அடைந்துள்ளார் . உடனே மீட்டிங்கை க்ளோஸ் செய்துவிட்டு தமிழிசை வெளியே வந்துள்ளார். அந்த மர்ம நபரிடம் இதை பற்றி விசாரணை நடக்கிறது. தமிழிசை இந்த மீட்டிங்கில் பேசுகிறார், இதுதான் மீட்டிங் லிங்க் என்று நன்றாக தெரிந்த ஒருவர்தான் இப்படி மீட்டிங்கில் வந்து அசிங்கமான வேலையை செய்து இருக்க முடியும். தமிழிசையின் பிரச்சார திட்டங்களை தெரிந்தவர்கள் யார் என்று பாஜகவினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சார திட்டங்கள் தெரியாது.. ஒன்று அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் விஷமிகள் செய்து இருக்கலாம்.. அல்லது தமிழிசையின் பிரச்சார பிளான் நன்றாக தெரிந்தவர்கள் இப்படி செய்து இருக்கலாம் என்று பாஜக வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழிசை தெரிவித்துள்ள குற்றச்சாட்டில், இன்று Zoom மீட்டிங்கில் மக்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது சில விஷமிகள் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டனர். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆபாசமான படங்களை Zoom மீட்டிங்கில் பரவ விட்டு உடனே நான் அவர்களோடு பேசுவதை தடுத்துவிட்டார்கள், என்று கூறியுள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications