"பழைய" பன்னீர்செல்வம் வரப்போறாராம்.. இதோ இதான் பிளான்.. அச்சாரமும் போட்டாச்சு.. கவனிக்கும் எடப்பாடி
2 விதமான பிளான்களுடன் ஓபிஎஸ் மீண்டும் களம் இறங்க போவதால் எடப்பாடி தரப்பு கலக்கத்தில் உள்ளதாம்
சென்னை: ஓபிஎஸ் அரசியலை இந்த இடைத்தேர்தலுடன் அஸ்தமனம் செய்துவிடலாம் என்று எடப்பாடி டீம் கணக்கு போட்டு வரும்நிலையில், அந்த கணக்கு சொதப்பல் ஆகிவிடும் என தெரிகிறது.. ஓபிஎஸ் 2 பிளான்களுடன் ரெடியாகி வருகிறாராம்..!!
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ள நிலையில், உற்சாகம் கூடியுள்ள நிலையில், அடுத்து ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது..
ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பில், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், பண்ருட்டி ராமச்சந்திரன், மருது அழகுராஜ் உள்ளிட்ட சீனியர்கள் மட்டுமே உள்ள நிலையில், மெல்ல மெல்ல ஓபிஎஸ்ஸின் கூடாரமும் கலைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.

சசி அதிரடி
"பாஜகவை நம்பி நம்பியே, ஓபிஎஸ் ஏமாந்து நிற்க, ஓபிஎஸ்ஸை நம்பி நம்பியே நாங்களும் ஏமாந்து நிற்கிறோம்" என்று அவரது ஆதரவாளர்கள் நொந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்களாம்.. அதிலும் இந்த இடைத்தேர்தலில் ஓபிஎஸ்ஸின் நிலைப்பாடு + கோர்ட் உத்தரவுகள் என அடுத்த விவகாரங்களை எல்லாம் பார்த்து அதிர்ந்தும், குழம்பியும் போயுள்ளார்களாம் ஓபிஎஸ் நிர்வாகிகள்.. இப்படிப்பட்ட அதிருப்தியாளர்களுக்குதான், திமுக ஒருபக்கமும், எடப்பாடி தரப்பு மறுபக்கமும் தூண்டிலை போட்டு வருகிறது.. இன்னும் சில நாட்களில், அநேகமாக இரு தரப்புக்கு, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பிரிந்து செல்லக்கூடும் என்றும் தகவல்கள் கசிந்து வருகின்றன..

கலையும் கூடாரம்
எனினும், ஓபிஎஸ் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற கடைசி நம்பிக்கையிலும் அவரது ஆதரவாளர்கள் எதிர்நோக்குவதாக தெரிகிறது. ஓபிஎஸ் குடும்பத்தில் அவரது சகோதரர், அவரது மனைவி, நெருங்கிய உறவினர்கள் 2 பேர் என அடுத்தடுத்து தொடர்ந்து துக்க நிகழ்வுகள் நடந்துள்ளன.. ஏற்கனவே அரசியலிலும் பல்வேறு தொடர் சறுக்கல்களில் இருந்து வரும்நிலையில், தற்போது அம்மாவும் காலமாகி உள்ளார்.. இதனால் தனிப்பட்ட முறையில் கடுமையான மனவருத்தத்தில் இருக்கிறார் ஓபிஎஸ்.. தன்னுடைய தாய்க்கு செய்ய வேண்டிய சில சடங்குகளை செய்ய வேண்டி உள்ளதால், சில நாட்கள் தேனியில் இருக்க வேண்டி சூழல் உள்ளதாக தெரிகிறது.

மாஸ் ப்ளான்கள்
இதற்கு பிறகுதான், அரசியல் பக்கம் கவனத்தை தீவிரமாக திருப்ப உள்ளதாகவும், இதற்காகவே 2 விதமான திட்டங்களை ஓபிஎஸ் கையில் எடுக்கக்கூடும் என்றும் சொல்கிறார்கள். சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அடிப்படையில், சென்னை ஹைகோர்ட் சிவில் கோர்ட்டில் கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு தீர்மானங்கள் எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தீவிரப்படுத்துவது குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது... தேர்தல் ஆணையத்தில் ஒபிஎஸ் தரப்பு முறையிட்ட நிலையில் அதுகுறித்து நேரிலும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட திட்டம் வைத்துள்ளதாம் ஓபிஎஸ்..

டூ இன் ஒன்
அதேபோல, விரைவில் முப்பெரும் விழா ஒன்றை நடத்த போகிறாராம் ஓபிஎஸ்.. அதிமுக தொடங்கிய ஐம்பதாவது ஆண்டு + ஜெயலலிதா பிறந்தநாள் + எம்ஜிஆர் பிறந்தநாள் ஆகியவையை உள்ளடக்கி முப்பெரும் விழாவை, மாநாடாக நடத்த திட்டமிட்டுள்ளர் ஓபிஎஸ்.. அடுத்த மாதம் திருச்சியில் நடத்த போகிறாராம்.. ஆனால், இன்னும் தேதி முடிவாகவில்லை.. மற்றபடி, அனைத்து ஏற்பாடுகளையும், ஓபிஎஸ் டீம் செய்ய தயாராகி வருகிறது.. இந்த மாநாட்டில் முக்கிய முடிவினை ஓபிஎஸ் எடுக்கக்கூடும் என்கிறார்கள்..

அச்சாரங்கள்
அதேபோல, இந்த மாநாட்டிற்கு, சசிகலா மற்றும் டிடிவி தினகரனை ஓபிஎஸ் நிச்சயம் அழைக்கக்கூடும் என்றும், ஓரணியாக இவர்கள் அனைவரும் திரள இந்த மாநாடு அச்சாரம் போடுவதாக அமையும் என்றும் நம்பப்படுகிறது. இத்தனை பிளான்களையும் ஓபிஎஸ் வைத்திருப்பதால், எடப்பாடி தரப்புக்கு இதில் ஏதாவது ஒருவகையில் செக் வைக்க முடியும் என்றும் பலமாக நம்புகிறாராம்.. எனினும் இதெல்லாம் எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை..

சங்கிலி சறுக்கல்
காரணம், அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம் என்று சொல்லி கொண்டிருக்கிறார் டிடிவி தினகரன்.. ஒன்றிணைந்த அதிமுக உருவாக்கும் வரை ஓயமாட்டோம் என்கிறார் விகே சசிகலா.. மக்கள் எங்கள் பக்கம்தான் என்கிறார் ஓபிஎஸ்.. இப்படி ஆளுக்கு ஒருபக்கம் ஒவ்வொரு நிலைப்பாட்டில் உள்ள நிலையில், இவர்கள் ஒன்றிணைய வாய்ப்பிருக்கிறதா? இந்த தலைவர்கள் ஒன்றிணைந்தாலும், இவர்களின் ஆதரவாளர்களும், தொண்டர்களும் அதற்கு தயாராக இருக்கிறார்களா? என்பதெல்லாம் தெரியவில்லை.. ஆனால், தற்போது ஓபிஎஸ் ஒதுங்கியிருக்கவில்லை.. பதுங்கி பாய போகிறார் என்பது ஓரளவு புரிகிறது. அடுத்து என்ன நடக்க போகிறது தெரியவில்லை.. பார்ப்போம்...!!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications