வெற்றி துரைசாமிக்கு என்ன ஆனது? சட்லஜ் ஆற்றில் இருந்த மூளை யாருடையது? இன்று வெளியாகும் டிஎன்ஏ முடிவு
சென்னை: சட்லஜ் ஆற்றுப் பாறையில் இருந்த மனித மூளையின் பாகங்கள் யாருடையது என்று இன்று முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இமாச்சல பிரதேசம் சட்லஜ் ஆற்றில் பாறை இடுக்குகளில் கிடைத்த மனிதமூளையின் பாகங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சைதை துரைசாமியின் மகன் வெற்றியுடையதா என்பது குறித்த டி.என்.ஏ ஆய்வு முடிவு இன்று வெளியாகிறது.

விபத்து நிகழ்ந்த இடத்தில் சேகரித்த ரத்த மாதிரி பரிசோதனை இன்னொரு பக்கம் நடந்து வருகிறது. அதன் முடிவுகளும் இன்று வெளியாகும். அவரை தேடும் பணியானது 8வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
இதுவரை அவரின் உடல் கிடைக்கவில்லை. அவரின் உடைகள், அவர் பயன்படுத்திய டிராலி பேக் ஆகியவை ஏற்கனவே மீட்கப்பட்டது. இந்த நிலையில்தான் சட்லஜ் ஆற்றுப் பாறையில் இருந்த மனித மூளையின் பாகங்கள் யாருடையது என்று இன்று முடிவு செய்யப்பட உள்ளது.
1 கோடி சன்மானம்; முன்னதாக வெற்றி துரைசாமி குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி அளிக்கப்படும் என்று தந்தை சைதை துரைசாமி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். வெற்றி துரைசாமி சென்ற கார் இமாச்சல பிரதேச மாநிலம் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வெற்றி துரைசாமியை பேரிடர் மீட்பு படையினர் தேடி வரும் நிலையில் தந்தை சைதை துரைசாமி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். ஆனால் இப்போது வரை சைதை துரைசாமி மகனின் உடல் பாகங்கள் மீட்கப்படவில்லை.
பின்னணி: சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. அதிமுக பிரமுகராக இருக்கிறார். இவரது மகன் பெயர் வெற்றி துரைசாமி. இவர் ‛என்றாவது ஒருநாள்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்நிலையில் அடுத்ததாக இயக்கும் படத்துக்காக படப்பிடிப்பு தளங்களை பார்க்க இமாச்சல் பிரதேசம் சென்றார்.
அங்கே ஏற்பட்ட விபத்து காரணமாக சைதை துரைசாமி மகன் ஆற்றில் விழுந்தார். சட்லஜ் ஆற்றில் அவர் விபத்தில் சிக்கினார். இமாச்சல் பிரதேசத்தில் சட்லஜ் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் நிலை என்ன என்பது தெரியாத நிலையில், 8வது நாளாக போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து ஏற்பட்டது எப்படி: இதற்காக சிம்லாவில் ஷூட்டிங் எடுப்பதற்கான லொகேஷனை பார்க்க இமாச்சல் சென்றிருந்தார். உடன் அவருடைய உதவியாளர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவருடன் சென்றிருந்தார்.
அங்கு ஹோட்டலில் சாப்பிட்டு முடித்த வெற்றியும் கோபிநாத்தும் உள்ளூரில் காரை எடுத்துக் கொண்டு ஓட்டுநர் டென்சினுடன் சிம்லா சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது கசாங் நலா எனும் பகுதியில் கார் சென்ற போது ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்தது. இதையடுத்து தகவலறிந்த போலீஸார் ஆற்றுக்குள் விழுந்த காரை கயிறு கட்டி மீட்டனர். அதில் டென்சின் உடல் மீட்கப்பட்டது. கோபிநாத்தும் ஆற்றங்கரையில் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார்.
இன்று முடிவு: இந்த நிலையில்தான் சட்லஜ் ஆற்றுப் பாறையில் இருந்த மனித மூளையின் பாகங்கள் யாருடையது என்று இன்று முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இமாச்சல பிரதேசம் சட்லஜ் ஆற்றில் பாறை இடுக்குகளில் கிடைத்த மனிதமூளையின் பாகங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சைதை துரைசாமியின் மகன் வெற்றியுடையதா என்பது குறித்த டி.என்.ஏ ஆய்வு முடிவு இன்று வெளியாகிறது.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன?












Click it and Unblock the Notifications