"ஏய்.. குடிச்சா வாசனை வருமாடி.." ஓடும் பஸ்சில் மாறி மாறி பீர் குடித்த மாணவிகள்.. பறந்த நோட்டீஸ்
அரசு பஸ்ஸில் மாணவிகள் பீர் குடிக்கும் வீடியோ தொடர்பாக விசாரணை நடக்கிறது
சென்னை: அரசு பஸ்சில், யூனிபார்முடன் மாணவிகள் பீர் குடிக்கும் வீடியோ தொடர்பாக கல்வித்துறை மற்றும் திருக்கழுக்குன்றம் போலீசாரின் விசாரணை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது... மற்றொரு பக்கம் கல்வியாளர்கள், பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.
திருக்கழுக்குன்றம் அருகே உள்ள பொன்விளைந்த களத்தூரில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது... இங்கு திருக்கழுக்குன்றம், வல்லிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் அரசு பஸ்களில் வந்து செல்கிறார்கள்... அந்த வகையில், செங்கல்பட்டு பிளஸ்-2 படிக்கும் மாணவிகளின் வீடியோதான் பரபரப்பை கிளப்பி வருகிறது.

செங்கல்பட்டு
இந்த மாணவிகள் செங்கல்பட்டில் இருந்து தச்சூர் நோக்கி செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்யும்போது பீர் குடிக்கும் வீடியோ காட்சி வெளியாகியது.. இந்த வீடியோ காட்சி மொத்தம் 34 வினாடிகள் ஓடுகிறது... அதில் மாணவ, மாணவிகள் அனைவருமே நின்றுகொண்டே பயணம் செய்கின்றனர். அப்போது மாணவிகளில் ஒருவர், பீர் பாட்டிலை அசால்டாக தூக்கிப்பிடித்து அதனை குடிக்கிறார்... அவரையடுத்து, பக்கத்தில் இருந்த மற்ற மாணவிகளும், எந்தவித தயக்கமுமின்றி ஒருவர் பின் ஒருவராக அதே பீர் பாட்டில் வாங்கி மாறி மாறி குடிக்கிறார்கள்...

வாசனை வருமாடி
அந்த வீடியோவில் பீர் குடிக்கும் மாணவிகளின் முகம் தெள்ள தெளிவாக தெரிகிறது... "ஏய்.. குடிச்சா வாசனை வருமாடி" என்ற கேட்டுக் கொண்டே அதனை மாணவிகள் ருசித்து குடிக்கிறார்கள். பிறகு, போதையில் மாணவிகள் கூச்சலிட்டு, ரகளை செய்கிறார்கள்.. இந்த மாணவிகளுக்கு பக்கத்திலேயே மாணவர்களும் நிற்கிறார்கள்.. மற்ற பயணிகளும் நிற்கிறார்கள்.. ஆனால், இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஓடும் பஸ்சிலேயே மாணவிகள் பீர் குடித்து முடித்தனர்..

வீடியோ காட்சி
இந்த வீடியோ காட்சியில் பீர் குடிக்கும் மாணவிகளின் முகம் தெளிவாக தெரிகிறது. மேலும் 'குடிச்சா வாசனை வருமாடி' என மாணவிகள் கேட்டபடி ஒவ்வொருவராக குடிக்கின்றனர்... அதைவிட கொடுமை, இப்படி பீர் குடிக்கும் காட்சியை, அதில் உள்ள மாணவி ஒருவரே வீடியோ எடுத்ததுதான்.. அந்த வீடியோதான், 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.

அட்வைஸ்
இது தொடர்பாக கல்வித்துறை மற்றும் திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணையை துவங்கினர்.. பீர் குடித்து ரகளையில் ஈடுபட்ட குறிப்பிட்ட மாணவிகளை மட்டும் தனித்தனியாக அழைத்து அட்வைஸ் செய்து, எச்சரிக்க திட்டமிட்டனர்.. அதேபோல், சம்பந்தப்பட்ட பள்ளியிலும் ஆசிரியர்கள் தனியாக விசாரித்து வருகிறார்கள்... இச்சம்பவம் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மாணவிகள் - பீர்
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மேரி ரோஸ் மிர்மலா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் தாமோதரன் ஆகியோர் சொல்லும்போது, "மாணவிகளின் வீடியோவை பார்த்தோம்... பள்ளியை விட்டு வெளியே சென்றவுடன் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது... இதுபற்றி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க உள்ளோம்... விரைவில் அரசு பொதுதேர்வு தொடங்க உள்ளது. இதற்காக மாணவர்களை தயார் செய்ய ஆசிரியர்கள் கடும் முயற்சி எடுத்து வரும் இந்த வேளையில் இது போன்ற செயல்கள் வருத்தம் அளிக்கிறது" என்றனர்.

கவுன்சிலிங்
இந்நிலையில், சம்மந்தப்பட்ட பள்ளிக்கு குழந்தைகள் நல அலுவலர், செங்கல்பட்டு தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பள்ளி மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கினார்கள்... மேலும் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து அந்த பள்ளிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது... அந்தந்த ஊர்களிலேயே உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை சேர்த்தால்தான் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்கும் என்றும், பள்ளி கல்வி துறையில் சில கடுமையான மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications