சித்தரஞ்சன் சாலை.. 1 மணி நேர மீட்.. முதல்வரிடம் விஜிலென்ஸ் டிஜிபி கந்தசாமி தந்த பைல்.. பரபர பின்னணி!
சென்னை: நேற்று முதல்வர் ஸ்டாலினுடன் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவி டிஜிபி கந்தசாமி நடத்திய மீட்டிங்கில் என்ன பேசப்பட்டது, இதில் கொடுக்கப்பட்ட பைல் ஒன்றில் என்ன இருந்தது என்பது குறித்த விவரங்கள் அடங்கி உள்ளன.
தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள் பலர் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீது இருக்கும் ஊழல், முறைக்கேடு புகார்களை அரசு விசாரிக்க போவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
முக்கியமாக கடந்த ஆட்சியில் நடந்த பல்வேறு பெரிய ஒப்பந்தங்கள் குறித்தும் விசாரிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகின. இந்த நிலையில்தான் நேற்று லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவி டிஜிபி கந்தசாமி முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்.

சித்தரஞ்சன் சாலை
முதல்வர் ஸ்டாலின் நேற்று சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது வீட்டில் கந்தசாமி சந்தித்து பேசினார். 1-1.30 மணி நேரம் நடந்த இந்த மீட்டிங்கில் அதிரடிக்கு பெயர் போன டிஜிபி கந்தசாமிக்கு முக்கிய அசைன்மெண்ட்களை முதல்வர் ஸ்டாலின் கொடுத்து இருக்கிறார். லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவி டிஜிபியாக கந்தசாமி நியமிக்கப்பட்ட போதே அவரிடம் முக்கியமான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

டாஸ்க்
அதன்படி, முன்னாள் அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் மீது இருக்கும் ஊழல் புகார்கள், அவர்கள் செய்திருக்கும் முறைகேடுகளை லிஸ்ட் எடுக்க வேண்டும். இது தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு இருந்தது. கடந்த ஒரு மாதமாக டிஜிபி கந்தசாமி இதற்காக பல்வேறு விசாரணைகளை நடத்தி வந்த நிலையில்தான், முதல்வர் ஸ்டாலினுடன் நேற்று கந்தசாமி டிஜிபி சந்திப்பு நடத்தி உள்ளார்.

என்ன காரணம்
இதில் டிஜிபி கந்தசாமி முக்கியமான கோப்பு ஒன்றை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்து உள்ளார். கடந்த 5 வருட ஆட்சியில் செய்யப்பட்ட முக்கிய ஒப்பந்தங்களின் லிஸ்ட் இது என்று கூறப்படுகிறது. உணவு பொருட்கள் இறக்குமதி ஒப்பந்தம், ரேஷன் பொருட்கள் வாங்கிய ஒப்பந்தம், மின்சார கொள்முதல் என்று பல்வேறு துறைகளில் அதிக விலைக்கு செய்யப்பட்ட ஒப்பந்தங்களை பட்டியலிட்டு, இதில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டது, ஏன் ஒப்பந்தங்கள் தொடங்க குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது என்ற பட்டியலை கொடுத்து இருக்கிறார்.

அமைச்சர்கள்
இதில் சில முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள் வெளிப்படையாக வட்டம் போட்டும் காட்டப்பட்டுள்ளது. யாருக்கு எல்லாம் பணம் கைமாறியுள்ளது, அதிக விலைக்கு டெண்டர் கொடுக்கப்பட்டதால் யாருக்கெல்லாம் பயன் என்ற லிஸ்டும் இதில் இடம்பெற்றுள்ளது என்கிறார்கள். தமிழ்நாடு அரசு இந்த ஊழல் புகார்கள் மீது மூன்று கட்டமாக நடவடிக்கை எடுக்கும் என்கிறார்கள்.

மேலே
முதல் கட்டத்தில் மேலே இருக்கும் சில தலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள். அதன்படி, தற்போது டிஜிபி கந்தசாமி அளித்து இருக்கும், கோப்பில் தற்போது முதல் கட்ட லிஸ்ட் மட்டுமே உள்ளது. இதில் சில பெரிய தலைகளில் பெயர்கள் உள்ளன. இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட லிஸ்ட் இனிதான் எடுக்கப்படும். இந்த முதல் கட்ட லிஸ்டில் 15 நாட்களுக்குள் ஆக்சன் தொடங்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

அமைப்பு
அமைச்சர்கள் மீதான முறைகேட்டு புகார்களை தனியார் அமைப்பு ஒன்று தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. அந்த அமைப்பு கண்டுபிடித்த சில முறைகேடுகள் குறித்தும் இந்த லிஸ்டில் தகவல்கள் reference போல இடம்பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் முக்கியமான சில நடவடிக்கைகளை லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிஒய் கந்தசாமி எடுக்க போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்












Click it and Unblock the Notifications