சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேட்டரே வேறயாம்.. அவசரப்பட்ட எஸ்.ஏ.சி.. அதிரடியாக களம் குதித்த விஜய்.. நடந்தது இதுதானாமே!

விஜய், எஸ்ஏசி இடையே நடந்து வருவது மோதலா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: பனையூர் பண்ணை வீட்டில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.. எஸ்.ஏ.சி. ஏன் இவ்வளவு அவசரப்பட்டார் என்றும் தெரியவில்லை.. ஆனால் விஜய் அதிரடியாக சரியான சமயத்தில் களத்தில் குதித்ததால் பெரும் தலைவலியிலிருந்து ஜஸ்ட் நூலிழையில் தப்பியுள்ளார் என்கிறார்கள்.

அரசியல் ஆர்வம் இல்லாத நடிகர்கள் இன்று இருக்க முடியாது. கொஞ்சம் பேர் புகழ் வந்து விட்டால் போதும்.. முதல்வர் பதவிக்கு ஆசை வந்து விடுகிறது பல நடிகர்களுக்கு.

ஆனால் மிகப் பெரிய உச்சத்தை இந்த இளம் வயதிலேயே தொட்டும் கூட விஜய்யிடம் அப்படிப்பட்ட ஆசையைப் பார்க்க முடியாது. மறைமுகமாகக் கூட அவர் பதவி ஆசை இருப்பதாக காட்டிக் கொண்டதில்லை. காரணம், உண்மையில் அவர் பதவிக்கெல்லாம் ஆசைப்படுபவர் கிடையாது என்பதால்.

 எஸ்.ஏ.சி மூலம் நூல் விட்டுப் பார்த்தும்.. பளிச்சென முறியடித்த விஜய்.. பக்கா தெளிவாக இருக்கிறார்! எஸ்.ஏ.சி மூலம் நூல் விட்டுப் பார்த்தும்.. பளிச்சென முறியடித்த விஜய்.. பக்கா தெளிவாக இருக்கிறார்!

தர்மசங்கடம்

தர்மசங்கடம்

ஆனால் அவரது அப்பா எஸ்.ஏ.சி. நேற்று செய்த திடீர் கூத்தால் விஜய்க்கு பெரும் தர்மசங்கடமாகி விட்டது. அவரது பெயரில் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் திடீரென அவர் பதிவு செய்ததால் விஜய் ரசிகர்கள் ஒரு நிமிடம் உற்சாகத்தின் உச்சத்துக்கே போய் விட்டனர்.

 மின்னல் வேகம்

மின்னல் வேகம்

இதற்காகத்தானே காத்திருக்கோம் என்று அதி உற்சாகமாக மாறி விட்டனர். ஆனால் விஜய் தரப்பு மின்னல் வேகத்தில் இதை மறுத்து விட்டது. அத்தோடு நில்லாமல் நேரடியாக விஜய்யே அறிக்கை விட்டு இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அப்பா கட்சியில் யாரும் சேராதீங்க என்றும் தடை போட்டு விட்டார். இது ரசிகர்களை குழப்பி விட்டது. ஆனால் சட்டென என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்து உஷாராகி விட்டனர்.

 சமாளிப்பு

சமாளிப்பு

விஜய் மட்டும் உரிய சமயத்தில் தலையிடாமல் போயிருந்தால் மேட்டர் வேறு விதமாக போய் விஜய்யின் பெயரே கெட்டுப் போயிருக்கும். ஆனால் விஜய் சமயோஜிதமாக அதைத் தவிர்த்து விட்டார்.. உண்மையில் சொல்வதாக இருந்தால் தன்னை பெரிய இக்கட்டிலிருந்து அவரே காப்பாற்றிக் கொண்டு விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

 படங்கள்

படங்கள்

விஜய்க்கு அரசியல் ஆசை இல்லாமல் எல்லாம் இல்லை. நிச்சயம் இருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது அவரது எண்ணம். இதை தனிப்பட்ட முறையில் நிறையவே செய்து வருகிறார். தனது படங்களிலும் சமூக கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ஆனால் உடனடி அரசியல் என்பது அவரது திட்டம் இல்லை என்று சொல்கிறார்கள்.

 பண்ணை வீடு

பண்ணை வீடு

சமீபத்தில் கூட தனது பண்ணை வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். அப்போது கூட அரசியல் பேசப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இப்போது வேண்டாம், அடுத்த தேர்தலில் பார்த்துக்கலாம் என்று விஜய் கூறியதாக சொல்கிறார்கள். இன்னும் கொஞ்சம் வயது கூடட்டும், அனுபவம் சேரட்டும், பிறகு இறங்கினால்தான் பொருத்தமாக இருக்கும் என்பது விஜய்யின் எண்ணமாம்.

அவசரம்

அவசரம்

ஆனால் அவரது அப்பாதான் அவசரப்படுகிறாராம். இப்போது வந்தால்தான் சரியாக இருக்கும். ரஜினியும் வரப் போவதில்லை. மற்ற கட்சிகளும் பலவீனமாகவே உள்ளன. விஜய்க்கு மக்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பும், மதிப்பும் உள்ளது. எல்லாம் கூடி வருகிறது. இப்போது இறங்கினால் அது சுபமாக இருக்கும் என்பது எஸ்ஏசியின் எண்ணமாம்.

தெளிவு

தெளிவு

ஆனால் அதற்கு விஜய் உடன்பட்டு வரவில்லையாம். நான் அவசரப்பட விரும்பவில்லை என்பதே விஜய்யின் நிலைப்பாடு என்கிறார்கள். ஆனால் மகனை மறைமுகமாக வழிக்கு கொண்டு வரலாம் என்று ஒரு கணக்குப் போட்டு எஸ்ஏசி களம் இறங்கியுள்ளார். ஆனால் அது தப்புக் கணக்காகி போய் விட்டதாம். மகனுக்கு நல்ல வழி காண்பிப்பதாக நினைத்து சொதப்பி விட்டார் எஸ்ஏசி என்கிறார்கள்.. எப்படியோ விஜய் தெளிவாக இருப்பதால் தப்பியுள்ளார்.

English summary
Whats the actual reason behind in Actor ViJays Political explanation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X