சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவர்கள் அப்படித்தான்.. தனித்துவமானவர்கள்.. அரசியல் பாடம் எடுத்த தமிழ்நாடு.. வியந்த வடஇந்தியர்கள்!

லோக்சபா தேர்தலில் இந்தியா முழுக்க ஒரு தேர்தல் முடிவை அளித்திருக்கும் நிலையில், தமிழகம் மட்டும் முழுக்க முழுக்க வேறுமாதிரியான தேர்தல் முடிவை அளித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலில் இந்தியா முழுக்க ஒரு தேர்தல் முடிவை அளித்திருக்கும் நிலையில், தமிழகம் மட்டும் முழுக்க முழுக்க வேறுமாதிரியான தேர்தல் முடிவை அளித்து இருக்கிறது.

லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. இன்னும் ஐந்து வருடத்திற்கு பாஜக ஆட்சிதான் தொடர போகிறது. நாடு முழுக்க இதனால் பாஜகவினர் பெரிய அளவில் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கும் அதிகமாக வென்று இருக்கிறது. அதே சமயம் பாஜக தனியாக 300+ இடங்களை வென்றுள்ளது.

அவர்கள் அப்படித்தான்.. தனித்துவமானவர்கள்.. அரசியல் பாடம் எடுத்த தமிழ்நாடு.. வியந்த வடஇந்தியர்கள்!அவர்கள் அப்படித்தான்.. தனித்துவமானவர்கள்.. அரசியல் பாடம் எடுத்த தமிழ்நாடு.. வியந்த வடஇந்தியர்கள்!

தமிழகம் எப்படி

தமிழகம் எப்படி

ஆனால் தமிழகத்தில் நிலை அப்படி இல்லை. தமிழர்கள் மொத்தமாக பாஜகவை அதன் கூட்டணியை இந்த தேர்தலில் புறக்கணித்து இருக்கிறார்கள். தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெறும் சூழ்நிலை நிலவி வருகிறது. தமிழகத்தில் தேனியில் மட்டுமே அதிமுக வெற்றிமுகத்துடன் இருக்கிறது.

செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்! செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!

ஏன் இப்படி

ஏன் இப்படி

தமிழகம் தேசியத்தை விட அதிகம் மாநில சுயாட்சியை விரும்ப கூடிய மாநிலம். இந்த தேர்தல் முடிவுகளுக்கு இது ஒரு முக்கிய காரணம். திமுக மாநில சுயாட்சியை பேசியதே, இந்த தேர்தலில் அதன் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவை தமிழர்கள் புறக்கணித்ததற்கும் இதுதான் காரணம் என்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

மாநில உரிமை

மாநில உரிமை

அதேபோல் மாநில உரிமை குறித்தும் தமிழர்கள் அதிக கவனம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில வளர்ச்சி, மொழி, முன்னேற்றம் ஆகியவை தமிழக அரசியலில் அதிக முக்கியத்துவம் பெறும். மாறாக வடஇந்தியாவில் மத ரீதியான பிரச்சாரம் எளிதாக வெற்றிபெறுகிறது என்பதே நிதர்சனமான உண்மை. அதேபோல் இங்கு பாகிஸ்தான் மீதான கோபமும் பெரும்பாலானோருக்கு கிடையாது.

அவர்கள் அப்படித்தான்

அவர்கள் அப்படித்தான்

இதுதான் வடஇந்தியர்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி உள்ளது. எப்படி தமிழர்கள் மட்டும் இப்படி வித்தியாசமாக இருக்கிறார்கள். எப்படி தமிழர்கள் மட்டும் வேறு ஒரு அரசியலை கடைபிடிக்கிறார்கள் என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். தமிழர்களின் இந்த அரசியலை வடஇந்தியர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே நிதர்சனம்.

விஸ்வரூபம் எடுத்த விஸ்வரூபம் எடுத்த "மய்யம்" மெளர்யாவும்..வீறு கொண்டு போராடிய காளியம்மாளும்..வட சென்னையில் அனல் போட்டி

அங்கு மட்டும்தான்

தமிழகத்திலும் கேரளாவிலும் மட்டும்தான் பெரிய பாஜக எதிர்ப்பலை நிலவி வருகிறது என்று இவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

எப்படி ஒரு கஷ்ட காலம் பாருங்க.. திமுக வரலாற்றிலேயே இதுதான் கசப்பான வெற்றி! எப்படி ஒரு கஷ்ட காலம் பாருங்க.. திமுக வரலாற்றிலேயே இதுதான் கசப்பான வெற்றி!

எப்படி இவர்கள்

தமிழர்கள்.. அவர்கள் வித்தியாசமானவர்கள்.. அவர்களுக்கு என்று தனி குணம் விதிகள் உள்ளது. அவர்கள் எப்போதும் இந்தியாவிற்கு அரசியல் பாடம் எடுத்து இருக்கிறார்கள்... எப்போதும், என்று இவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
What rest of India talks about Tamilnadu after lok sabha election results?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X