கத்திரிக்காய் முத்திடுச்சே.. சான்ஸ் கிடைத்தும்.. அமமுக யாருடன் கூட்டணி.. டிடிவி தினகரனே சொல்லிட்டாரு
திமுகவுக்கு எதிரான கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும் என தினகரன் சொல்லி உள்ளார்
சென்னை: டிசம்பர் மாத கடைசியில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்... பிரதம வேட்பாளர் யார் என்று சொல்லுகின்ற கூட்டணி அமைக்கப்படும் என்று டிடிவி தினகரன் உறுதி தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை பொறுத்தவரை, கடந்த முறையில் இருந்தே அதிமுகவுடன் கூட்டணி என்பதில் விருப்பம் காட்டி வருகிறார்..
எடப்பாடி பழனிசாமியின் பெயரை சொல்லவில்லையே தவிர, அவரது எல்லா பேச்சுமே, அதிமுகவுடனான நல்லுறவை பேணுவதிலும், கூட்டணி வைப்பதிலுமே உள்ளது..

காய் நகர்த்தல்
ஒருபக்கம் திமுகவை எதிர்கொள்ளவும், மறுபக்கம் மேலிடத்தை கூல் செய்வதற்காகவும் இந்த காய்நகர்த்தலை அவர் மேற்கொண்டாலும், எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தில் கறார்தன்மையை தொடர்ந்து காட்டி வருகிறார்.. ஒரு சதவீதம்கூட தினகரனுக்கு கட்சியில் இடமில்லை என்று எடப்பாடி சொன்னற்கு காரணமே, டிடிவி தினகரனின் அவசரகதி பேட்டிகள்தான் என்கிறார்கள்.. எடப்பாடியின் மெகா கூட்டணியில் சேர போவதாக, தினகரன் அறிவித்திருக்க கூடாது, அப்படி சொன்னது, அமமுகவின் பலவீனத்தையே காட்டிவிட்டது என அரசியல் நோக்கர்கள் கருத்து சொல்கிறார்கள்.

சின்னம் போச்சே
அதுமட்டுமல்ல தனித்து போட்டி என்கிறார், பிறகு திடீரெனு கூட்டணி வைப்போம் என்கிறார், பிறகு, காங்கிரசுடன் அல்லது பாஜகவுடன் கூட்டணி வைப்போம் என 2 கட்சிகளையுமே சேர்த்து சொல்கிறார்.. இதுவும் அமமுக தரப்பிலேயே சில அதிருப்திகளை கிளப்பிவிட்டு வருவதாக சொல்கிறார்கள்.. இந்நிலையில், திருக்கடையூரில் செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் இன்னொரு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியிலும், திமுகவை எந்த அளவுக்கு விமர்சித்துள்ளாரோ, அதே அளவுக்கு எடப்பாடியையும் விமர்சித்துள்ளார்.. பேட்டியில் அவர் சொன்னதாவது:

முகாந்திரம்
அதிமுக செயல்படாத நிலையில் இருக்கிறது.. எடப்பாடி பழனிச்சாமி செய்த தவறால், சின்னமும் இல்லாமல், கட்சியும் இல்லாமல் கோர்ட்டில் போராட்டம் நடத்தி வருகிறார்... அதிமுக பற்றி பேசுவதே தேவையில்லாதது.. தேர்தல் சமயத்தில் பேசி கொள்ளலாம்... சசிகலா வழக்கு கோர்ட்டில் உள்ளதால் அது பற்றி எனக்கு தெரியாது. டிசம்பர் மாத கடைசியில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்... பிரதம வேட்பாளர் யார் என்று சொல்லுகின்ற கூட்டணி அமைக்கப்படும்... திமுக ஒன்றரை ஆண்டு ஆட்சியில் மக்களிடம் வருத்தத்தை மட்டுமே சந்தித்துள்ளது...

சான்ஸ்
ஆனாலும், அதை சரி செய்து கொள்ளவில்லையென்றால் மோசமான நிலையை அவர்கள் சந்திப்பார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தும் கூட்டணியில் அமமுக இருக்கும்.. மழை வெள்ள பாதிப்பால் நிவாரணம் கிடைக்காமல் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது, திமுக விடியல் ஆட்சியின் அவலங்கள், மக்களை ஏமாற்றும் ஆட்சியாக தமிழக அரசு உள்ளது... அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக்கல்லூரி கட்டியதில் ஊழல் இருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாக தமிழக அரசு சொல்லி உள்ளது..

கத்தரிக்காய்
அதிமுக ஆட்சியில் பல துறைகளில் முறைகேடு நடைபெற்றதால்தான், திமுகவிற்கு மக்கள் சான்ஸ் தந்தார்கள்.. ஆனால், எந்த ஊழலாக இருந்தாலும் கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்து தானே தீர வேண்டும்.. திமுக அமைச்சர்களுக்குள்ளேயே சண்டை உள்ளது.. முதல்வர் ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறியாக உள்ளதால்தான் அமைச்சர்களிடையே இப்படி சண்டை ஏற்படுகிறது... இதுவும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஒரு உதாரணம்தான்" என்றார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications