பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது.. பள்ளி திறப்பு எப்போது.. கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
சென்னை: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 24-ந் தேதியுடன் தேர்வு முடிவடைய இருப்பதால், அவர்களுக்கு 25-ஆம் தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட இருக்கிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது தொடங்கும் என்பது குறித்தும், பள்ளிகள் மீண்டும் திறப்பு எப்போது என்பது குறித்தும் பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் கூறிய தகவல்களை பார்ப்போம்.
ஏப்ரல் மாதத்தில் 17 நாட்கள் முடிந்து விட்ட நிலையில் விரைவில் கோடை விடுமுறை விடப்பட உள்ளது. தற்போதைய நிலையில் பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் நடந்து வருகிறது. தற்போது 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவடைந்ததும், கோடை விடுமுறை பள்ளிகளுக்கு எப்போது விடப்படும்? என்பது குறித்த அறிவிப்பை தொடக்கக் கல்வித் துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.

கோடை விடுமுறை
அந்த சுற்றறிக்கையில் தொடக்கக் கல்வித் துறை கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதில் 1 முதல் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த 11-ந்தேதி தேர்வு நிறைவு பெற்றதால், அவர்களுக்கு 12-ந் தேதி முதல் விடுமுறை வழங்கப்பட்டுவிட்டது.
தொடக்க பள்ளி மாணவர்கள்
4, 5-ம் வகுப்புகளுக்கு 17ஆம் தேதியுடன் (இன்று) தேர்வு முடிவடைய உள்ளது. அவர்களுக்கு 18-ஆம் தேதியில் (நாளை) இருந்து கோடை விடுமுறை தொடங்குகிறது. 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 24-ந்தேதி வரை தேர்வு நடக்க இருக்கிறது. அந்த மாணவ-மாணவிகளுக்கு 25-ந்தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட இருக்கிறது. இது மாணவர்களுக்கான அறிவிப்பு ஆகும்.
ஆசிரியர்கள் வர வேண்டும்
ஆசிரியர்களை பொறுத்தவரையில், விடைத்தாள் மதிப்பீடு மற்றும் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை போன்ற நிர்வாகப் பணிகளை கவனிக்க வேண்டியிருப்பதால், அவர்கள் 30-ந்தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும். இதுதவிர ஆண்டு இறுதித் தேர்வின் தேர்ச்சி அறிக்கைக்கு வருகிற 30-ந் தேதிக்குள் அந்தந்த வட்டாரக்கல்வி அலுவலர்களிடம் அனைத்து பள்ளிகளும் ஒப்புதல் பெற வேண்டும். ஏனெனில், மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ் எமிஸ் இணையதளத்தில் மே 1-ந்தேதி முதல் கிடைப்பதற்கு மாநில மையம் வாயிலாக வழிவகை செய்யப்பட உள்ளது" இவ்வாறு அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் 30ம் தேதி வர வேண்டும்
தமிழ்நாட்டில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ந்தேதியுடன் தேர்வு முடிவடைய இருக்கிறது. அவர்களுக்கு ஏப்ரல் 25-ந்தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட இருக்கிறது. அதேபோல், அங்கு பணிபுரியும் ஆசிரியர்களும் வருகிற ஏப்ரல் 30-ந்தேதி வரை பணிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு எப்போது? என்பது குறித்த தகவலை பள்ளிக்கல்வித் துறை பின்னர் தெரிவிக்கும் என்றும் மே மாதம் முதல் வாரத்தில் அதற்கு பதில் வரவாய்ப்பு உள்ளது என்கிறார்கள் கல்வித்துறை வட்டாரத்தில்...
ஜூனில் பள்ளிகள் திறப்பு
அதேநேரம் ஜூன் மாதம் வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்படும் என்றாலும், திறப்பு தேதி கோடை வெயிலை பொறுத்து மாறுபட வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு கடும் வெயில் காரணமாக ஜூன் 15க்கு பிறகே பள்ளிகள் திறக்கப்பட்டன. எனவே இந்த ஆண்டு எப்படி என்பது வெயிலை பொறுத்து அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications