பூரிப்பில் பூந்தமல்லி.. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தில் திருப்புமுனை.. ரெடியாக இருங்க
சென்னை: சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தில் திருப்புமுனையான விஷயம் நடக்க போகிறது. கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 4வது வழித்தடத்தில், பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் பாதை எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் முதற்கட்டமாக விம்கோ நகர் முதல் விமான நிலையம் (தேனாம்பேட்டை வழி) வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் (கோயம்பேடு, திருமங்கலம்) இரண்டு வழித்தடங்களில் 55 கிமீ தூரத்திற்கு ஓடுகிறது. முதற்கட்ட மெட்ரோ ரயிலுக்கு சென்னை மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பல லட்சம் மக்கள் பயணிக்கிறார்கள். மாதம் ஒரு கோடிபேர் அளவிற்கு சென்னை மெட்ரோ வளர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை (மெரினா வழியாக) (45.4 கி.மீ) 3-வது வழித்தடம், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (மேடவாக்கம் வழியாக) (44.6கி.மீ.) 5-வது வழித்தடம் ஆகியவற்றில் மொத்தம் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப் பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் போரூர் முதல் பூந்தமல்லி வரை பணிகள் வேகமெடுத்துள்ளது. போரூர் முதல் பூந்தமல்லி வரையில் உள்ள வழித்தடத்தில் குமணஞ்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன் தாங்கல் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோரயிலுக்கான தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
பூந்தமல்லி பைபாஸ் - போரூர் இடையே மெட்ரோ ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் அடுத்த மாதத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.எனவே பணிகள் விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூர் வரை மெட்ரோ ரயில் பாதையை அடுத்த ஆண்டு டிசம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள்.
கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூர் இடையே உயர்மட்டப் பாதை பணிகள் முடிந்து ரயில்கள் ஓடும் போது, வடபழனி வரையிலும் மெட்ரோ ரயில் சேவையை விரைவாக நீட்டிக்கவும் திட்டமிட்டுளளார்கள்.
இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணிகளை வரும் 2027-ம் ஆண்டுக்குள் முடித்து முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட ரயில் வழித்தடங்களில் 2027ம் ஆண்டு அல்லது 2028ம் ஆண்டுக்குள் முழுமையாக ரயில்கள் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அனைத்து வழித்தடங்களில் மெட்ரோ ரயில் ஓடும் என்று தெரிகிறது. அப்படி ஓடும் போது சென்னையின் எந்த இடத்திற்கும் எளிதாக போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க முடியும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications