சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திதி + தேதி.. பழனிசாமி ஒன்னு சொல்றாரு.. அவர் ஒன்னு சொல்றாரு.. பரிதாப ஜெயலலிதா.. குழம்பும் தொண்டர்கள்

ஜெயலலிதா எந்த தேதியில் இறந்தார் என்ற குழப்பம் தொண்டர்களிடம் நிலவி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதா எப்போது மரணமடைந்தார் என்று கட்சியினரும் தேதி குழப்பத்தில் இருப்பது, தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறதாம்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டதால்தான், ஆறுமுகசாமி ஆணையம் 2017ம் ஆண்டு அமைக்கப்பட்டது... ஆணையமும், ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்கள் என்று பல்வேறு தரப்பை சேர்ந்த 158 பேரிடம் விசாரித்தது.

ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரையும் அழைத்து விசாரணை நடத்தியது... பல முறை ஆறுமுகசாமி ஆணையத்திற்கு கால அவகாசம் வழங்கிய நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தாக்கல் செய்திருந்தார்.

ஜெயலலிதா நினைவிடத்தில்.. சசிகலா கண்களில் பெருக்கெடுத்த கண்ணீர்.. அதிரடியாக உறுதிமொழி ஏற்பு! ஜெயலலிதா நினைவிடத்தில்.. சசிகலா கண்களில் பெருக்கெடுத்த கண்ணீர்.. அதிரடியாக உறுதிமொழி ஏற்பு!

முரண்பாடு

முரண்பாடு

அதில், ஜெயலலிதா இறந்த தேதியில் முரண்பாடு இருப்பதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருந்தது.. ஜெயலலிதா காலமானது 2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11 மணிக்கு என்று சொல்லப்பட்டது. ஆனால் ஜெயலலிதா டிசம்பர் 4ம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கே காலமானதாக ஆறுமுகசாமி ஆணையம் குறிப்பிட்டுள்ளது... அந்த நேரத்தை கருத்தில் கொண்டே ஜெயலலிதாவுக்கு அவரது அண்ணன் மகன் ஜெ.தீபக் முதலாமாண்டு திதி கொடுத்தார் என பஞ்சாங்க ஆவணத்தை மேற்கோள் காட்டியிருந்தது ஆணையம்.

பழனிசாமி

பழனிசாமி

ஆனால், ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் எல்லோரும் ஆளாளுக்கு ஒரு தகவலை வெளியிட்டார்கள்... அவர் இறந்த பிறகும் அதுபோலவே தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.. அதாவது ஜெயலலிதாவின் நினைவு நாள் டிசம்பர் 5-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், மூத்த தலைவர் கே.சி.பழனிசாமி 4-ந்தேதியே ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

 பதிவேடுகள்

பதிவேடுகள்

அப்போது செய்தியாளர்களிடமும் பழனிசாமி பேசியபோது, "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான நினைவு தினம் இன்று தான்.. ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்த எடப்பாடி பழனிசாமியும், அமைக்கச்சொன்ன ஓபிஎஸ்ஸும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை ஏற்றுக்கொண்டு, அடுத்த வருடத்தில் இருந்தாவது, டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதா நினைவு நாளை கடைபிடிக்க வேண்டும்.. அதேபோல, ஆறுமுகசாமிஆணையத்தின் அறிக்கைப்படி தமிழக அரசும், மத்திய அரசும் ஜெயலலிதாவின் நினைவு நாளை டிசம்பர் 4 என்று அரசாங்க பதிவேடுகளில் திருத்தம் செய்ய வேண்டும்" என்று கோரிக்கையும் வைத்துவிட்டு போனார்.

 வேளாங்கண்ணி பீச்

வேளாங்கண்ணி பீச்

அதுபோலவே, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் 4-ந்தேதியே வேளாங்கண்ணி பீச்சுக்கு சென்று திதி கொடுத்து அஞ்சலி செலுத்தி இருக்கிறார்... கேசி பழனிசாமியும், மணியனும் ஜெயலலிதா மறைந்த நாள் டிசம்பர் 4 தான் என்று அடித்து சொல்கிறார்கள்... ஏற்கனவே 5-ந்தேதி இரவு ஜெயலலிதா மறைந்தார் என்று மருத்துவமனை பதிவேடுகளில் சொல்லியிருந்தாலும், ஆறுமுகசாமி ஆணையம் அதை மறுத்து விட்டது. 4-ந்தேதியே அவர் இறந்து விட்டதாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி குறிப்பிட்டுள்ளனர்.. இந்த நிலையில் கட்சியினரும் தேதி குழப்பத்தில் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தொண்டர்கள் சொல்கிறார்களாம்.

 ரத்தத்தின் ரத்தம்

ரத்தத்தின் ரத்தம்

ஜெயலலிதா மரணத்தில் குழப்பமாக இருக்கிறது என்பதற்காகத்தான் விசாரணை கமிட்டியே அமைக்கப்பட்டது.. கமிட்டியில் விசாரணை நடத்தி ரிப்போர்ட் தந்தும்கூட குழப்பம் அடங்காமல் உள்ளது, ரத்தத்தின் ரத்தங்களை அதிர வைத்துள்ளதாம்... ஆனாலும், 75 நாட்களும் சிகிச்சை முடியும்வரை., ஜெயலலிதா எப்படி இருந்தார் என்பதே வெளியே தெரியாமல் போய்விட்டது.. அதைவிட கொடுமை, ஒரு மாநில முதல்வர், எப்போது இறந்தார் என்பது கூட தெரியாமல் குழப்பத்தில் தலைவர்கள் இருப்பது..!!

English summary
When did Jayalalitha die and the date confusion among AIADMK Leaders
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X