"க்ளைமேட்" மாறுதோ.. 39 தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டி?.. 25 தாமரைகள் வேற.. இவரே சொல்லிட்டாரே.. அட
எடப்பாடி பழனிசாமி பேட்டி குறித்து பாஜகவின் நாராயண் திருப்பதி ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்
சென்னை: அமித்ஷாவின் வருகை குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன கருத்தை, பாஜகவின் நாராயண் திருப்பதி வரவேற்றுள்ளார்.. எடப்பாடி அப்படி சொன்னதில் தவறு ஒன்றும் இல்லையே என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, சென்னைக்கு வரும்போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை தாங்கள் சந்திக்க வேண்டிய அவசியமில்லை.. பாஜக ஒரு தேசியக் கட்சி, அதிமுக என்பது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி.
மோடி, அமித்ஷா கட்சி வேறு, எங்கள் கட்சி பாஜக தேசியக் கட்சி. அதிமுக, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி. 31 ஆண்டுகாலம் தமிழகத்தை சிறப்பாக ஆண்ட கட்சி அதிமுக. இரண்டு கட்சிகளும் வேறு வேறு என்று கூறியுள்ளார். இந்த பேட்டி பல்வேறு அதிர்வலைகளை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.

குஷி சந்தோஷம்
ஒருவேளை எடப்பாடி பழனிசாமி பாஜகவை எதிர்க்க துணிந்துவிட்டாரா? அப்படியானால் தனித்து போட்டியிடவும் முடிவு செய்துவிடுவார்களா? என்ற எதிர்பார்ப்பும் தொண்டர்களிடம் எழுந்துள்ளது.. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பேட்டி குறித்து தமிழக பாஜக என்ன நினைக்கிறது என்று அறிந்து கொள்ள முயற்சித்தோம்.. இதற்காக, தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், மாநில துணை தலைவருமான நாராயணன் திருப்பதியிடம் அக்கேள்விகளை முன்வைத்தோம்.. அவர் நம் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த ஸ்பெஷல் பேட்டியில் சொன்ன கருத்துக்கள் இதுதான்:

உரசல்கள்
"உரசல்கள் என்பது எதுவுமே கிடையாது.. வேணும்னே சிலபேர் கிளப்பி விடுவதுதான் இதெல்லாம்.. கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில் வருவதுதான்.. எந்த ஒரு அரசியல் கட்சியும், அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும், ஆட்சியை பிடிக்க வேண்டு என்றுதான் நினைப்பார்கள்.. அப்படித்தான் எந்த கட்சியாக இருந்தாலும் நினைக்க வேண்டும்.. எனவே, 365 நாட்களும் கூட்டணியில்தான் இருக்க வேண்டும் என்று சொல்பவர்கள், தங்களது கட்சி, பலம் வாய்ந்ததாக இல்லை என்பதை உணராதவர்கள் என்றே அர்த்தம்.. நாங்களே சொல்லிட்டோம், "வரப்போகும் தேர்தலில், 25 இடஙகளில் வெற்றி பெறுவோம், தமிழகத்தில் 2026-ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம்" என சொல்லி வருகிறோம்.

தாமரைகள்
அதற்காக, அதிமுக கூட்டணியை வேண்டாம் என்று பாஜக சொல்லிவிட்டதாக அர்த்தம் கிடையாது.. கட்சியின் வளர்ச்சி பற்றி பேசுவதற்காகவும், உத்வேகம் அளிப்பதற்காகவும், அப்படி பேசுகிறோம்.. அப்படி பேசினால்தான் அது கட்சி.. அப்படி பேசாதவர்கள் வியாபாரிகள்... அமித்ஷாவை பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி சரியாகவே சொல்லி இருக்கிறார்.. அவருக்கு ஒன்றும் அமித்ஷாவை பார்க்க வேண்டிய அவசியம் இல்லையே.

25 தாமரைகள்
எடப்பாடி ஒரு கட்சியின் பொறுப்பில் இருக்கிறார்.. இன்னொரு கட்சி தலைவரை பார்க்க வேண்டிய அவசியம் இப்போது இல்லையே.. அதேசமயம், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் பிரதமரை சந்திக்க வேண்டியது என் கடமை என்றும் தெளிவாகவே சொல்லி உள்ளார்.. தனித்து போட்டி என்று செங்கோட்டையன் சொல்கிறார்.. அதுவும் சரியே.. நாங்களும் 25 எம்பி சீட்களை பெறுவோம் என்றே சொல்கிறோம்.. அப்படித்தான் எந்த கட்சியாக இருந்தாலும் சொல்ல வேண்டும்.. கம்யூனிஸ்ட்டோ, காங்கிரஸ் கட்சியோ அப்படி சொல்லாவிட்டால் அது அவர்களின் பலவீனம்.. திமுகவை சார்ந்தே இருப்பவர்கள்.. இது அவங்களுக்கும் நன்றாகவே தெரியும்..

குஷி வருகை
எங்கள் பாஜக கட்சி, ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு வட்டத்திலும், ஒவ்வொரு பூத்திலும் நாங்கள் வாக்கு பெற வேண்டும் என்றுதான் நினைப்போம்.. இதுதான் அரசியல் கட்சியின் சாதனையும், கடமையும்கூட.. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பல்வேறு பணிகளை துவங்கி உள்ளோம். எங்களை பொறுத்தவரை கிளை நிர்வாகிகளை நியமிப்பது, கிளை கமிட்டிகளை போடுவது, அமைப்பு ரீதியான பணிகள் நடந்து வருகிறது.. இளம்தலைவர் அண்ணாமலையை நோக்கி வேகமாக, ஆனந்தமாக மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.. எங்கள் பணி சிறப்பாகவே இருக்கிறது..

ஆல் தொகுதி
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் போட்டியிட தயாராகி கொண்டிருக்கிறோம்.. கூட்டணி பற்றி இப்போதே பதில் சொல்ல முடியாது.. ஏன் என்றால், தேர்தல் காலத்தில்தான் கூட்டணி பற்றி பேசுவோம்.. ஆனால், 39 தொகுதிகளில் போட்டியிட இன்றைக்கு நாங்கள் தயாராகி வருகிறோம்.. அதேபோல, இன்னொரு கட்சி குறித்து பேசுவதற்கு, எங்களுக்கு தேவையுமில்லை, அவசியமுமில்லை, நேரமுமில்லை.. எங்களை பற்றிதான் நாங்கள் யோசித்துகொண்டிருக்கிறோம்" என்றோம்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. சென்னையில் 2 நாளைக்கு விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் எச்சரிக்கை -
நைட்டு ஃபுல்லா விட்டு விளாச போகுது மழை.. மதுரை உள்பட 4 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு!












Click it and Unblock the Notifications