ஆரம்பிச்சிட்டாங்களே.. ஊட்டியில் காட்டேஜ் காலியா? இ-பாஸால் கூடிய வியாபாரிகள்.. நாளும் குறிச்சிட்டாங்க
சென்னை: இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று ஊட்டி வியாபாரிகள் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
கொரோனா காலத்தில் ஒரு மாவட்டத்திலிருந்து, இன்னொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு இ-பாஸ் விண்ணப்பித்தது போலவே, ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்வதற்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட வேண்டும் என்று ஹைகோர்ட் கூறியிருந்தது.

அந்தவகையில், கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட கோடைவாசஸ்தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. தற்போது நடைமுறைக்கும் இது வந்துள்ளது..
மகிழ்ச்சி: இந்த புதிய உத்தரவு காரணமாக ஊட்டி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நீதிமன்ற உத்தரவையும் உடனடியாக வரவேற்றுள்ளனர்.. காரணம், எப்போதுமே, கோடையில் நீலகிரி மாவட்டமே சுற்றுலா பயணிகளின் வருகையால் நிரம்பி வழியும்.. அதுவும் இல்லாமல், தற்போது சமவெளிப்பகுதியில் கடும் வெயில் என்பதால் ஊட்டிக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
வழக்கமான நாட்களில் 2 ஆயிரம் வாகனங்கள் வந்துசெல்லும் நிலையில், சீசன் நேரங்களில் மட்டும் தினமும் 20 ஆயிரத்துக்கும் மேல் வாகனங்கள் ஊட்டிக்கு வந்து செல்லும்.. இதனால், சீசன் நேரத்தில் மட்டும் போக்குவரத்து நெரிசல் அளவுக்கு அதிகமாகவே காணப்படும்.
வாகனங்கள் எண்ணிக்கை: குறிப்பாக, ஊட்டி-மேட்டுப்பாளையம், கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை மற்றும் ஊட்டி நகர பகுதிகளில் உள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடும். இது உள்ளூர் மக்களுக்கு மிகுந்த சிரமத்தையும் ஏற்படுத்திவிடும்.
காலையில் 6 மணியிலிருந்தே வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து விடுவதால், அவசரத்துக்குகூட எங்குமே வெளியில் செல்ல முடிவதில்லை.. இந்த இ-பாஸ் நடைமுறையால், நெரிசல் குறைகிறது என்று உள்ளூர் மக்கள் சொல்கிறார்கள்.. மேலும், வாகனங்களின் நச்சுப்புகைகள், மலைமாவட்டத்தின் இயற்கை வளத்தையே பாதித்துவிடும் அபாயமும் இனி இருக்காது என்று மகிழ்ந்து சொல்கிறார்கள் ஊட்டி மக்கள்.
ஊட்டி வியாபாரிகள்: ஆனால், ஊட்டி வியாபாரிகளோ கொந்தளித்து போயிருக்கிறார்கள்.. இது ஒரு சுற்றுலா தலம் என்பதால், சீசனில் மட்டும் வியாபாரம் நடக்கும்.. குறிப்பாக, கோடையில் 2 மாதங்களில் நடக்கும் வியாபாரத்தையை முழுமையாக நம்பியிருக்கிறார்கள்..
ஆனால், இப்போது இ-பாஸ் காரணமாக, சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து வருகிறதாம். ஊட்டியில் காட்டேஜ்களிலும், லாட்ஜ்களிலும் முன்பதிவு செய்தவர்கள் இப்போது அதனை ரத்து செய்து வருவதால், கடந்த 3 நாட்களாகவே பெரும்பாலான காட்டேஜ்கள் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுவதாக கூறுகிறார்கள்.
சுற்றுலா பயணிகள்: சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பி தொழில் செய்யும் வியாபாரிகள் இதனால் கதிகலங்கி போயிருக்கிறார்கள்.. ஓட்டல், காட்டேஜ் ஓனர்கள் என அனைத்து வியாபாரிகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதால், இ-பாஸ் நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒருவேளை, இ-பாஸ் நடைமுறை வாபஸ் பெறாவிட்டால், மலர் கண்காட்சி தினத்தில், ஒரு நாள் அனைத்து வியாபாரிகள் சங்கங்களை ஒருங்கிணைத்து கடையடைப்பு போராட்டம் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து வியாபாரிகளும் ஆதரவு அளித்தால் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தையும் நடத்துவோம் என்றும் அதிரடியாக அறிவித்திருக்கிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications