அசையுது "மணல் கோட்டை".. அங்கேயிருந்து பறந்து வந்த "மெசேஜ்".. எடப்பாடி சமாளிப்பாரா.. அதிரும் அதிமுக
எடப்பாடி தரப்புக்கு எதிராக, ஓபிஎஸ் டீமும் புது ஐடியாக்களுடன் களமிறங்க தயாராகி வருகிறதாம்
சென்னை: 99 சதவீதம் எடப்பாடி பழனிசாமி கையில் அதிமுக வந்துவிட்டதாக சொல்லப்பட்டு வரும்நிலையில், ஓபிஎஸ் அடுத்து என்ன செய்ய போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. தன்னுடைய வலதுகரமான வைத்திலிங்கத்தை, தங்கள் பக்கம் கொண்டுவர எடப்பாடி டீம் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி வரும்நிலையில், ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்த 2 அதிரடிகளை தற்சமயம் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.. அதிலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு புதிய தெம்பினை தந்துள்ளதாம்.
40 ஆயிரம் ஓட்டுக்கள் என்பதே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டதுடன், டெபாசிட்டையும் தக்க வைத்துள்ள நிலையில், மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ள போகிறாராம் எடப்பாடி பழனிசாமி..

சாயும் பாஜக
கடந்த வாரம் இதே போல ஒரு அறிவிப்பைதான், ஓபிஎஸ் தரப்பில் உள்ள மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்திருந்தார். பாஜகவிடம் அளவுக்கு மீறி பணிந்து சென்று, கடைசியில் நிர்க்கதியாய் நிற்க வைத்துவிட்ட அதிர்ச்சியும், அதிருப்தியும் ஓபிஎஸ் கூடாரத்தை கவ்வியுள்ளதாக தெரிகிறது.. அதனால்தான் இனியும் பாஜக பக்கம் சாயாமல், மக்களிடம் நெருங்கியிருக்கவும் முடிவு செய்துள்ளதாம்.. எனவேதான், கடந்த வாரம் பண்ருட்டியார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மக்களிடம் செல்ல போகிறோம். மக்கள் மன்றத்தை நாட போகிறோம்" என்று கூறியிருந்தார்.

பண்ருட்டி ராமச்சந்திரன்
அதன்படியே சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தி, எடப்பாடி + திமுக தரப்பை கவனிக்கும்படி செய்திருந்தனர்.. எனினும், எடப்பாடி பழனிசாமி டீம் ஆர்ப்பரிப்புடன் மேம்பட்டு இருப்பதால் ஓபிஎஸ்ஸும், அவரது ஆதரவாளர்களும் மவுனமாக இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்... இப்படியே இதே நிலை நீடித்தால், எதிர்கால அரசியல் கேள்விக்குறியாகிவிடும் என்ற நிலைக்கு ஆளாக நேரிடும் என்பதையும் உணர்ந்துள்ளனர்.. அதனால்தான், ஓபிஎஸ் தன்னுடைய நிர்வாகிகளுடன் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று தீவிர ஆலோசனை செய்து வருகிறாராம்.. ஓபிஎஸ் தரப்புக்கு, மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரனும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருவதாக தெரிகிறது.

வைத்திலிங்கம்
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டங்களை நடத்த ஓபிஎஸ் அணி மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.. இதன் முதல் கூட்டம், திருச்சியில் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது... அதற்கு பிறகு, கோவை, மதுரை நகரங்களில் முப்பெரும் விழாக்களை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்... இறுதியில் சென்னையிலும் மிகப்பெரிய முப்பெரும் விழாவை நடத்த ஓபிஎஸ் டீம் திட்டமிட்டு வருகிறது.. மிகுந்த கவனத்தை ஏற்படுத்திவரும் திருச்சி மாநாட்டு பணிகளை, மூத்த தலைவர் வைத்திலிங்கம் செய்து வந்தாலும், சென்னை உட்பட பிற இடங்களில் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை ஓபிஎஸ் ஆதரவாளர்களும் சத்தமின்றி செய்து வருவதாக தெரிகிறது.

வெட்டவெளிச்சங்கள்
தங்களுக்கும் அடிமட்ட அளவில் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் கூட்டத்தை திரட்டவே ஓபிஎஸ் டீம் இப்படி ஒரு முயற்சியை கையில் எடுக்கிறதாம்.. இப்படி தொடர் நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் தங்கள் தொண்டர்கள், நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முகாமுக்கு தாவுவதை தடுக்கலாம் என்றும் ஓபிஎஸ் தரப்பு கருதுகிறதாம்.. அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் அணியில் உள்ள சில தலைவர்கள், எடப்பாடி பழனிசாமி பக்கம் போக பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தகவல் வெளிவந்தபடியே உள்ளன.. இதை தடுப்பதற்காகதவே ஓபிஎஸ் டீம் கடுமையாக போராடி கொண்டிருக்கிறாம்.. அடுத்த கட்டமாக மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்துள்ள வழக்கில் கிடைக்கும் தீர்ப்பை பொறுத்து வேறு என்ன செய்வது என்று தீர்மானிக்க ஓபிஎஸ் அணியினர் முடிவு செய்திருக்கிறார்களாம்.

தடித்த வார்த்தை
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், கூட்டணி விவகாரங்கள் குறித்த தகவலும் ஓரளவு கசிந்து வருகிறது.. அதாவது, எடப்பாடி - பாஜக இரு தரப்பிலும் அதிருப்திகளும், சலசலப்புகளும் வெடித்து வருகின்றன.. கூட்டணி தொடரும் என்றும், நிர்வாகிகள் யாரையும் விமர்சிக்க கூடாது என்று இரு கட்சி தலைமையும் உத்தரவு பிறப்பித்தாலும்கூட, ஒருவருக்கொருவர் எல்லைமீறி விமர்சித்து வருகிறார்கள்.. தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி, தங்கள் கோபத்தையும் வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.. இத்தனைக்கும் சொந்த மண்ணில், சொந்த சமூகத்தை சேர்ந்த எடப்பாடிக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆதரவாக இருப்பதாகவே கூறப்பட்டது..

அசையும் கூடாரம்
எடப்பாடிக்கு, ஓவர் சப்போர்ட்டாக அண்ணாமலை இருப்பதாக குற்றம்சாட்டியே, ஓபிஎஸ் கூடாரம் அதிருப்தி கொண்டதுடன், அண்ணாமலைக்கு எதிரான தீர்மானத்தையும் நிறைவேற்ற செய்தது. அந்த அளவுக்கு எடப்பாடியும், அண்ணாமலையும் இணக்கமாக இருந்துவந்த நிலையில், தற்போது திடீரென மோதல்கள் வெடித்துள்ளன.. எனினும், இவர்கள் இருவரும் என்றைக்கு வேண்டுமானாலும் சமாதானமாகிவிடுவார்கள், ஒன்றாக இணைந்துவிடுவார்கள் என்பதை ஓபிஎஸ் தரப்பு நன்றாகவே அறிந்து வைத்துள்ளதாம்.. அதனால்தான், மாநில பாஜக தன்னை கைவிட்டாலும், மத்திய பாஜக தன்னை ஒருபோதும் கைவிடாது என்று பலமாகவே நம்பி கொண்டிருக்கிறது..

ஓவர் ஸ்பீடு
அதுமட்டுமல்லாமல், கடந்த 4 நாட்களுக்கு முன்புகூட, ஓபிஎஸ் தரப்புக்கு ஒரு மேலிடத்தில் இருந்து ஆதரவு மெசேஜ் ஒன்று பறந்ததாம்.. இதுதான், இத்தனை களேபரத்திலும், புதுதெம்பை ஓபிஎஸ்ஸூக்கு தந்து வருகிறதாம். அதேசமயம், தலைமை பொறுப்பில் உள்ள அண்ணாமலையை மாற்றும் எண்ணம் இல்லை என்பதால், அவரை அனுசரித்து செல்லுங்கள் என்றும் ஓபிஎஸ்ஸுக்கு சொல்லப்பட்டுள்ளதாம். அதனால்தான், புது தெம்புடன், தன்னுடைய ஆதரவாளர்களை பலப்படுத்தும் பணியில் மாநாடுகள், கூட்டங்களை நடத்த தயாராகி ஓபிஎஸ் தயாராகி வருகிறாராம்.. இது ஓபிஎஸ் கூடாரத்துக்கு புது உற்சாகத்தையும் தந்து கொண்டிருக்கிறதாம்...!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications