இப்போ என்ன பண்ணுவீங்க? திரியை கிள்ளி போட்ட கபில் சிபல்.. பாஜக - ஆர்எஸ்எஸ் இடையே பூகம்பம்!
சென்னை: பாஜக - ஆர்எஸ்எஸ் இடையே ஏற்கனவே உரசல் உள்ள நிலையில் இவர்களுக்கு இடையில் திரியை கிள்ளி போட்டு இருக்கிறார் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்.
கடந்த லோக்சபா தேர்தலில் ஆர்எஸ்எஸ் பாஜகவிற்காக வேலை பார்க்கவில்லை. உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பாஜகவின் டாப் மாநிலங்களில் கூட பாஜகவிற்காக ஆர்எஸ்எஸ் வேலை பார்க்கவில்லை.

அதோடு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் சமீபத்தில் பிரதமரை மோடியை விமர்சனம் செய்தார். அதில், மக்களவை பிரச்சாரத்தின் "கண்ணியமான" தன்மை, பணிவு என்பது ஒரு சேவகர் அல்லது பொது ஊழியரின் சிறந்த பண்பு. ஆனால் அதை சிலர் செய்யவில்லை . சில கண்ணியமாக பேசவில்லை. பணிவாக இல்லை. ஒரு சேவகர் தன்னை பற்றி நினைக்க கூடாது. மக்களை பற்றி நினைக்க வேண்டும் என்று மோடியை மறைமுகமாக தாக்கினார்.
அதோடு இல்லாமல் மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும். மணிப்பூரில் நடக்கும் விஷயங்களை தடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். பாஜகவையும், மோடியையும் தனது பேச்சு மூலம் மறைமுகமாக தாக்கினார்.
கிள்ளி போட்ட கபில் சிபல்; பாஜக - ஆர்எஸ்எஸ் இடையே ஏற்கனவே உரசல் உள்ள நிலையில் இவர்களுக்கு இடையில் திரியை கிள்ளி போட்டு இருக்கிறார் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்.
மோகன் பகவத்தை TROLL செய்வீர்களா? நான் பிரதமர் மோடியை மணிப்பூர் போகச் சொன்னபோதும், எதிர்க்கட்சியின் பேச்சைக் கேட்கச் சொன்னபோதும், அகங்காரத்துடன் இருக்கக்கூடாது எனக் கூறியபோதும், அவர் உபயோகிக்கும் வார்த்தைகள் சரியில்லை என சொன்னபோதும் பாஜகவினர் என்னை விமர்சித்தீர்களே.
இப்போது RSS-ன் மோகன் பகவத்தும் அதைதான் சொல்லியிருக்கிறார். அவரை Troll செய்வீர்களா என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆர்எஸ்எஸ் பாஜக பிரிவு: முன்னதாக, ஆர்எஸ்எஸ் - பாஜக இடையே உரசல் நிலவுவதாக வரக்கூடிய செய்திகளுக்கு இடையே பாஜக தலைவர் ஜேபி நட்டா, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து பாஜக கட்சி தனியாக சுதந்திரமாக வளர்ந்துள்ளதாகவும், இனி ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளார்.
பாஜகவின் தேசிய தலைவரே இப்படி நேரடியாக ஆர்எஸ்எஸ் பற்றி குறிப்பிட்டு இருப்பது தேசிய அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக 2024 லோக்சபா தேர்தலுக்கு நடுவில் இந்த வந்திருப்பதுதான் அதிக விவாதத்தை ஏற்படுத்தியது.
என்ன நடந்தது?: சரியாக சொல்ல வேண்டும் என்றால்.. இது ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்து பாஜக சுதந்திரம் பெற்றவிட்ட அறிவிப்பு என்று கூறலாம். நாட்டவே இப்படி கூறி இருக்கிறார் என்றால் அது மோடி - அமித் ஷா அனுமதி இன்றி வந்திருக்காது. இந்த வார்த்தைகளின் விளைவுகளை யோசிக்காமல் நட்டா இதை பேசி இருக்கவே மாட்டார்.
ஆர்எஸ்எஸ் தலையீடு; பாஜக தலைவர் மாற்றம் விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர் ஒருவர் பாஜக தலைவராக வரப்போவதாக தகவல்கள் வருகின்றன.
முதல்முறை மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா சுகாதாரத்துறை அமைச்சராக தேர்வாகி உள்ளார். சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் எனப்படும் இந்த துறையின் அமைச்சராக கடந்த முறை மன்சுவிக் மாண்டவியா இருந் நிலையில் நட்டா அந்த துறையை பெற்றுள்ளார்.
இந்த நிலையில்தான் பாஜகவின் தேசிய தலைவராக இருக்கும் ஜே பி நட்டா மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நட்டாவின் மாற்றம் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது
புதிய தலைவர் தேர்வில் கண்டிப்பாக ஆர்எஸ்எஸ் தலையீடு இருக்கும் என்று கூறப்படுகிறது. தீவிர ஆர்எஸ்எஸ் சேவகர் ஒருவரைத்தான் பாஜக தலைவராக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் முடிவு செய்துள்ளதாம். முக்கியமாக பாஜக தேர்தலில் தனி மெஜாரிட்டி பெறாமல் இருக்க மோடி - ஷா ஆகியோர்தான் காரணம் என்று ஆர்எஸ்எஸ் கருதுகிறதாம்.












Click it and Unblock the Notifications