3 ட்விஸ்டுகள்.. 4 பூதங்கள்.. அதிமுக வழக்கில் ஓபிஎஸ் தோற்றால் என்ன நடக்கும் தெரியுமா? பரபர பின்னணி
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் தோல்வி அடையும் பட்சத்தில் 7 முக்கியமான விஷயங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன.
அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11ம் தேதி நடந்தது. இந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்யப்பட்டார்.
ஆனால் ஓ பன்னீர்செல்வம் இந்த பொதுக்குழு செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஓ பன்னீர்செல்வம் தொடுத்த இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது,

தீர்ப்பு
தற்போது இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்த வாரத்திற்குள் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும். வழக்கில் ஓபிஎஸ் தரப்பு, இபிஎஸ் தரப்பு இரண்டும் முக்கியமான வாதங்களை வைத்துள்ளன. பொதுக்குழு சட்டப்படி நடக்கவில்லை என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் வைத்துள்ளது. அதே சமயம் கட்சியில் எல்லாம் சட்டபடியே நடக்கிறது. பொதுக்குழுவும் சட்டப்படியே நடந்தது என்று எடப்பாடி தரப்பு வாதம் வைத்துள்ளது.

என்ன நடக்கும்?
இந்த வழக்கில் ஓபிஎஸ் தோல்வி அடையும் பட்சத்தில் பின்வரும் 3 விஷயங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன.
ட்விஸ்ட் 1 - ஓபிஎஸ் வழக்கிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. இரட்டை நீதிபதி அமர்விற்கு இது செல்லும். பின்னர் ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றம் செல்லவும் வாய்ப்பு உள்ளது.
ட்விஸ்ட் 2 - சட்ட ரீதியாக வெற்றி கிடைக்கவில்லை என்றால் ஓபிஎஸ் வெளிப்படையாக சசிகலாவுடன் ஐக்கியம் ஆக வாய்ப்பு உள்ளது. சசிகலா - டிடிவி தினகரனுடன் ஓ பன்னீர்செல்வம் ஐக்கியம் ஆகி சமூக ரீதியாக கூட்டணியை உருவாக்க வாய்ப்புள்ளது.

ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்
ட்விஸ்ட் 3 - இது போக ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் தனக்கு ஆதரவாக இருக்கும் நபர்களை திரட்டிக்கொண்டு புதிய கட்சி அல்லது அமைப்பு தொடங்க வாய்ப்பு உள்ளது.
இந்த வழக்கில் எடப்பாடி வெற்றிபெறும் பட்சத்தில் பின் வரும் 4 விஷயங்கள் கட்சிக்குள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன.
விஷயம் 1 - அதிமுகவில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்பி உதயகுமார் நியமனம் செய்யப்பட்டதை ஒப்புக்கொள்ள வேண்டிய சூழ்நிலை சபாநாயகருக்கு ஏற்படும்.
விஷயம் 2 - ஓபி ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை என்று எடப்பாடி தரப்பு அனுப்பிய கடிதம் செல்லுபடியாகும் நிலை ஏற்படும்.

என்ன நடக்கும்
விஷயம் 3 - அதிமுக வங்கி கணக்குகள் எல்லாம் எடப்பாடி தரப்பிடம் தொடரும்.
விஷயம் 4 - அதிமுகவில் நிரந்தர பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தொடர்பான அதிகார்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
இந்த 7 விஷயங்கள்தான் வரும் நாட்களில் அதிமுகவில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற வேண்டும். இந்த வழக்கில் வரும் வாரம் தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications