"கலைச்சிடுவேன்".. துரைசாமி, உடம்பு சரியில்லயா?.. ஜெ.பாணியில் அதே சவுக்கை எடுக்கும் ஸ்டாலின்.. செம்ம!
ஜெயலலிதா பாணியில் கவுன்சிலர்களை அடக்க முயல்கிறாராம் ஸ்டாலின்
சென்னை: கவுன்சிலர்களின் அட்டகாசம் அதிகரித்தபடி இருப்பதாக முதல்வர் ஸ்டாலினுக்கு தகவல்கள் சென்று கொண்டேயிருக்கும் நிலையில், ஜெ.பாணியில் விரைவில் சவுக்கை ஸ்டாலின் எடுப்பார் என்கிறார்கள்.. இந்த விஷயம் தெரிந்துதான் திமுக கவுன்சிலர்கள் பீதியில் உள்ளார்களாம்.
திமுகவும் சரி, அதிமுகவும் சரி, எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் உள்ளாட்சியில் பெண் கவுன்சிலர்களின் செயல்பாடுகள் அவர்களது கணவரோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இருப்பதாக நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இதற்கு இந்த இரு கட்சிகளுமே விலக்கல்ல.. தற்போது திமுக ஆட்சியில் இது மீண்டும் வெளிவந்துள்ளது.. 10 வருடம் ஆட்சி இல்லாமல் திமுக அரியணை ஏறியுள்ளதால், இது சற்று அதிகமாகவும் காணப்படுகிறது.

கனிமொழி
இப்படியெல்லாம் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், முதல்வர் ஸ்டாலினும், எம்பி கனிமொழியும் புதிதாக பதிவியேற்ற பெண் கவுன்சிலர்கள், மேயர்களுக்கு அறிவுரை தந்திருந்தனர்.. எனினும், சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்துவிட்டன.. வழக்கம்போல் எதிர்க்கட்சிகளும் இதை விமர்சிக்கவும் துவங்கிவிட்டன.. இத்தகைய விமர்சனங்களும், கேள்விகளும் திமுக அரசுக்கு மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றன.. எனவேதான் ஜெ.பாணியில் கவுன்சிலர்கள் விஷயத்தில் முதல்வர் ஸ்டாலினும் அதே முயற்சியில் இறங்க போகிறாராம்..

பிளாஷ்பேக்
அப்படியானால் அன்று ஜெ. என்ன செய்தார்? ஒரு குட்டி பிளாஷ்பேக்தான் இது: அதிமுகவின் 2011-2016 ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சென்னை மேயராக இருந்தவர் சைதை துரைசாமி. மேயர் என்கிற வகையில் தினமும் மாலையில் போயஸ்கார்டனுக்கு ரிப்போர்ட் அனுப்பி வைக்க ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி அனுப்பி வைக்கப்பட்டது.

சைதை துரைசாமி
வாரத்திற்கு ஒருமுறை மேயரை அழைத்து விசாரிப்பார் ஜெயலலிதா. அந்த சந்திப்பில், மாநகராட்சியில் செய்து முடிக்க வேண்டிய சில காரியங்களை அவரிடம் தெரிவிப்பார். ஒருமுறை முக்கியம் விஷயம் ஒன்றைச் சொல்வதற்காக சைதை துரைசாமியை கார்டனுக்கு வரவழைத்திருந்தார் ஜெயலலிதா. அதன்படி ஜெயலலிதாவை சைதை துரைசாமி சந்தித்தபோது, மிகவும் சோர்வாக இருந்தார் துரைசாமி. அதனை கவனித்த ஜெயலலிதா "உடல்நிலை சரியில்லையா? பணிச்சுமை அதிகமாக இருக்கிறதா?" என்று விசாரித்துள்ளார்.

கவுன்சிலர்கள் தொல்லை
"அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா. எவ்வளவு பணிச் சுமையாக இருந்தாலும் சமாளித்து விடுவேன் அம்மா. ஆனா, கவுன்சிலர்களின் தொல்லைதான் என்னால் சமாளிக்க முடியவில்லை. நல்லா தூங்கி பல நாட்கள் ஆய்டுச்சு. காரில் தான் தூங்குகிறேன். கவுன்சிலர்கள் என்னை பணி செய்ய விட மாட்டேன்கிறார்கள். அவர்கள் பண்ற அட்ராசிட்டியால் மக்களிடமிருந்து வரும் ஃபோன்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லையம்மா" என்று சொல்லியிருக்கிறார்.

துரைசாமி புலம்பல்
"சரி நீங்க போங்கள், நான் பார்த்துக்கிறேன்" என்ற ஜெயலலிதா, போயஸ் கார்டனில் இருந்து மாநகராட்சிக்கு சைதை துரைசாமி செல்வதற்குள், சென்னை கவுன்சிலர்களுடன் ஜெயலலிதா ஆலோசிக்கிறார் என்ற தகவல் ப்ளாஷ் செய்தியாக பரவியது.. அதன்படி, சென்னையில் உள்ள அதிமுக கவுன்சிலர்கள் கூட்டம் தி.நகரில் உள்ள தியாகராய அரங்கத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஜெயலலிதா, ஒவ்வொரு கவுன்சிலர்களையும் பற்றிய அனைத்து தகவல்களையும் வைத்துகொண்டு பேசினார்.

விபச்சார தொழில்
யார் யார் மாமூல் வாங்குவது, யார் யார் மக்களை மிரட்டுவது, யார் யார் விபச்சார தொழில் நடத்துவது என ஆரம்பித்து கவுன்சிலர்களின் சொத்து விபரங்களையெல்லாம் சொல்லி கடுமையாக எச்சரித்தார். "இதுதான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கை! திருந்தவில்லை என்றால், மாநகராட்சியை கலைச்சிடுவேன், நீங்களெல்லாம் ஜெயிலுக்கு போக வேண்டும்" என்று கர்ஜித்தார் ஜெயலலிதா. அதன்பிறகு வாலை சுருட்டிக் கொண்டு தங்கள் பகுதியில் உள்ள மக்கள் பிரச்சனைகளை மட்டுமே கவனித்தனர் அதிமுக கவுன்சிலர்கள்.
Recommended Video

அட்ராசிட்டி
அதேபோல இன்றைக்கு சென்னை திமுக கவுன்சிலர்களின் அட்ராசிட்டி எல்லை மீறிப்போய்க்கொண்டிருக்கிறது. மக்கள் ரொம்பவும் நொந்து போயிருக்கிறார்கள். இதனை அறிந்துள்ள முதல்வர் ஸ்டாலின், சட்டமன்ற கூட்டம் முடிந்ததும் ஜெ.பாணியில் கவுன்சிலர்களின் கூட்டத்தைப் போட்டு எச்சரிக்கை செய்வார் என்றும், எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும் உளவுத்துறையினர் தெரிவிக்கிறார்களாம்..!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications