கலைஞர் மகளிர் உரிமைத்தொகை.. இன்னும் 2 நாள்தான் இருக்கு.. கணக்கில் பணம் வந்ததும்.. இதை பண்ணுங்க!
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தமிழ்நாட்டில் கடந்த மாதத்தில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதில் இரண்டாம் தவணை இன்னும் 2 நாட்களில் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கிவிட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. வந்த உடனே இந்த திட்டத்தை நிறைவேற்ற நிறைய சிக்கல் இருந்தது. முதல் சிக்கல் தமிழ்நாட்டின் நிதி நெருக்கடி. போதிய நிதி இல்லாத காரணத்தால் தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனது.இந்த நிலையில் நிதி நிலைமை ஓரளவிற்கு சீரானது. இதையடுத்து திட்டத்தை தொடங்குவதாக முடிவு எடுக்கப்பட்டது.
முறையான திட்டமிடல்: வெறுமனே திட்டத்தை தொடங்காமல் முறையாக இதற்காக பிளான் போடப்பட்டது . முதலில் திட்டத்திற்கான கணக்கீடு எடுக்கப்பட்டது. அதன்படி எத்தனை பேர் இந்த திட்டத்திற்கு தகுதியாக இருப்பார்கள் என்று கணக்கீடு செய்யப்பட்டது. 1 கோடி பேருக்கு இந்த திட்டத்தின் கீழ் பணம் கொடுக்கப்பட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

அதன்பின் ஆதார் அடிப்படையில் பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பெண்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இரண்டு முகாம்களாக இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்பின் இதை சரி பார்க்கும் பணிகள் நடந்தன. மொத்தமாக 1.70 லட்சம் பேர் இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்தனர்.
அதன்பின் இந்த விண்ணப்பங்கள் சரி செய்யப்பட்டு. மொத்தமாக 1.06 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் தகுதி பெறுவதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு விண்ணப்பத்தில் தேர்வு செய்யப்பட்டதற்கான மெசேஜ் அனுப்பப்பட்டது. தேர்வு செய்யப்படாத நபர்களுக்கு அதற்கான மெசேஜும் அனுப்பப்பட்டது. அதன்பின் தேர்வு ஆன நபர்களுக்கு அதை சோதனை செய்வதற்கான 1 ரூபாய் அனுப்பி சோதனை செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் அறிஞர் அண்ணா பிறந்த நாளில் 20 ஆயிரம் பேருக்கு நேரடியாக முதல்வர் ஸ்டாலின் பணம் வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து மற்றவர்களுக்கு 14ம் தேதி அல்லது 15ம் தேதி வங்கிகளில் நேரடியாக பணம் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த மாதம் அதற்கு முன்பாகவே.. அதாவது 14ம் தேதியே பணம் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 15ம் தேதி வங்கிகள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஒருநாள் முன்னதாகவே பணம் கொடுக்கப்பட உள்ளது.

என்ன செய்யப்படும்?: இந்த நிலையில் இந்த மாதம் உங்களுக்கு பணம் கொடுக்கப்படும் பட்சத்தில் பின்வரும் விஷயங்களை நீங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.
1. பணம் கடந்த மாதம் கொடுக்கப்பட்டு இந்த மாதம் கொடுக்கப்படவில்லை என்றால் உங்களின் உள்ளூர் கிராம அதிகாரிகள், அல்லது நகராட்சி அலுவலகத்தில் நீங்கள் விண்ணப்பம் செய்த அதிகாரியிடமே விண்ணப்பம் செய்யலாம்.
2. நீங்கள் மேல்முறையீடு செய்து அதில் தகுதி பெற்று இருந்தால், அதற்கான மெசேஜ் உங்களுக்கு வரும். தகுதி பெறவில்லை என்றால் இனி நீங்கள் மேல்முறையீடு செய்ய முடியாது.
3. கடைசியாக இந்த திட்டத்தில் உங்களுக்கு இந்த மாதம் பணம் போடப்பட்ட பின் உடனே ரூ. 1000 ரூபாயை வங்கிகள் எடுக்க வாய்ப்பு இல்லை. கடந்த மாதம் ரூ. 1000 போட்டதும் உடனே அதை வங்கிகள் பல மினிமம் பேலன்ஸ் என்று கூறி எடுத்துக்கொண்டன. இந்த முறை அப்படி எடுக்க வாய்ப்பு இல்லை என்றாலும் கூட.. பெண்கள் தங்கள் கணக்கில் பணம் வந்ததும் அதை வேறு கணக்கிற்கு அல்லது கேஷாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications