3 பேர் அவுட்.. 3 பேர் இன்.. இந்திய அணியை புரட்டி போடும் "மாற்றம்".. ரோஹித் சர்மா எடுத்த அஸ்திரம்!
சென்னை: தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இன்று நடக்க உள்ள மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணியில் ஆட போகும் வீரர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பரபரப்பான தென்னாபிரிக்கா - இந்தியா இடையிலான டி 20 தொடர் இன்று முடிவிற்கு வருகிறது. இன்று மாலை 7 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்க உள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி ஏற்கனவே வென்றுவிட்டது. தொடரை வென்ற நிலையில், மொத்தமாக தென்னாப்பிரிக்காவை வாஷ் அவுட் செய்யும் விதமாக இன்றும் வெற்றிபெற இந்திய அணி திட்டமிட்டுள்ளது.

கோலி
இன்று இந்திய அணியில் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன்படி கோலி இன்று நடக்கும் போட்டியில் ஆடவில்லை. அவருக்கு இன்று ஓய்வு அளிக்கப்படுகிறது. அதேபோல் கே. எல் ராகுல் இன்று ஆட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அவருக்கும் இன்று ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஓப்பனிங் இணை இந்திய அணியில் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மாற்றம்
அதன்படி இன்று சூர்யா குமார் யாதவ் அல்லது பண்ட் ஆகிய இரண்டு பேரில் ஒருவர் ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஓப்பனிங் இறங்க வாய்ப்புகள் உள்ளன. ஷ்ரேயாஸ் ஐயர் இன்று கோலிக்கு பதிலாக அணியில் களமிறங்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய அணியின் டாப் ஆர்டர் மொத்தமாக மாறலாம். அதன்படி ரோஹித், பண்ட், சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஆட வாய்ப்புகள் உள்ளன.

தென்னாப்பிரிக்கா
இது போக இந்திய அணியில் பவுலிங்கில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. அதன்படி சிராஜ் இன்று களமிறங்க வாய்ப்புகள் உள்ளன. அஸ்வினுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம். அல்லது ஹர்ஷல் பட்டேலுக்கு இன்று ஓய்வு கொடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் பவுலிங் ஆர்டரிலும் மாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. அர்ஷிதீப் சிங், அக்சர் பட்டேல், தீபக் சாகர், முகமது சிராஜ் ஆகியோர் இன்று ஆட வாய்ப்புகள் உள்ளன.

இன்றைய அணி
இதனால் இன்று ஆடும் அணியில் ரோஹித், பண்ட், சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், அர்ஷிதீப் சிங், அக்சர் பட்டேல், தீபக் சாகர், அஸ்வின், ஹூடா, முகமது சிராஜ் ஆகியோர் ஆட வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது. கே. எல் ராகுல் ஆடும் பட்சத்தில் ஹுடா அணியில் இருந்து நீக்கப்படலாம். தொடர்ந்து வீரர்கள் பலர் ஆடி வருவதால் காயம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இன்று பலருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications