தமிழகத்தில் சொத்து வழிகாட்டி மதிப்பு இனி எப்படி இருக்கும்? ஹைகோர்ட் உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக, சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்தி வெளியிட்ட தமிழக அரசின் சுற்றறிக்கை செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சொத்துக்களுக்கான வழிகாட்டு மதிப்பில் உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
தமிழகத்தில் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க பத்திரப்பதிவுத் துறை தலைவர் தலைமையில் மதிப்பீட்டுக் குழு செயல்பட்டுவருகிறது.

2023-24ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் உரையில், சொத்துக்களின் விலை அதிகரித்துள்ளதால் வழிகாட்டி மதிப்பீட்டை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், மதிப்பீட்டுக் குழு வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயிக்க கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்பதால், தற்காலிக நடவடிக்கையாக 2017ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி வரை அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீடு அடிப்படையில் மதிப்பீடு நிர்ணயிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன் தொடர்ச்சியாக, 2017ல் அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில், புதிய மதிப்பீட்டை நிர்ணயித்து 2023 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருமென 2023 மார்ச் 30ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து கிரடாய் மற்றும் 3 கட்டுமான நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விதிகளின்படி துணைக் குழுக்கள் அமைத்து, அறிக்கைகள் பெற்று, அவற்றை ஆய்வுசெய்து, பொதுமக்கள் கருத்துகளை பெற்று அதன்பிறகே வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க முடியும் என்ற சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, சுற்றறிக்கையை ரத்துசெய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, கிரடாய் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.
உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு காரணமாக என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளளது. தமிழகத்தில் சொத்துகளுக்கான மதிப்பு பலமடங்கு அதிகரித்த காரணத்தால், கடந்த 2023-24 தமிழக அரசின் பட்ஜெட் உரையில் வழிகாட்டி மதிப்பீட்டையும் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், மதிப்பீட்டுக் குழு வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயம் செய்யகால அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்பதால், தற்காலிக நடவடிக்கையாக 2017-ம் ஆண்டு ஜூன்8 வரை அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில் புதிய மதிப்பீடு நிர்ணயம் செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. மேலும் புதிய வழிகாட்டி மதிப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டு, கடந்த 2023 ஏப்.1 முதல் அமல்படுத்தப்படும் என கடந்த ஆண்டு மார்ச் 30-ல் சுற்றறிக்கையில் கூறியிருந்தது. இதன்படியே இனி தமிழகத்தில் சொத்து வழிகாட்டி மதிப்பின்படி பத்திரங்கள் பதியப்படும்.
இதன் காரணமாக 2017ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு இருந்தை போல், வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி மற்றும் 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் .
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications