தோனி ஹெலிகாப்டர் "ஷாட்" போல.. வந்த வேகத்தில்.. பட்டென பென்ட் ஆன மோச்சா புயல்.. ஆ அப்போ தமிழ்நாடு?
சென்னை: வங்கக்கடலில் உருவாகி வரும் மோச்சா புயல் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வளைந்து வருகிறது.
கடும் வெயிலுக்கு இடையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இது வலிமை அடைந்து வருகிறது.

இது இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலிமை அடைந்தது. இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதை தொடர்ந்து வங்கக்கடலில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.
நாளை இந்த புயலுக்கு மோச்சா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நர்கிஸ் சூறாவளி, தெற்காசியாவில் இயற்கை பேரழிவுகளில் ஏற்பட்ட பெரிய புயல்களில் ஒன்றாக இப்போதும் பார்க்கப்படுகிறது, அந்த புயலை போலவே தற்போது உருவாகி வரும் மோச்சா புயலும் உள்ளது.
பொதுவாக கோடைகாலத்தில் தமிழ்நாட்டை புயல் தாக்காது. ஒடிஸாவை சில சமயங்களில் தாக்கி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில்தான் தற்போது உருவாகி வரும் மோச்சா புயல் ஒடிசா அல்லது மேற்கு வங்கத்தை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பொதுவாக ஒரு தாழ்வு மண்டலம் வலிமை அடைந்து புயல் ஏற்பட கடலின் மேல் வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுகிறதே, அதன் மையத்தில் இந்த வெப்பநிலைக்கு மேல் இருக்க வேண்டும்.
ஆனா வங்கக்கடலில் தற்போது 36 டிகிரி செல்சியசுக்கும் அதிக வெப்பநிலை நிலவி வருகிறது. அதனால் இந்த புயல் கண்டிப்பாக உருவாகும். அதோடு மிக மிக வலிமையான புயலாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பென்ட் ஆனது?: வங்கக்கடலில் உருவாகி வரும் மோச்சா புயல் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வளைந்து வருகிறது. அதாவது இது கிட்டத்தட்ட தோனி அடிக்கும் சிக்சில் பந்து எப்படி திசை மாறி செல்லுமோ அப்படி சென்று உள்ளது.
அதாவது முதலில் தென் இந்தியாவை நோக்கி வருவது போல வந்து பின்னர் அப்படியே வளைந்து ஒடிஸாவை நோக்கி செல்வது போல சென்று பின்னர் மேலும் வளைந்து அப்படியே இப்போது மியான்மரை நோக்கி செல்லும் நிலையை எட்டி உள்ளது.
இது மேலும் வளைய வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. பொதுவாக ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலுக்கு நடுவே.. நிலத்தில் இருந்து இன்னும் நீண்ட தூரத்தில் இருந்தால்தான் புயலாக மாற வசதியாக இருக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு பூமியில் இருந்து தூரத்தில் இருக்கிறதோ அவ்வளவு நல்லது. அப்போதுதான் அது முழுதாக உருவாக முடியும்.
ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் பூமிக்கு அருகில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுவோம். இது முழுமையாக உருவாகும் முன் அது கரையை கடக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் பல தாழ்வு மண்டலங்கள் புயலாக மாறாமல் போய் இருக்கின்றன.
ஆனால் இந்த முறை மோச்சா உருவாக மிகவும் சாதகமான சூழ்நிலை உள்ளது. ஆனால் இந்த மோச்சா இப்போது பென்ட் ஆகி அப்படியே மியான்மர் நோக்கி செல்வதால் தமிழ்நாட்டிற்கு ஆபத்து இல்லை.
ஈரப்பதம்: இதனால் தமிழ்நாட்டிற்கு கோடை மழை முற்றிலுமாக குறைந்து வெயில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இயல்பான வெயிலை விட 2-3 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
குடை எடுங்க.. ஜூன் 4ல் தென்மேற்கு பருவமழை கன்பார்ம்! தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications