அமித் ஷா கார் போன போது.. பட்டென போன மின்சாரம்.. சுருங்கிய முகம்.. ராகேஷ் லக்கானி இப்படி சொல்றாரே!
சென்னை: மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் போது மின் தடை ஏற்பட்டது ஏன் என்று மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக தீவிரமாக பணிகளை செய்ய தொடங்கி உள்ளது. அந்த வகையில் வேலூரில் நடக்கும் 9 ஆண்டு பாஜக ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கலந்து கொள்ள இருக்கிறார்.
இதற்காக அமித் ஷா நேற்று தமிழ்நாடு வந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன்பின் அமைச்சர் அமித் ஷா சென்னையில் உள்ள கிண்டி ஐ.டி.சி ஹோட்டலுக்கு சென்று தங்கினார். அங்கு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.
அதன்பின் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோருடனும் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு அரசு சார்பாக தமிழக உள்துறை செயலாளர் அமுதா இவருக்கு வரவேற்பு கொடுத்தார்.
மின்சாரத் தடை: நேற்று சென்னை விமான நிலையத்துக்கு அமித் ஷா வந்தவுடன் ஒரு பகுதியாக மின்சாரம் தடைபட்டது. அவர் காரில் தொண்டர்களுக்கு கை காட்டிக்கொண்டு இருந்த போது மின்சார தடை ஏற்பட்டது. 15 நிமிடம் அங்கே மின்சார தடை ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் சாலை மறியலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவினரின் போராட்டம் காரணமாக அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. பாஜகவினர் பலரின் முகங்கள் இதனால் சுருங்கியது.
என்ன காரணம்? : இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் போது மின் தடை ஏற்பட்டது ஏன் என்று மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளார். போரூர் சப் ஸ்டேஷன் வழியாகவே பல பகுதிகளுக்கு மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. போரூர் சப் ஸ்டேஷன் வழியாகவே பூந்தமல்லி, கேகே நகர், கூவத்தூர்,செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.
இந்த ஸ்டேஷனுக்கு 2 லட்சம் கிலோ வாட்டில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த லைனில்தான் நேற்று மின்சார பாதிப்பு ஏற்பட்டது. அந்த பாதிப்பு காரணமாக மின்சார தடை ஏற்பட்டது. 9.34க்கு மின்சாரம் போனது. அதை சரி செய்ய நேரம் ஆகும்.
ஆனாலும் 10 மணிக்கு வேறு மின்சார ஸ்டேஷன் வழியாக இங்கே மின்சாரம் வழங்கப்பட்டது., இங்கே பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. 2 மணி நேரத்தில் பணிகள் முடிந்துவிடும். அமித் ஷா வரும் போது சாலை விளக்குகள் அணைய இதுவே காரணம்.
அங்கே இருக்கும் சில டிரான்ஸ்பார்மர்களுக்கு போரூர் சப் ஸ்டேஷன் வழியாகவே மின்சாரம் வழங்கப்படுகிறது. அதனால்தான் இங்கே மின்சாரம் தடை பட்டது. இந்த போரூர் சப் ஸ்டேஷன் பகுதியில் மின்சாரம் இல்லாததால் அங்கும் மின்சாரம் தடை பட்டது.

மாற்று பாதை வழியாக உடனடியாக மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால் ஒரு 15 நிமிடம் மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டது. இரவு நேரத்தில் மின்சாரம் கட் ஆகும் நேரத்தில் அதை சரி செய்ய கொஞ்ச நேரம் ஆகும். ஆனாலும் மாற்று பாதை வழியாக உடனடியாக மின்சாரத்தை வழங்கினோம்.
மழை மற்றும் காற்று காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நாளைக்குள் சோதனை செய்து உண்மையில் என்ன நடந்தது என்ற காரணத்தையும் கண்டுபிடிப்போம், என்று மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications