ஹெச்டிஎப்சி + ஹெச்டிஎப்சி வங்கி இணைப்பால் என்ன நடக்கும்? பேங்க்ல கடன் வாங்குன எல்லாருமே பாருங்க
சென்னை: ஹெச்டிஎப்சியும், ஹெச்டிஎப்சி வங்கியும் ஒன்றாக இணைவதால் வாடிக்கையாளர்கள் சந்திக்க போகும் முக்கியமான மாற்றம் என்ன என்பதை இப்போது பார்ப்போம் ((HDFC merger news in Tamil). பேங்க்ல அக்கவுண்ட் வச்சிருக்குற ஒவ்வொருவருமே அறிய வேண்டிய விஷயம் இதுதான்.
வீட்டுக் கடன் வழங்கும் ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (HDFC) மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவை ஜூலை 1ம் தேதியான இனறு முதல் இணைவதாக அறிவித்துள்ளன. இனி இவை ஹெச்டிஎப்சி வங்கி என்றே அழைக்கப்படும்.

1991-ம் ஆண்டுக்கு பிறகு தனியார் வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது ரிசர்வ் வங்கி முதலில் ஹெச்டிஎப்சி வங்கிக்குதான் அனுமதி அளித்தது . 1994-ம் ஆண்டு முதல் ஹெச்டிஎப்சி வங்கி செயல்பட்டுவருகிறது.
ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் எனப்படும் ஹெச்டிஎப்சி நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைந்துள்ளது. ஒருங்கிணைந்த ஹெச்டிஎப்சி வங்கியில் 41 சதவீத பங்குகள் ஹெச்டிஎப்சி வசம் இருக்கும். 25 ஹெச்டிஎப்சி பங்குகள் இருந்தால் 42 ஹெச்டிஎப்சி வங்கியின் பங்குகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பால் உலகின் மிகப்பெரிய 4வது வங்கியாக ஹெச்டிஎப்சி வங்கி உருவெடுத்துள்ளது.
ஹெச்டிஎப்சியும் ஹெச்டிஎப்சி வங்கியும் ஒன்று தானே என்று நினைக்கிறீர்களா... அப்படீன்னா நீங்கள் தான் இதை அறிய வேண்டியவர்கள். ஹெச்டிஎப்சி என்பது ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆகும். இது நிதி நிறுவனம் என்றாலும் வங்கி அல்ல. இது வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனம் ஆகும். ஆனால் ஹெச்டிஎப்சி வங்கி என்பது நிதி நிறுவனம் அல்ல.. வங்கியாகும். நிதி நிறுவனம் என்பது அதிக வட்டி தரக்கூடியவை. வங்கி என்றால் வட்டி குறைவாகவே இருக்கும். நிதி நிறுவனத்தின் வரையறைகள் வேறு, வங்கிகளின் வரையறை வேறு.
எனவே ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் எனப்படும் வீட்டுக்கடன் வழங்கும் ஹெச்டிஎப்சி லிமிடெட் எனப்படும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் இதில் அறிய வேண்டிய முக்கியமானது என்னவென்றால், உங்கள் பிக்சிட் டெபாசிட்டை நீங்கள் விருப்பப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் ஹெச்டிஎப்சி வங்கியில் அப்படியே தொடரலாம். ஆனால் வட்டி விகிதம் உங்கள் பிக்சிட் டெபாசிட்டுக்கு குறைந்துவிடும். எவ்வளவு குறையும் என்பதை ஹெச்டிஎப்சி வங்கி விரைவில் அறிவிக்கும்.
இதேபோல் ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் எனப்படும் HDFC LTDல் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கும் வட்டி விகிதத்தில் சில மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. காரணம் , ஒரு வங்கி சாரா நிதி நிறுவனமும், ஒரு வங்கியும், கடன் விகிதம் கணக்கிடுவதற்கு அதிகமான வித்தியாசம் உள்ளது. எனவே புதிய வட்டி விகிதம் எப்படி இருக்கும் என்பதை ஹெச்டிஎப்சி வங்கி விரைவில் அதிகாரப்பூர்மாக அறிவிக்கும்.
ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் எனப்படும் HDFC LTDல் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு என்ன நிலை என்று கேட்டால், HDFC LTDஇல் 25 பங்குகள் வைத்திருந்தால், அவர்களுக்கு 42 HDFC BANK பங்குகள் வழங்கப்படும். இந்த விகிதத்தில் பங்குகள் கணக்கிட்டு பங்கு வைத்திருந்தவர்களுக்கு வழங்கப்படும். ஹெச்டிஎப்சி வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு இதனால் எந்த மாற்றமும் இருக்காது. அவர்களுக்கு அப்படியே தான் வட்டி விகிதங்கள் இருக்கும். ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் எனப்படும் HDFC LTDல் வீட்டு கடன் வாங்கியவர்கள் மற்றும் பிக்சிட் டெபாசிட் செய்தவர்கள் மட்டுமே மாற்றத்தை சந்திப்பார்கள்.
ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் எனப்படும் HDFC LTDல் இருந்த ஊழியர்கள் இனி ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர்கள் ஆகிவிடுவார்கள்.வழக்கமான வங்கி சேவையையே இனி அந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும். பெயர் மாறி இருக்கும். அதாவது ஹெச்டிஎப்சி வங்கி என்று பெயர் மாறி இருக்கும். ஹெச்டிஎப்சி வங்கிகளே வீட்டுக்கடன் வழங்கும் சேவையையும் சேர்த்து வழங்க போகிறது.
இது தொடர்பாக ஹெச்டிஎப்சி வங்கியின் தலைவர் தீபக் பரேக், ஜூன் 30 அன்று ஹெச்டிஎஃப்சியின் பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், வீட்டுக் கடன் வணிகம் தொடர்பாக ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு சில முக்கியமான அறிவுரைகளை கூறினார்.
அந்த கடிதத்தில் அவர் கூறுகையில், "வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களிடம் உங்களுக்கு இனி மிகுந்த பொறுமை தேவை. வீட்டுக் கடன் வாடிக்கையாளரின் தேவைகள் மற்றும் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப செயல்படுங்கள். ஒருவேளை வீட்டுக்கடன் விஷயத்தில் சில சிக்கலான பரிவர்த்தனைகள் நடந்துவிட்டால், அவர்களின் கவலையை போக்குபவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் கொடுக்க போகும் தீர்வு அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
அடமான கடன் என்றால் வாடிக்கையாளர்களுக்கு அதுகுறித்து தெளிவான புரிதலை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மொத்தத்தில் வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன் வழங்கும் போது மிகவும் கவனமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications