படத்தை பார்த்த உடன் என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு கண்டுபிடிச்சிடலாம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், நீங்கள் பார்த்ததும் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரியுது என்று சொல்லுங்கள். அதை வைத்து உங்களுடன் பலம் என்னவென்று கண்டுபிடித்துவிடலாம். படத்தை பார்த்ததும் சிறுமி நிற்பது போல் தெரிந்ததா? இல்லை மனித மண்டை ஓடு தெரிந்ததா? இல்லை மரங்கள் தெரிகின்றதா? என்று சொல்லுங்கள். உங்கள் பலம் என்ன என்று சொல்லிவிடலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வைத்து ஒருவரின் ஆளுமைத்திறன், அவரது குணநலன்கள் உள்ளிட்டவற்றையும் ஓரளவு கணித்துவிடலாம் என்று பெரும்பாலான ஆய்வுகள் சொல்கின்றன. அதாவது இத்தகைய இல்யூஷன் படங்கள் பல்வேறு கோணங்களில் கொடுக்கப்பட்டு இருக்கும். ஒரு படத்தை நாம் பார்க்கும் விதத்தை வைத்து படத்தில் உள்ள விஷயங்கள் மாறுவது போல தெரியும்.

ஆப்டிகல் இல்யூஷன்: உதாரணத்திற்கு ஒரு படத்தில் சிங்கம் இருந்தால் மேலோட்டமாக சிங்கம் தெரியும். ஆழ்ந்து மற்றும் வேறு கோணத்தில் பார்த்தால், சிங்கத்திற்கு பதிலாக வேறு விலங்குகளை போல தெரியும் வகையில், இந்த இல்யூஷன் படங்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கும். ஒரு படத்தை நாம் பார்க்கும் கோணம்... எதை முதலில் கவனிக்கிறோம் என்பதை வைத்து ஓரளவு கணித்து விட முடியும்..
சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு மனித மண்டை ஓடு மற்றும் சிறுமி இருப்பது போல தெரிகிறது. பார்த்தவுடன் உங்கள் கண்ணுக்கு சிறுமியின் உருவம் தெரிந்ததா? அல்லது மனித முகம் தெரிந்ததா? அல்லது மரங்கள் தெரிந்ததா என்று சொல்லுங்கள்.. அதை வைத்து உங்கள் பலம், பலவீனம் என்ன என்று ஓரளவு கணித்துவிடலாம்..
உங்கள் கண்களுக்கு முதலில் சிறுமி தெரிந்தால்:
* சவாலான சூழல்களையும் எளிதில் சமாளிக்கும் திறன் பெற்றவர்களாக இருப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் அறிவார்ந்து ஏற்றுக்கொள்ளும் ஆற்றல் இருக்கும். கஷ்டமான காலம் வந்தாலும் கூட உங்கள் மனதிற்குள் அதை எதிர்த்து நிற்கும் தைரியம் இருக்கும். இது உங்களை நம்பிக்கை உள்ளவராக காட்டும். நெருக்கடியான கால கட்டத்திலும் பதற்றமின்றி தன்னம்பிக்கையுடன் செயல் திறன் இருக்கும்.
மண்டை ஓடு முதலில் தெரிந்தால்:
* முதலில் மண்டை ஓடு தெரிந்தால் சிறந்த அறிவாற்றல் மிக்க நபராக இருக்க கூடும். எலும்புக் கூடு என்பது நெகட்டிவ் விஷயம் என்ற ஒரு பார்வை இருந்தாலும் கூட.. இந்த விவகாரத்தில் இது மாறுபாடும் என்கிறார்கள். அதாவது, உங்களின் மனபலம்தான் உங்களின் பெரிய சொத்தாக இருகும். எந்த ஒரு சூழலையும் அமைதியாக அணுகி சாதிக்கும் வல்லமை இருக்கும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை உள்ளார்ந்து ஆராய்ந்து பார்க்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.
முதலில் மரங்கள் தெரிந்தால்:
* உங்களின் உள்ளுணர்வை அதிகம் நம்புவீர்கள். இதுதான் உங்களின் இயல்பான பலமாக இருக்கும். மற்றவர்கள் தடுமாறும் விஷயங்களில் கூட நீங்கள் சிறந்து விளங்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பீர்கள். சவால்கள் அதிகரித்தாலும், உங்கள் மனது என்ன சொல்கிறதோ அதை அப்படியே செய்யும் நபராக இருப்பீர்கள். உங்களுக்கு யாரும் தனியாக வழிகாட்ட வேண்டிய அவசியம் இல்லை..
இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் விஷயங்கள் எல்லாம்.. பொதுவான ஒரு ஜாலியான விஷயங்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது என்றும் அப்படியே 100 சதவீதம் பொருத்திவிடக்கூடாது என்பதும் பலரும் சொல்லும் கருத்தாக உள்ளது என்பதையும் நினைவில் வச்சிக்கோங்க..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications