காவி மெசேஜ்! சக்ஸஸ் பார்முலாவை கையில் எடுத்த திமுக.. பாருங்க ஆளுநருக்கு அடுத்தடுத்து செக்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக தமிழ்நாடு திமுகவினர் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் முக்கியமான பார்முலா ஒன்றை கையில் எடுத்துள்ளனர். மற்ற மாநிலங்களில் வெற்றிபெற்ற பார்முலா ஒன்றை திமுகவினர் இங்கு ஆளுநர் ரவிக்கு எதிராக கையில் எடுத்துள்ளனர்.

Recommended Video

    Governor RN Ravi-க்கு அடுத்தடுத்து செக்.. பின்னணி | Oneindia Tamil

    மேற்கு வங்கம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் ஆளுநரை சந்திக்க கூட மாட்டேன் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    அதோடு ஆளுநர் ஜக்தீப் சிங்கை அவர் ட்விட்டரில் பிளாக் கூட செய்துவிட்டார். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் தெலுங்கானாவிலும் ஆளுநர் தமிழிசைக்கு கே சந்திரசேகர ராவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    தெலுங்கானா மேலவைக்கு கவுசிக் ரெட்டி என்ற எம்எல்ஏவை ஆளும் டிஆர்எஸ் கட்சி பரிந்துரை செய்தது. இதை தமிழிசை ஏற்றுக்கொள்ளாததும் இந்த மோதலுக்கு காரணம். இதன்பின் பல்வேறு அரசு விழாக்களில் தமிழிசை புறக்கணிக்கப்பட்டார். இதை பற்றி தமிழிசை புகார் அளித்தும் கேசிஆர் கண்டுகொள்வதாக இல்லை. அங்கு ஆளுநர் உரை இல்லாமலே பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் நடைபெற்றது. பின்னர் நடந்த பல்வேறு கூட்டங்களில் தமிழிசை புறக்கணிக்கப்பட்டார். அவரை நேரில் சென்று அழைக்க கூட ஆட்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    அதே பார்முலா

    அதே பார்முலா

    அதே பார்முலாவைதான் தற்போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டில் எடுத்துள்ளது. அதிலும் ஒரு படி மேலே போய் ஆளுனருக்கு திமுக கூட்டணி கட்சிகள் கருப்பு கொடி காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டு வருகிறது. ஆளுநர் ரவி வருகையை எதிர்த்து திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு இன்று ஆளுநர் ரவி செல்கிறார். அங்குதான் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் நேற்று மாலை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அமைச்சர்கள் சிலர் கலந்து கொள்வதாக இருந்தும் கூட அவர்கள் கடைசியில் நிகழ்வை புறக்கணித்தனர். அப்படியே தெலுங்கானா,மேற்கு வங்க பார்முலாவை திமுக தமிழ்நாட்டில் கையில் எடுத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

    ஏன் இப்படி சொன்னார்

    ஏன் இப்படி சொன்னார்

    முதல்வர் ஸ்டாலின்.. ஆளுநருக்கு எதிரான எங்கள் நிலைப்பாட்டை அனைத்து மேடைகளிலும் எதிரொலிப்போம் என்று கூறியது பெரிய அளவில் கவனம் பெற்றது. அவர் அப்படி கூறியதுதான் மிச்சம்.. திமுக கூட்டணி கட்சிகள், அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் இன்று ஆளுநர் தொடங்கி வைக்க உள்ள ஞானரதம் அதிகம் கவனத்திற்கு உள்ளானது. அந்த ஞானரதம் முழுக்க முழுக்க காவி நிறத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டு உள்ளது.

    காவி பெயிண்ட்

    காவி பெயிண்ட்

    தெலங்கானாவில் நடைபெற உள்ள புஷ்கர விழாவுக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து விழா எடுக்கப்படும். இங்கிருந்து அந்த ஞானரதம் இன்று தெலுங்கானாவிற்கு செல்ல உள்ளது. இதுதான் காவி நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. இதுவும் திமுக கூட்டணி கட்சிகள் இடையே எதிர்ப்புகளை சந்தித்து உள்ளது. இந்த வாகனத்தையும் நகர விடாமல் போராட்டம் செய்யும் திட்டத்தில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+