விஜய்க்கு சங்கீதா போடப்போகும் பெரிய தடை.. அடுத்தக்கட்ட பிளான் இதுதான்.. பக்காவா இறங்கிட்டாங்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமண வரவேற்பு ஒன்றில் நடிகர் விஜய் - திரிஷா ஒன்றாக கலந்து கொண்டதை தொடர்ந்து, சங்கீதா தரப்பு எடுக்கப்போகும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்துக் கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன..

நேற்று விஜய் மீது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தற்போது சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யும் திரிஷாவும் ஜோடியாக பங்கேற்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

sangeetha vijay

சென்னை திருவான்மியூரில் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமணத்திற்கு விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக ஒரே காரில் வந்துள்ளனர். மேலும் மேடையில் ஒன்றாகவே போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர். அவர்கள் அணிந்திருந்த ஆடைகளும் ஒரே வண்ணத்தில் இருந்தது.

சமீபத்திய தகவல்களின்படி, சங்கீதா ஏற்கனவே விஜய்யின் மீது முறைதகாத உறவு (Adultery), கொடுமை (Cruelty), மற்றும் பிரிந்து வாழ்தல் (Desertion) ஆகிய மூன்று முக்கிய காரணங்களை முன்வைத்து விவாகரத்து மனுவைத் தாக்கல் செய்துள்ளார். நேற்று நடந்த விஜய் - திரிஷா சந்திப்பிற்குப் பிறகு, சங்கீதா தரப்பு பின்வரும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது:

பத்திரிகையாளர் சந்திப்பு

சங்கீதா தனது தரப்பு நியாயங்களை விளக்கிப் பத்திரிகையாளர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். முன்னதாக விஜய்யின் கட்சி நிர்வாகிகளால் சமரசப் பேச்சுவார்த்தை மூலம் இது தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், தற்போதைய சூழலில் அவர் மீண்டும் இதற்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

இடைக்காலத் தடை கோருதல்

விவாகரத்து வழக்கு முடியும் வரை, தனது மன அமைதியைப் பாதிக்கும் வகையில் விஜய் இது போன்ற பொது நிகழ்வுகளில் அந்த நடிகையுடன் வலம் வரக் கூடாது என நீதிமன்றத்தில் 'இடைக்காலத் தடை' (Interim Injunction) கோர வாய்ப்புள்ளது.

பராமரிப்புத் தொகை மற்றும் சொத்துரிமை

பி.என்.எஸ் (BNS) சட்டத்தின் கீழ் 'மனரீதியான கொடுமை' (Mental Cruelty) இழைக்கப்பட்டதாக ஆதாரங்களுடன் வாதிட்டு, பராமரிப்புத் தொகையை (Maintenance) அதிகப்படுத்தவும், விஜய்யின் சொத்துக்களில் சட்டப்பூர்வ பங்கினை உறுதி செய்யவும் சங்கீதாவின் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பட்டினப்பாக்கம் இல்லம்

விவாகரத்து அறிவிப்பிற்குப் பிறகு விஜய் தனது பனையூர் இல்லத்தைத் தவிர்த்து, பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இரண்டாவது வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் ரீதியான தாக்கம்

சமூக ஊடகங்களில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், சுமார் 34% பேர் இந்த விவாகரத்து விவகாரம் விஜய்யின் அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக விவாகரத்து தொடர்பாக சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது ஏப்ரல் 2021ம் ஆண்டு எனக்கு தெரியவந்தது. இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள திருமணம் கடந்த உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன்.

திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார்.

சங்கீதா விவாகரத்து

நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரிய வந்தது. நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.

நடிகையுடன் உறவை முறித்துக் கொள்வதாக கூறிய விஜய் திருந்தவே இல்லை. 2021ல் தொடங்கி என்னை தனியாக வாழுமாறு நிர்பந்தித்தார்.

விஜய் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை 'அந்த' நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
ஆனால், அந்த பதிவுகளுக்கு விஜய் மறுப்புத் தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரித்தார்.

என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருவது எனக்கும் எனது, பிள்ளைகளுக்கும் அவமானத்தை தருகிறது. தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2வது எதிர்மனுதாரராக சேர்ப்பேன், என்று சங்கீதா மனுவில் கூறி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+